முன்னுரை:
தமிழ் மொழியின்
தனி சிறப்பு " கவிதைகள்" தான்.
கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன?
கவிதையை மீது காதல் கொண்டு
சோழநாட்டு கவிஞர் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம்.
காதல் கவிதைகள் தொகுப்பு
அதி பயங்கர தீ :
இழுத்து பிடித்துஅணைத்து கொள்ள வேண்டும்
அழகிய
தாமரை பூவை
அவள் இதழ்
ஒரு மர்ம இனிப்பை ஒழித்து வைத்துள்ளது
அது அதி பயங்கர தீ மூட்டுகிறது
ஒவ்வொரு முறை
தழுவும் போது
ஆசை காதலியே
அனையாத தீச்சுடரே
அங்கங்கள் தேன் சுரக்கும்
அதிசய மர்மங்கள் கொண்டவளே
அலை கடலும்
ஆனந்தம் அடையும்
அள்ளி மலரே நீ கால் பதித்தால்
பார்வையில்
பரவசம் மூட்டும் பாதகி
என் தவிப்பை தீர்க்க
ஒரு ஒப்பந்தம் போடுவமா?
பரவச பூவே:
நித்திரை யாவும்
சித்திரம் வரைய துடிக்கிறது மனசு!
காதல் ஊடுருவல்
அனுதினமும் அரங்கேற்றம் செய்யுது வயசு!
பாலப்பழம் சுவை கொண்ட
பரவச பூவே!
மகரந்தம் துகள்களை
மறைத்து வைத்த மல்லிகையே!
மொட்டு விரித்து
அறும்புகள் துளீர குறும்புகள் செய்யும்
மந்திர காரி!
நீ செய்யும் குறும்புகளின்
தாக்கத்தை நித்தமும் தீர்க்க
ஆயுட்காலம் கைதியாக
விரும்புகிறேன்
எப்போது என்னை கைது செய்வாய்
தாக்கம்
ரசனைகள்
அற்ற பீடையாக
சுற்றி வந்த மனசு
முதல் முறை
உன்னை கண்டதும்
வள்ளுவன் மூன்றாம் பால்
வாசனை உணர்ந்தது
தொடுதல் இன்றி
பரவசம் பரவியது
தேகம் எங்கும்
வெப்பத்தின் தாக்கம்
தாகம் கிளர்ச்சி செய்ய
தாவணியில் வந்தவளே
என் தவிப்பு அடங்க
இதழ் நீர் தருவாயா?
வண்ணத்துப்பூச்சி
அங்கத்தின்
சுரப்பிகள் எல்லாம்
அவள் பெயரை மட்டும் போதித்தது
மீசை இல்லா
வண்ணத்துப்பூச்சி
நீ என்னை விட்டு
வனவாசம் போனது ஏன்?
தூரத்தில் அவள்
அவள் கண்கள் மட்டும்
பட்டொளி வீசியது
சட்டென்று என் பார்வை திரும்பியது
பிரம்மன் படைப்பின்
பிறவி பயனை நானும் அன்று தான் உணர்ந்தேன்..
என்ன அழகு
அவளை
பார்த்து பார்த்து
செதுக்கிய சிற்பி யார்?
பிரபஞ்சத்தின் புதிர்களை
கட்டவிழ்க்க
புதிதாய் பிறந்த
பொண்ணழகி
உன் செழிப்பான
அங்கங்கள்..
என் சொத்துக்கள் ஆகட்டும்.
வரலாற்று
ரொம்ப
பெரிய ஆசையெல்லாம் இல்லையடி
நித்தமும்
உன் மடிசாய்ந்து
உன் மர்ம புதர்களில்
புதையுண்டு கிடக்கும்
வரலாற்று சுவடுகளை
ஆராய்ச்சி செய்திட வேண்டும்
அனுமதி தருவாயா
ஒரு யுகம்
உன்
செழிப்பான கண்ணமும்
உன்
செழிப்பான இதழ்களும்
கொட்டி குவிக்கும்
இனிப்பான இன்பத்தை அனுபவிக்க
மீண்டும் ஒரு யுகம் வேண்டும்
கருங்குயிலே
கட்டியணைத்து
காதோரம் கவிபாடும் கருங்குயிலே
உன்னுள் எத்தனை
சந்தங்கள்
ராகம் தீட்ட உன் இரவிக்கைக்கு
விடுதலை கொடுப்பாயா
காவியம்
காதல்
ஒரு விலையில்லா
காவியம்
சிலர்
பாசத்தை கொடுத்து காதலை சமன் செய்கிறார்கள்
சிலர்
பாசத்தை கொடுப்பது போல் நடித்து காதலை சிதைக்கிறார்கள்
எல்லாம் இருந்தும்
நிதானமாக நகர்கிறது
அழகிய காதல்.
அடுத்த நொடி
நிரந்தரம் இல்லாத வாழ்க்கை தான்
ஆனால்
அவள் இல்லாத நாழிகைகள்
நித்தமும் மரணத்தை போதிக்கிறது
அவள்
மேல் ஆயிரம் ஆசைகள் இருந்தும்
கோவத்தோடு விழகி நிற்கிறேன்
நான் இல்லாத
நிமிடங்கள் அவளுக்கு எவ்வளவு
வெறுமையை பரிசு அளிக்கும் என்று அறிய.
பாடசாலையில்
எழுதப்படாத விதி
என் மனசு என்னும்
மர்ம சாலையில் அவள்
எழுதி தீர்க்க முயல்கிறாள்
எந்த
உயிர் நீ தேவை இல்லை என்று நினைத்து
உன்னை ஓரம் கட்டுகிறதோ
அடுத்த நொடி
நீ அங்கு இருந்து விலகி விடு.
உன் மேல்
அவள் வைத்த பாசம்❤️
குறைகிறது என்று தெரியும் முன்
நீ அவளை விட்டு விலகி விடு💔
நீ இல்லாத
இடத்தை யார் வேண்டுமானாலும்
நிரப்பிக்கொள்ளட்டும்🙏
வாழ்க்கை தத்துவம்
இந்த
பிரபஞ்சத்தில்
நீ ஒரு அனாதை
என்பதை ஒரு போதும் மறவாதே
வாழ்க்கை
தத்துவம் ஏதும் இல்லை
நீ
வாழ நினைப்பதை
வாழ்ந்து விட்டு போ
அழகான
சிரிப்பழகி
நீ ஆயிரம் தவறுகள் செய்தாலும்
உன் ஒத்தை சிரிப்பில்
மயங்கி போனேன் நான்.
பேசாமல்
இருப்பது நல்லது
பெண்ணே...
உன்னை கண்டதும்
பேச துடிக்கிறது மனசு ஏன்?
இரவில்
சந்திப்பு அவளும் நானும்
ஆடை அணிகலன்கள் தளர்த்தி
அள்ளி மலரை அணைத்து
வாசனை திரவியம் தேடி
நீண்டது இரவு
அவள் அங்கங்களை
அழகாய் வட்டம்மிட்டது
வரைபடம் மீதி இன்றி தழுவி
ஒற்றை புள்ளியில்
மையிட்டு மடி சாய்ந்தேன்
விடிந்தது இரவு
கலைந்தது மேகம்
யாரடி நீ
ததும்பும் தளீர் உடல் கொண்டவளே
வெண்ணெய் ததும்பும் இடையும்
வண்ணம் மிளிரும் முகமும்
வாசனை வீசும் வசியமும்
தன்னுள் கொண்டவளே நீ யார்
பிரம்மன் எனும் சிற்பி
செதுக்கிய சிற்பமா நீ
கள்ளவன் கடைந்த
தனித்தமிழ் புயலா நீ
அதிகாரம்
வேண்டும்
அவள்
அனுமதி இன்றி
அவள் இதழ்ச்சாரை
இறக்கம் இன்றி
உறிஞ்சி தீர்க்க
பங்கு
சந்தை முதலீட்டாளர்களுக்கு
பெறும் கனவு
பெண்ணே
உன் மீது
முதலீடு செய்ய
லாபம் தரும் தங்க அழகி
நீ இந்த பிரபஞ்சத்தில்
பிறந்தது ஏன்
நீ பார்க்கிறாய்
என்று நான் அறியும் முன்
தன் பார்வையை திருப்பும்
வாடைக்காரி
உன் வாசனை
வசியம் செய்யுதடி
தூரத்தில் தீ மூட்டி
தூக்கத்தில் இனிப்பு ஊட்டி
என்னை மயக்கிய பாதகி
உன் கட்டுடல் அழகு
நான் அறியாத புதிர் ஓவியம்
கண்களால் கதை பேசும் கண்ணழகி
காலம் கனியுமா
கற்பூரம் போல்
காதலில் நீயும் நானும்
கரைவது எப்போது?
எனக்கான
மகிழ்ச்சி நீ தானே
உன்னை கண்டதும்
காதல் பிறந்து
கனவுகள் கலைந்து
காவியம் சூட்டுகிறது
கண்ணே
கருவிழியே
கண்டதும்
நீர்த்து போகும்
கானல் நீராய் நீ வேண்டாம்
என் கனவுகளை
சுமந்து செல்லும் ராணியாக நீ வந்தால்
மகிழ்ச்சி.
ஆகாயத்தில்
பிறந்து அனுதினமும் நகர்ந்து
பிரபஞ்சத்தின் அழகியல் பெட்டகம் ஆன
பூமியில் முத்தம்மிடுகிறது
பனித்துளி
இந்த பனித்துளிகள்
அவள் வருகைக்காக
காத்து நின்றது.
நீ பேசியது
இப்பிரபஞ்சம் கொடுத்த கொடை
நீ பார்த்தது
இப்பிறவி பலன்
ஆயிரம் வண்ணங்களை
வனப்பாக கொண்டவளே
வாலிபம் தயங்குகிறது
வருமையில் வாடுகிறது
வாசனை தருவாயா
ஒவ்வொரு நாளும்
என் இதயம் உனக்காக துடிக்கிறது
ஆனால்
நீ தான் இதை உணராமல்
உதாசீனம் செய்கிறாய்
அன்பு என்பது
நீ மட்டும் கொடுக்கும் கொடை இல்லை
அந்தி பொழுதில்
மடிசாயும் சூரியன் போல்
என் மடி சாய்ந்த பூச்சரமே
பூமியின் அதிசய நிலவு நீ தான்
உன் பொற்பாதம் போதுமடி
இந்த பூமியும் புனிதம் ஆகும்
பன்னீர் துளிகள் எல்லாம்
உன் தேகம் தொட்டு வடிந்ததோ
வாசம் வீசும் பூங்கொடியே
வல்லினம் உன் இடையழகில் கண்டேன்
மெல்லினம் உன் இதழ் அழகில் கண்டேன்
அர்த்தமுள்ள வாழ்க்கையில்
ஆதி பீடம் நீயடி
வாஞ்சையோடு காதல் செய்யும்
வாலிப வசியக்காரி
உன் முகம் பதித்து
உன் மடிசாய தவிக்கிறேன்
இரவில் இன்பம் சொட்டும்
நறுமுகையே
நாம் சேர்ந்து வாழ
வழி சொல்வாயா?
பட்டாம்பூச்சி பாணியில்
நித்தமும் சுத்தி வந்த மனசு
அவள் கைவிரலை தொட்டதும்
வண்ணம் பூசிக்கொண்டு
வசந்தம் பூக்கும் மலரை தேடி
பயணம் செய்தது.
நீ வீசும்
வாடை காற்று
உயிர்களின் உணர்வுகளில்
கலக்கிறது என்னவளே
ரதி யென நீயும்
நதி யென உன் உடலும்
நீட்டி நீண்டு போகும்
பருவத்தில் பார்த்த
அந்த முதல் நாள் சுகம்
மூச்சுவிட தவிக்கிறது
முதல் முறை
முத்தம்மிட்ட பொற்சிலையே
நீ சாய்ந்து நின்ற
மதில்களும் மீண்டும்
மடிசாய தவிக்கிறது
வார்த்தைகள் இல்லையடி
நீ செய்த குறும்புகளை
வரிசை படுத்தி கவிதையாக்க
வட்டமிடும் நிலவே
உன் அழகை கண்டதும்
கவிதையும் காதல் கொள்ளும்
வரிகளும் வள்ளுவன் மூன்றாம் பால் குடிக்கும்
வனப்புக்கு நீயே சுவடு
உன் பாதமே நான் பயணிக்கும்
வழித்தடம்
பரிதவிக்கும் என் ஆசைகளை
தென்றலோடு இனைத்து அனுப்புகிறேன்
சுவாசத்தில் நீ
என் உணர்வுகளை நுகர்ந்தால்
மீண்டும் நாம் ஒருமுறை
மதில் மேல் மடிசாயலாமா?
காதல் ஊடுருவல்
கவிதை வழி செய்தவளே
உன் கடைக்கண் பார்வை
காட்சி நகல் ஆக என் மனசுக்குள்ள
கடந்து தவிக்குதடி
மெல்லினம் இடையினம்
தன்னுள் கொண்டவளே
சற்று என் மனதை
சமரசம் இன்றி தழுவி
அதில் காதலை நிரப்பி
அனுதினமும் உனக்காக
துடிக்க விடு.
நீ
என் விரல் தீண்டும் போது
என் இளமையின் ரகசியம் அறிந்தேன்
எனக்குள்
இவ்வளவு உணர்வுகள் இருப்பதை
உன்னால் தான்
உணர்ந்து கொண்டேன்
பேதை பெண்ணே
என்ன வசியம் செய்தாய் பெண்ணே
உன் மீது
பித்து பிடிக்கிறது எனக்கு
நேராக நிமிர்ந்து நிற்கும்
உன் நிழல்
தஞ்சாவூர் பெருவுடையார் கோயில்
கோபுரத்தை நினைவு படுத்துகிறது
பேசிவிட்டு
கடந்த போகவா
காதல் செய்தோம்
கரம் பிடிக்க தானே
காதலித்தோம்
ஏனடி
என்னை விட்டு
விலகி போகவே நீ விரும்புகிறாய்
வனப்பான பேரழகி
நீ ஒரு சிலையாய் நிற்கிறாய்
என் மனதில் ...
உன்னோடு தொட்டு விளையாட
தவிக்கிறது என் மனது
எப்போது பெண்ணாக
உருவம் மாற்றம் செய்வாய்
@Writing Siva
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில்
உங்களுக்கு இன்பம் மூட்டும்
இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: