மூன்றாம் நாள் முத்தமிடும் பூனை

Tamil love Quotes - Home

சோழநாட்டுகவிஞர்

மூன்று நாள் முத்தமிடும் பூனை கவிதை

Introduction:

இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது

Admin_Siva
December 1, 2023

பேசி பேசியே காதல் செய்தவள் ஏனோ இப்போது எல்லாம் மெளனமாக இருந்து என்னை மரணிக்க செய்கிறாள் அன்பும் பாசமும் சமபங்கு பகிர்ந்தால் காசு பணம் முக்கியம் இல்லை காதலில் மட்டும். அவள் பேசிய தருணம் எல்லாம் வானம் கருவுற்று தன் சிசுவை மழைத்துளியாக மண்னில் தூவியது துளித்துளியாக அங்கும் இங்கும் ஓடிய மழைத்துளி அவள் முகத்தையும் முத்தம்மிட்டு சென்றது சாரல் காற்றில் அவள் சேலையோரம் உறைவிடம் கேட்டது அவளும் தாய் தானே சட்டென்று அணைத்துக்கொண்டாள் ஈரம் சொட்ட சொட்ட அவள் நனைந்து என் இதயத்தையும் இனிக்க வைத்தாள் சாரல் மழையோடு அவள் இதழ் மழையும் பொழிந்தாள் பேசிய தருணம் முடிவுற்றது துள்ளல் துதும்ப காதல் விளையாட்டு ஆரம்பம் ஆனது இயற்கை ஒருபுறம் பரிசு அளிக்க இனியவள் ஒருபுறம் பரிசு அளிக்க ஒரு இன்ச் அளவு பிசராமல் இயற்கையோடு இனிய பயணம் இந்த வாழ்வில் பிறப்பின் மகிமையை என்னவள் மடிசாய்ந்து ரசிக்கிறேன்.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

அவள் அழகை கண்டதும் ஆகாயம் கூட தீப்பிடிக்கும் அவள் தேகம் பாலில் கலந்த பழுப்பு நிறம் அவள் முகம் மஞ்சள் கலந்த சிவப்பு நிறம் அவள் பொட்டு குங்குமம் கலந்த மஞ்சை நிறம் அவள் கண்கள் காந்தம் கலந்த வெண்மை நிறம் அவள் மூக்கு கண்ணாடி கலந்த கருப்பு நிறம் அவள் புருவம் பரவசம் கலந்த கருமை நிறம் அவள் இதழ்கள் இனிப்பு கலந்த தேனின் நிறம் இப்படி எத்தனையோ நிறங்களை கொண்டு பிரம்மன் கலந்த சிற்பம் தான் அவள் ....
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

அவள் அழகையும் அவள் நளினமும் அவள் சிரிப்பும் அவள் அணைப்பும் அவள் தித்திப்பும் அவள் பாசமும் அவள் கோவமும் அவள் பரிதவிப்பும் அவள் பணிவும் அவள் அசைவும் யோவ் பிரம்மா எனக்கு இருபிறவி கொடு இவள் முழு அழகையும் ஆசைத்தீர ரசித்துவிட்டு வருகிறேன். காதல் உணர்வுகள் எனக்கும் பிறக்கும் என்பதை உன்னை கண்டதும் உணர்ந்தேன் என் காதல் இளவரசியே. மூன்றாம் நாள் முத்தமிடும் பூனை மெதுவாய் மதில் ஓரம் நகர்ந்தது
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.