சோழநாட்டுகவிஞர்
காதல் சிபாரிசு கவிதைகள்
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
December 18, 2023
ஓய் என் அன்பு மனைவியே..!! மஞ்சள் பூசிய தளிர் உடல் மாயக்காரி உன் மூக்குத்தி முன்னழகை விழிக்காமல் பார்த்தாலும்... உன் கோவத்தில் மூக்குத்தியும் முறைத்து தான் பார்க்குதடி ஆயிரம் அன்பை நித்தமும் நீ எனக்கு பரிசளித்த போதும் ஒருமுறை உன் கோவ பார்வை பார்க்காவிட்டால் பைத்தியம் பிடிக்குதடி அடியே பொண்டாட்டி ஐ லவ் யூ டி.
தலைப்பு: காதல் கவிதை
கண்ணே கருவிழியே...! காதல் சுகம் தாராயோ பெண்ணே பெருமகளே...!! என்னை நம்பி வராயோ நீந்தி செல்லும் மீனை போல நித்தமும் என் இதயத்தில் பயணம் செய்கிறாய் ! நித்திரையை திருடிக்கொண்டு இதயத்தின் ஓரத்தில் உறங்கி கிடக்கிறாய்..! பாசம் என்றால் நீதான் பரிசம் என்றால் நீதான் பார்வையில் படகு ஓட்டும் பைந்தமிழும் நீ தான்.! அன்னக்கிளியே அழகு ரதியே செப்பேட்டில் பதிவிறக்கி பூமி பந்தில் பிறந்தவளே..! மீசையோர முடி யாவும் ஈட்டியாய் மாறிப்போனதே பொன்னியின் வாசம் பட்டு..! நறுமணம் வீசுவது தென்றல் என்று கூறி வந்தேன் ஆனால் தென்றலுக்கே நறுமணத்தை கொடை அளித்தவள் நீ தானே. பரவசம் மூட்டும் பாதகி காதல் சுகம் தாருவாயா தயக்கம் ஈன்றி.
தலைப்பு: காதல்
காதல் உரையாடல் செய்ய காத்து இருக்கிறேன்..! உன் கைவிரல் தீண்டி வெப்பம் மூட்டி நித்தம் மூச்சுவிட தவிக்குதடி மனசு...! மஞ்சள் பூசிய வெளீர் மஞ்சள் தேகக்காரி உன் பட்டொளி போதுமடி இந்த பிரபஞ்சத்தில் நான் வசிக்க...!! ஆயிரம் அழகை கொண்ட கருப்பழகி நீயடி..!! மெல்லினம் இடையினம் சொல்லினம் கொண்டவளே..! இந்த பிரபஞ்சத்தில் என் பொக்கிஷம் நீ தானே.
தலைப்பு: காதல்
Conclusion:
காதல் கவிதைகள் என்றாலே இனிப்பு தான்.
@Writing Siva✍️💕💕💕💕

எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: