காதல் கவிதைகள்

Tamil love Quotes - Home

சோழநாட்டுகவிஞர்

காதல் கவிதை

Introduction:

இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது

Admin_Siva
October 27, 2023

ஆடைகள் இன்றி தவிக்கும் என் காதல் வரிகளுக்கு நீயே ஒப்பனை ஆடையாக எப்பவும் இருக்கிறாய் என் காதலியே.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: ஆடை கவிதை

காகித கடிதங்கள் பேசிக்கொண்டு காற்றில் பறந்தது இப்பிரபஞ்சத்தின் பேரழகி நீயென்று.
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: பேரழகி கவிதை

அடி அள்ளிக்கொடியே அரச நாட்டு வெள்ளிக்கொடியே ஆயிரம் அழகை நீ மறைத்து வைத்து என் கண்ணுக்கு விருந்து அளிக்க மறுக்கிறாய்... ஆயிரம் அழகை கொண்டவளே நான் ஒன்று சொல்வேன் உன் தேகம் தீண்டிய காரணத்தால் உன் மூக்குத்தி இப்பிரபஞ்சத்தின் பேரழகை பெற்றதடி நானும் பேரழகன் ஆக வேண்டும் எப்போது நீ என்னை தீண்டுவாய்
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: தீண்டல் கவிதை

அடி முத்து சிரிப்பழகி முனுமுனுக்கும் இடையழகி செந்தூரம் மணமணக்க நீ தென்றலை அழைத்துக்கொண்டு போறது எங்க...
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

கம்மா கரையோரம் கால் கடுக்க நடக்கையிலே சில்லுனு ஈரக்காத்து என்னை இறுக்கி பிடிக்கையிலே உன் தாவணி வாசம் வீசுதடி
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: தாவணி கவிதை

மலறாத பூவே மலர்ந்து மணம் வீசையல இதுவரை மயங்காத நானும் இம்முறை மயங்கி தான் போனேனடி
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: காதல் கவிதை

கண்ணாடி முகப்பு பக்கம் முறைத்து என்ன பார்த்தவளே உன் மூக்குத்தி மட்டும் என்னை பார்த்து பூப்பது ஏனடி
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: கண்ணாடி கவிதை

அவள் முகம் மட்டும் ஏன் எனக்குள் ஆயிரம் உணர்வுகளை பரிசு அளிக்கிறது பிரம்மா 🤔 தங்கம் கூட தோற்று போகும் அவள் பார்வைகள் அதன்மேல் படாமல் போனால் ஏன் இவ்வளவு அழகாய் அவளை படைத்தாய் பிரம்மா 🤔
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: பிரம்மா கவிதை

அவள் பேசும் போது மட்டுமே நான் பார்வையாளன் ஆகிறேன்💓 ஏன் தெரியுமா?🤔 💃அவள் அழகை என் கருவிழியால் கைதுசெய்து இதயத்தில் பொத்தி வைக்க 💞 அவள் இப்பிரபஞ்சத்தின் 🌍 பேரழகி. 😍
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: பேரழகி கவிதை

அவள் என்னோடு பேசுவாள் என்று காத்து இருந்த நிமிடங்கள் எல்லாம் 💃💃 அவள் நினைவுகள் என்னோடு பேசியது .🛌
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: நினைவு கவிதை

எழுத படிக்க தெரியாத ஒவ்வொரு தாய் தந்தையும் தன் வாழ்நாள் கனவாக தன் பிள்ளைகளை படிக்க வைக்கவே உழைக்கிறார்கள்😒 அந்த பிள்ளைகளுக்கு தான் தாய் தந்தை அருமை தெரியவில்லை இவர்கள் வளர்ந்து பிறகு அவர்கள் முதியோர் இல்லத்தில் இவர்கள் மனைவியோடு இல்லத்தில். காலக்கொடுமை 😥
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: முதியோர் இல்லம் கவிதை

உன்னோடு 💗 மட்டும் 💘 பேசி பேசி உறவாட துடிக்கிறது ❣️ என் இதயம் 💓💓💓💓
- சோழநாட்டு கவிஞர்

தலைப்பு: இதயம் கவிதை

Conclusion:
காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.

@Writing Siva✍️💕💕💕💕

Logo

எழுத்து சிவா✍️

WhatsApp Chat

Submit Your Favorite Quote

உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.

அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்

நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.