சமூக கவிதைகள்

முன்னுரை:

தமிழ் மொழியின்

தனி சிறப்பு " கவிதைகள்" தான்.


கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன?


கவிதையை மீது காதல் கொண்டு 

சோழநாட்டு கவிஞர் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம்.

சமூக கவிதைகள் :

உதாசீனம் செய்யாமல் உறவாடுவோம்


பலரும்
பொதுவாக
தெரிந்தோ தெரியாமலோ
சில விடயங்களை
பகுப்பாய்வு செய்ய
மறந்து போகிறோம்
இந்த 
உலகத்தில்
உன்னதமான
உயர்ந்த மாண்புகளை
கொண்ட உயர்தர உறவுகள்
நம்மோடு நடமாடும் போது
அவர்களை
நாம் நேசிக்கவும்
அரவணைப்பில் மகிழவும்
மறந்து போகிறோம்
எல்லாம்
ஏதோ தேடி ஓடுகிறோம்
சற்று நிதானமாக
நின்று யோசியுங்கள்
உன்மையான உறவுகள்
கிடைப்பது
வாழ்க்கையில்
மிகவும் கடினமான ஒன்று
எனவே
இருக்கும் உறவுகளை
உதாசீனம்
செய்யாமல்
உறவாடுவோம்
உயிர் உள்ளவரை
இந்த உலகில்.

உறவுகள் தந்த பரிசு

ஆயிரம் உறவுகள்
இருந்தும் ஒருவன்
தனிமையை விரும்புகிறான்
இந்த உறவுகள்
தந்த பரிசு தான் 
அவன் தனிமையா
காரணங்கள்
கூற முடியாது
கவலைகள் தீர்க்க முடியாத
ரகசியங்கள் நிறைந்து
மனிதன் வாழ்வு

நான் இருக்கிறேன்
என்று சொல்லும் உறவுகள் தான்
நாம் சம்பாதித்த முதல் 
சொத்து ..
காசு பணம் வரும் போகும்
அன்பான உறவுகள்
நம்மை சுற்றி அமைவது
தனி சிறப்பு வாழ்க்கையில்.

மேடு பள்ளங்கள்
நிறைந்த புவியியல் அமைப்பில்
வாழ்க்கை மட்டும்
எப்படி சமமாக இருக்கும்

ரோசம் வரும் போது மட்டுமே
நான் என் வருமையை உணர்கிறேன்

வாய்க்கால்
அழகாய் நீரை உறிஞ்சி
அதன் வரப்போரம் சேமித்து 
புற்களின் வாழ்வில் 
வசந்தம் ஏற்றுகிறது
பசுமையாக செடிகளும் கொடிகளும்
வளர்ந்து வரும்
இந்த அழகியல் சித்திரம்
காவேரி நதிக்கரையில்
அழகாய் நிகழும்
ஆடி மாதத்தில்.

ஏறு பூட்டிய
கிழவனும் இறந்து போனான்
மாடும் மரபும்
மறந்து போனது
வாழ்க்கையில் நீ 
அறிந்த விடயங்களை
அழகான முறையில்
அடுத்த தலைமுறைக்கு கடத்து
மாசு இல்லாத
வாழ்க்கையை வாஞ்சையோடு
நமது அடுத்த தலைமுறையும்
வாழட்டும்.

நெற்றியில் திருநீறு அணிந்து
நீ உத்தமன் என்று உலகத்துக்கு பறைசாற்றும் பழக்கத்தை விட்டு விடு
உன் வீட்டின் முகப்பில்
பிச்சை எடுக்கும் நிலையில் இருப்பவர்கள்
உன்னை விட உத்தமர்கள் தான்
அவர்கள் வாழ்வில்
ஏதும் உதவிகள் உன்னால் செய்ய முடிந்தால்
நீயே இந்த பிரபஞ்சத்தின்
உத்தமன்.

ஆயிரம்
கனவுகளுடன் கவலைகளுடன்
தான் ஒவ்வொரு மனிதனும் ஓடுகிறான்
வாழ்க்கையில்
உன் விருப்பு வெறுப்பை
ஒருபோதும் அவர்களிடம்
காட்டாதே.

பாவம்
நீ பார்க்க வேண்டாம்
பவ்வியமும்
நீ காட்ட வேண்டாம்
உனக்குள் நீ நீயாக இரு
அதுவே போதும் 
நீ மனிதநேயம் உள்ள மனிதன் என்று.

கொடுமையான
தண்டனை
மனைவி இருந்தும் 
மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது .

காகங்கள்
கூட்டமாக வாழும் அழகை கண்டதும்
அடிவயிற்றில்
நெருப்பு குமிழ்கள்
நான் இழந்ததை
காகங்கள் வாழ்கிறது .

நெருங்கிய உறவுகள் கூட
ஒரு யுகம் பேசாமல் இருப்பது
ஏன் என்று தெரியவில்லை

காரணம் இல்லாமல் காதலித்து 
காரணங்கள் கூறி பிரிவது தான் காதலா?

உன் முகம்

சங்கடங்கள்
நிறைய கிடக்கிறது மனதுக்குள்
இருந்தாலும்
உன் முகம் கண்ட போது
இன்பத்தை என் இதயம் 
சுவைத்தது.

யாருக்கும்
நிகழ கூடாத உணர்வுகளின் வலிகள்
இருசக்கர வாகன பயணம்
இறுதியில் மரணம்

ஆயிரம்
கனவுகளோடு பயணம்
துவங்குகிறது 
ஒவ்வொரு ஜீவனுக்கும்
இந்த உலகத்தில்
சிலருக்கு இனிப்பு
சிலருக்கு துவர்ப்பு

எல்லாம்
தெரிந்தோ தெரியாமலோ
நடந்து கொண்டே இருக்கிறது
நாமும் அதோடு
சேர்ந்து வாழ்வோம்

End : கவிதைகளை படியுங்கள்


@Write Siva


எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.


உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.


கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.


எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.


உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.


உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.


நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


 chozhanattukavingar@gmail.com


அடுத்த பதிவில்

உங்களுக்கு இன்பம் மூட்டும்

இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்


நன்றி வணக்கம்.




No comments:

Powered by Blogger.