ஹைக்கூ கவிதைகள்

ஹைக்கூ கவிதைகள் :


Special Line for you.

யாரும்
இல்லாத பொழுதுகள்
என்னை நான் 
அறியும் அழகியல்
ஓவியம்


தொடரும்
புன்னகையை
நீ ஒருபோதும்
தொலைக்காதே
அழகியல்
உன் புன்னகையில்
புதையுண்டு கிடக்கும்

வருவது
போவது வாழ்வில் இயல்பு
சிறிது
நேரம் உன்னோடு உறவாடுவது
எதிலும் சிறப்பு.

கடிகாரங்கள்
ஒருபோதும் பயணிக்க வருந்துவது இல்லை
அதனால் தான் என்னவோ
நாம் அனைவரும்
அதையே கண்விழிக்க
பார்க்கிறோம்


அவள் 
தானே பேசுகிறாள் என்று
அமைதியாக இருந்துவிட்டேன்
அதையே அவள்
எனது இயல்பு என்று நினைத்து
இன்றும்
வாய்க்கு வந்ததை பேசுகிறாள்

ரகசியம்
நான் மட்டுமே
காக்க வேண்டுமாம்
ஆனால்
அவள் 
என் மானத்தை வாங்க
சிறிதும் தயங்க மாட்டலாம்

ஓடும் 
நதி நீரை குடிப்பது
வாழ்க்கையில் சுகம்
எவன் 
இயற்கையின் அழகை
சிதைக்காமல்
வாழ்கிறான்

அவள் 
யார் என்று தெரியாதா போது
அவள் 
இனிக்கும் பாயசம் தான்
அவள் 
என் மனைவி ஆனபிறகு தான் 
தெரிந்தது
அவள் 
ஒரு கசக்கும் பாயசம் என்று.

மேகங்கள்
அழகாய் கலைந்து செல்வது 
ஆயிரம் ஓவியர்கள்
ஒன்றாய் வரைந்த காவியம் போல் உள்ளது
நகரும் மேகங்கள்


முறைத்து
பார்த்தவளுக்கு
முழு இரவு கச்சேரி
ஆடலும் பாடலும்


படகு
சவாரி
அவள்
நான்
துடுப்பு
அயராத
ஆறுதல் பேச்சு
கடல்
அலை
வெட்கத்தில் மறைய
காம முத்தம்
சில
முனுகள்
விடியாத
வானத்தை தொடும்
பாச்சல்.

மலர்ந்த
பூவிதழில்
மறையாத
ஓவியம்
என்னவள்
புன்னகை

அவளின்
மாதவிடாய் காலத்தில்
மானுட வியல்
அந்தரங்கம்
அறிந்தேன்
இப்பூமியில்
மகத்தான
மலர்
பெண்

நறுமணம் வீசும்
அவள் கூந்தல் நடுவே
முகம் பதித்து
முத்தமிட வேண்டும்

கையடக்க
தொலைபேசி
நான் கொடுத்த
முத்தத்தை மூடி வைத்து
அவளிடம் சேர்த்தது 
பத்திரமாக.

தோகை
விரித்து ஆடும்
மயிலை பாரடி
கொள்ளை அழகை
பிரம்மன்
ஒழித்து வைத்து
படைத்து இருக்கிறான்
மயிலுக்கு.

எல்லாம்
முடிந்து போய்விட்டது
தனிமையில்
நினைவுகள்
மட்டுமே
அவள் அழகிய
காதலை கூர்த்தீட்டி
கொண்டு இருக்கிறது

ஆயிரம்
வலிகளை
கடந்து வந்தவன்
நீ தரும் 
வலிகளையும்
சுமக்கிறேன்


எனக்கான
சொந்தம் நீயடி
எனக்கான 
பந்தம் நீயடி
எனக்கான 
உறவும் நீயடி
எனக்கான
இன்பம் நீயடி
உந்தன் வார்த்தையால்
என் மனதில் பட்டாம்பூச்சி பறக்கும்
உந்தன் பார்வையால்
என் உடம்பில் உஷ்ணம் தணியும்
பலரும்
கண்டிராத காவியம்
உன்னுள் நான் கண்டேன்
கண்மணியே
காதலியே
இந்தப் பிரபஞ்சத்தில்
ஏதும் இல்லாமல்
என்னால் வாழ்ந்து விட முடியும் என்று நினைத்து இருந்தேன்
உன்னை கண்டதும்
என் சித்தம் கலைந்தது
நீ இல்லாமல்
நான் இல்லை என்று
உணர்ந்து கொண்டேன்.


இரவுகளில்
என் மனது சஞ்சலத்தில்
தழும்பும்..
நீ இல்லாமல்
எப்படி இரவுகள் இனிக்கும்


கருவறையில்
கண்விழித்து
பிரபஞ்சத்தின் தோற்றம் பார்க்கும் போது
நான் அடையாத ஆனந்தம்
உன்னை அந்த பிரபஞ்சத்தில்
பார்த்ததும் அடைந்தேன்
நான் கண்ட
காதல் தேவதை நீ

மெளனம்
உன்னிடம் மட்டுமே
அழகு பெறுகிறது
என் உயிரே..

நீ சிரித்தால்
முத்துக்கள் சிதறும்
நீ முறைத்தாள்
முந்தானையும் கிழியும்
ஆலமரத்தடி விழுதுகள்
கொடுக்கும் ஆனந்தத்தை
உன் அழகிய
கைவிரல் தீண்டும் போது
மகிழ்ந்தேன்.


மீசை
இல்லா கோவக்காரி
உன் முழு இதழ் 
பாதர்த்தம்
இனிக்கும் பாயசமடி


கட்டில் அறை
யுத்தம் எல்லாம் வேண்டாம்
உன் கையில்
தலை சாய்த்து படுத்துக் கொண்டால்
போதும்..
இந்த பிரபஞ்சத்தில் 
என் ஆசைகள்
அவ்வளவு தான்

நீண்ட 
உரையாடல்
கவலைகள்
சந்தோஷங்கள்
துக்கங்கள்
எல்லாம் மெல்ல
நடந்தது 
தொலை தூரத்தில் இருக்கும்
அவளோடு
அலைபேசியில்
அனைத்துப் போது.

நெருங்கி வா
என் சேலையை பிடி
மெல்ல தழுவு
மின்சாரம் பீச்சு
காதோடு சில கடி கடி
வலிக்குதுடா மெதுவா
இறுக்கி அணைத்து பிடி
இன்பம் ஊட்டும் கள்ளனே
உணர்வுகளை வெளிப்படுத்த
இடைவெளி கொடு
ஆயிரம் தவறுகள்
செய்து மடிவோம்
அப்போதும்
என் நெஞ்சோடு கிட
சொர்க்கம் எல்லாம்
பணத்தில் பிறப்பது இல்லை
உன் அன்பான தீண்டலில்
இருக்குடா.
வா வந்து தீண்டு.


பட்டாம்பூச்சியை 
காணும் போது எல்லாம்
கட்டழகி காதல் தான்
நெஞ்சத்தில் பறக்கிறது 

வட்டமிடும்
அழகு ரதி அவள்
முத்தமிடும்
மெழுகு சிலை அவள்
ஒய்யார அவள் 
நடையழகு
கம்பீரமாய்
கால் பதித்தது
புற்களும் மெத்தை ஆனது.

ரசிக்க 
தெரியாத பொழுதுகள்
எல்லாம்
அழகாய் வட்டம்மிட்டது
ஆடை அணிகலன்கள் தளர்த்தி
அவள் அழகை ரசித்து பார்த்த பொழுது

உன் 
இதழ்கள்
கவிபாடும் என்று நான் அறிவேன்
ஆனால்
உன் 
இமைகள்
கவிபாடும் என்று நான் அறிய
ஒரு ஆயுள் ஆனது.

மேடைகள்
யாரையும் தானாகவே ஏற்றுவது இல்லை
முயற்சி செய்து
ஏறியவர்களை மட்டும்
அழகாய் தாங்கி பிடிக்கும்
அழகான மேடை.

உன் முந்தானையில்
நான் மூழ்கி
உன் முகத்தோரம் நீச்சம் பெற விரும்புகிறேன்.

காதல்தான்
கற்பு பறிகொடுத்து
மீண்டும்
கற்பால் காதலை மீட்டி
கரம் பிடித்தேன்
உன் உயிரை.

தொட்டதும்
இனிக்கும் சுகம்
காதலில் மட்டுமே
புதையுண்டு கிடக்கிறது
பட்டும் படாமல்
கிளர்ச்சி செய்து பார்
ஆயிரம் இன்பம் 💞 காதலில் என்று
நீ அறிவாய்.

அவள்
முகம் காணவும் ஏக்கம்
ஆயினும்
அவள் மேல்
அவ்வளவு கோவம்.

பறந்து
போகும்
பறவைகளை
காணும் போது எல்லாம்
என் இருண்டு போன
வாழ்க்கை தான்
நினைவுக்குள் வருகிறது
ஏன் தெரியுமா
என்னவளும்
இப்படி தான் என்னை விட்டு
பறந்து போனால் .

அனைத்து
கவிதையிலும்
ஆக்கிரமிப்பு செய்யும் 
அடங்காபிடாரி
நீ பிரம்மனின்
ஸ்பெஷல் படைப்போ

கலியுகம்
கலை நயத்துடன்
இயக்குவது யாரால் தெரியுமா..
பார்க்கடல்
பேரழகி உன்னால் தான்

தவிக்கும் போது
தண்ணீர் தரதாவன் 
தாகம் தீர்க்கும்
தாய்யுள்ளம் கொண்ட
உத்தமனாம்
போங்கடா நீங்களும் உங்கள்.......

அது எப்படி
நீ மட்டும் இவ்வளவு அழகு
வெள்ளை காகிதம் எல்லாம்
கொள்ளையடிக்கும் கொழு கொழு
மெழுகு சிலையே
உன் உருகிய
பாதர்த்தம் நான் விரும்பி உண்ணும்
தேன் அமிர்தம்

மறுமணம்
எல்லாம் வேண்டாம்
உன் ஒரு மனம்
போதும் நான் உயிர் வாழ

உவமைகள்
அழகு என்று அறிந்தவன்
எழுத்தாளன்
எவனும் அறியாத
உன் ஆழ்கடல் சுகம்
அறிந்தவன் 
இந்த கவிஞன்

காற்றே
சற்று பொறுமையாக வீசு
முதிர்ந்த சறுகுகள்
பெறும் பிரிவை சந்திக்க நேரிடும்
உன் வேகத்தால்

ஆலயத்தின்
உள்ளே அழகாய் சிற்பங்கள்
கண்கள் விரிய
அண்ணாந்து பார்த்து வந்தேன்

சட்டென்று ஒரு குரல்
தேர் வருகிறது வழி விடுங்கள் என்று
திரும்பி பார்த்தேன்
மயங்கி போனேன்
பெண் என்னும்
புதுமை சிற்பம்
நடமாடும் சிலையாய் 
மெல்ல நகர்ந்து வந்தது

அழகிய சிற்பங்கள்
ஆலயத்தில் மட்டும் இல்லை
நம் அருகிலும் இருக்கிறது
நகர்ந்து வந்த தேர்
என் நிகழ்கால காதலி
வருங்கால மனைவி
உங்கள் அருகிலும்
உற்று பாருங்கள்
நடமாடும் சிற்பங்கள்
உங்களுக்கும் கிடைக்கலாம்

ஏன் காதலித்தேன் 
என்று இன்றும்
ஆராய்ந்து பார்த்தேன்
விடை அறிய முடியவில்லை
விடை அறிய முடியாதது தான் காதலா?

புள்ளி வைத்து
கோலம் போட முடியாத சிலந்தி
வட்டம்மிட்டு வர்ணம் தீட்டியது
ஊஞ்சல் உற்சவம்
சற்று நேரத்தில் மையத்தில்
மகிழ்ச்சியில் சிலந்தி.

ரோசாப்பூ
அவள் முகம்
தாமரைப்பூ
அவள் கண்கள்
மல்லிப்பூ
அவள் பார்வை
கள்ளிப்பூ
அவள் காதல்
ஒவ்வொரு முறை முயற்சித்தும்
அவளை என்னோடு அணைக்க முடியவில்லை

நித்தமும்
நித்திரையில் வருகிறாள்
மயக்கத்தை தருகிறாள்
மறு வினாடி
மறைகிறாள்.

End . Life is beautiful mementos 

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.


உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.


கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.


எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.


உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.


உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.


நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


 chozhanattukavingar@gmail.com



அடுத்த பதிவில்

உங்களுக்கு இன்பம் மூட்டும்

இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்


நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.