கணவன் மனைவி கவிதைகள்

கணவன் மனைவி கவிதைகள் 

திருமண
பந்தத்தில் இணைந்த உறவுகள் பற்றிய
குறுந்தகவல்

ஏதோ
ஒரு கனவோடு கைபிடித்து
கட்டில் அறையில்
தன்னுடைய உடலை கணவனுக்கு பரிசு அளித்து 
மாமியார் மருமகள்
சண்டைகளை சலித்து கொண்டு
தன் குடும்ப சுமைகளை
தன் தலையில் ஏற்றி
வாழ்க்கை நடத்துகிறாள்
பெண்

ஆயிரம்
வலிகளை
அனுதினமும்
அனுபவித்து
ஏற்றம் இறக்கம் கொண்ட
பொருளாதார சூழ்நிலையை புரிந்து கொண்டு
தன் ஆசைகளை
உதறிவிட்டு
குடும்ப உறுப்பினர்கள் மேல்
அக்கறை கொண்டு நகர்கிறது
ஒரு பெண்ணின் வாழ்க்கை..

ஆண் 
ஆத்திரம் அடைந்த அடுத்த நொடி
பெண் 
ஆறுதல் கூறி மகிழ்விக்கிறாள்
சின்னதாய்
அவள் சிரித்தபடி சமாதானம் செய்யும் காட்சி
கணவன் மனைவி உறவுகளுக்கு இடையே மட்டும் பார்க்க முடியும்
அதிசய பெண்ணே
வாழ்க நீ வளமுடன் 


அம்மு என்றாய்
அழகு என்றாய்
உலக அதிசயம் என்றாய்
உன்னை ஈர்க்கும் வசியக்காரி என்றாய்
உன் உயிர் நான் என்றாய்
நான் இல்லாமல் நீ இல்லை என்றாய் 
சுத்தி சுத்தி
காதல் செய்தாய்
சொக்கும் அளவுக்கு 
சுகம் தந்தாய்
வாடை காற்று
பிடிக்கும் என்றாய்
அதில் 
என் மூச்சு காற்றை
தேடி பிடித்து முத்தம்மிட்டதாய்
சொன்னாய்
அமிர்தம் என்றாய்
அமைதியானவள் என்றாய்
இந்த உலகத்தில்
உயிர்ந்தவள் என்றாய்
ஓராயிரம் முறை முயற்சி செய்து
முத்தங்கள் தந்தாய்
ஒரு நொடி
விலகாது என்னோடு இருப்பதாய் சொன்னாய்
நீ காட்டிய பாசத்தில் 
மயங்கி
என் கற்பை உனக்கு பரிசு அளித்தேன் 
ரசித்து ருசித்து
சிசுவை தந்தாய்
மகிழ்ச்சியில் நானும் 
கருவை சுமந்தேன்
காலங்கள் ஓடின
காயங்கள் வந்தன
ஓடும் நதியில் 
உன் சடலம் மட்டுமே 
என்னால் மீட்டெடுக்க முடிந்தது 
ஆயிரம் முறை சொல்லியும்
அடம்பிடித்து போனாயே
மஞ்சள் கயிறு கூட கழுத்தில் ஏறாமல்
மடியில் கணம் சுமக்க வைத்தாயே
இப்போது நீயும் இல்லை
நீ குடுத்த நம்பிக்கையும் இல்லை
நான் என்ன செய்ய?
பிள்ளைக்கு தந்தை யாரு என்று
கூறுவேன்.

என் ஆசை 

காதலனே
நீங்கள் தூரத்தில்
இருந்து கொண்டு
நித்தமும் என்னோடு
பேசினால் மட்டும் உங்களுக்கு போதுமா
நீங்கள் என் அருகில்
வரவேண்டாமா
நீங்கள் என் மூச்சு காற்றை
சுவாசிக்க வேண்டாமா
நீங்கள் என்னோடு 
இனைந்து பயணிக்க வேண்டாமா
எங்கோ
இருந்து கொண்டு
என்னை நித்தமும் இயக்கும் என்னவரே
சற்று சிந்தியுங்கள்
என் நிலையை
நான் இதற்கு மேல் எப்படி விளக்குவது
ஆசையாய் 
காத்து நிற்கும் பெண் நான் 
உங்கள் வருகைக்கு
காத்து நிற்கும் பெண் நான்
உங்களோடு
உறவாட காத்து நிற்கும் பெண் நான்
அலைபேசியில் மட்டும்
அலைந்து கொண்டு இருக்கிறது
நம் உறவு ..
நான் கூறுவது
உங்களுக்கு கோவமாக கூட வரலாம்
சற்று சமாதானம்
ஆகுங்கள்...
ஆண்டன் படைப்பில்
நீங்கள் தானே என் ஆண்மகன்
உங்களோடு உறவாட என் உள்ளம் தவிப்பது குற்றமா...
வாருங்கள் மாதத்தில்
ஒருமுறையாவது என் முழு பாசத்தையும்
உங்கள் மடியில் கொட்டி தீர்க்க
ஆசையாய் காத்து இருக்கிறேன்
காதலனாக
நீங்கள் பேசும் 
வார்த்தைகள் எல்லாம் 
அலைபேசியில்
கடந்து போகும் நிமிடங்கள் தான்
அத்தனை நிமிடங்களும்
நான் உங்களோடு மனைவியாக
வாழ வேண்டிய நிமிடங்கள் என்பதை மட்டும் மறக்க வேண்டாம்
காதலனாக நீங்கள் கொடுத்த
பாசம் எல்லாம் இப்போது
என் இதயம் 
என் வாழ்க்கையில்
உங்களை கணவன் ஆக்கிட துடிக்கிறது.


பேச

மனம் இருந்தும்
சில நேரங்களில்
நெருங்கிய உறவுகளோடு
பேசாமல் தவிர்க்கிறோம்
காலங்கள்
கடந்த பிறகு
பேசாமல் இருந்ததை
எண்ணி ஏங்கி தவிக்கிறோம்
இயற்கை படைப்பில்
ஏதும் நிரந்தரம் இல்லை
எனவே 
இயற்கை கொடுத்த
ஒவ்வொரு நாளையும்
உறவுகளோடு மகிழ்ச்சியாய்
மகிழ்வித்து வாழ்வோம்.

ஏதோ 
நீ கோவத்தில்
இருக்கிறாய் என்று
உன்னை விட்டு விலகிட முடியாது
என்னால்...
காரணம் ஏதும் இன்றி
உன் மீது காதலை சூட்டியவன் நான்
அழகு மலரே
நீ என்னை அடித்து விரட்டினாலும்
என் ஆயுட்காலம் உன்னோடு தான் 
நீ இல்லாத பொழுதுகள்
வெறும் காணல் நீர் தான்.

யாரும்
இல்லாத பொழுதுகள்
உனது தனிமை 
உனக்கு தீர்க்கமான
முடிவுகளை கொடுக்கும் 

அதை 
நீ உள்வாங்கி
அதற்கான பாதையில்
பயணம் செய்து பார்

தோல்விகள் எல்லாம்
உனக்கு வெற்றிக்கான
பாதையாக மாறும் 
நம்பிக்கையோடு உன் வாழ்க்கை பயணத்தை தொடங்கு.

எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.


உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.


கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.


எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.


உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.


உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.


நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி


 chozhanattukavingar@gmail.com



அடுத்த பதிவில்

உங்களுக்கு இன்பம் மூட்டும்

இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்


நன்றி வணக்கம்.

No comments:

Powered by Blogger.