முன்னுரை:
தமிழ் மொழியின்
தனி சிறப்பு " கவிதைகள்" தான்.
கவிதைகள் என்றாலே நம் எல்லோருக்கும் பிடிக்கும், அதுவும் தமிழ் கவிதைகள் என்றால் நமக்கு பிடிக்காமல் இருக்குமா என்ன?
கவிதையை மீது காதல் கொண்டு
சோழநாட்டு கவிஞர் வலைப்பக்கத்திற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வருக வருக என்று வரவேற்கிறோம்.
தமிழ் சிறுகதைகள்
சாலையோர பயணம்
சில்லென்று வீசும் காற்று
மலைச்சாரல் நீர்த்துளி
என்மேல் செல்லமாய் தீண்டியது.
சூடான தேநீர் தேடி
ஒரு டீ என்றேன்.
கண்ணு கருத்தபுள்ள
கண் சிமிட்டி தலை அசைத்தாள்
வெள்ளை நிறம் அழகு என்று
சுற்றி திரிந்த எனக்கு ..
கருவண்டாய் கருத்த குட்டி
என் இதயத்தில் புகுந்து
காதலை தெளித்து விட்டாள்
அய்யோ..
எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி
மிதந்தேன் காதலில்...
திடீரென்று ஒரு சத்தம்
டீ என்று...
அவள் கைவிரல் பட்டும் படாமல்
வெதுப்பான தேநீரில்
வெந்து தணிந்தது ஆண்மை.
அழகான கருத்தவளே
I love you
நீ என் மனைவியாக சம்மதிப்பாயா?
இடம் :தேனீர் விடுதி...
ஆண் : நான் டி குடித்து கொண்டு இருந்தேன்..
திடிரென்று ஒரு நொடியில் அழகான பெண் ஒருத்தி என் அருகில் வந்தாள்..
பெண்:தூரத்தில் இருந்து பார்க்கிறேன்
நீ என்னை ஒரு மாதிரி பார்க்கிறாய்...
என்ன வேண்டும். என கேட்டாள்
ஆண்: நான் சற்று தயக்கத்துடன்
நிலவே நீ ஆனாய் உன் அழகில் மயங்கி போனேன். அதான் உன் அழகை தூரத்தில் இருந்து ரசித்தேன்..என்று கூறினேன்
பெண்:அவள் கேட்டாள் என்னிடம் என்ன அழகு இருக்கிறது என்று....
ஆண்: நான் கூறினேன்...
கண் சிமிட்டும் கண்கள் அழகு.
தங்கத்தை தாங்கி நிற்கும் மூக்கு அழகு..
மெல்ல தீண்டும் இதழ் அழகு..
பச்சரிசி போல பற்கள் அழகு..
முடி கூட பேசும் காது அழகு..
முத்தாய் பேசும் வார்த்தைகள் அழகு.
சட்டென்று வரும் கோவம் அழகு.
மேடு பள்ளங்கள் நிறைந்த மேனி அழகு..
சினுங்கி நடக்கும் நடையழகு...
முன்னழகை முழுவதும் ரசித்தேன்..பெண்ணே... பின்னழகு இன்னும் காணலையே....
அவள் சிறு வெட்கத்தில்
பின் திரும்ப.... வார்த்தைகள் அழகு குளியல் போட்டது.... மனதில்...
வசீகரிக்கும் இலைகள் போல் அவள் மேனி...
வம்புக்கு இழுக்கும் அவள் குறுதி..
அவள் மெல்லிய வலைவு நெலிவுகள்
இதுவரை வரையப்படாத ஓவியம்...
அசையும் அங்கம்
அனைத்தும் அழகே...
அவள் ஐவிரல் தீண்டியதும்
இப்பிறவியும் அழகே.
அனைத்தும் அழகாய்
கேட்டவள்... மீண்டும் அருகில் வந்து முத்தம் பதித்து... உள்ளத்தில் பதிவு செய்தால் அவள் காதலை....
ஆண் : காரணம் கேட்டேன்...
பெண் : ஒரு நொடியில்
என் இதயத்தை திருடிய கள்வன் நீ.
இனிமேல் நீயே என் கணவன்.
என கூறி மகிழ்ச்சியை கொடுத்து... மறைந்து போனால்.
என் மனதில் வாழும்
கற்பனை காதலி.
இந்த கதை இரு நண்பர்கள் பேசும் நடையில் எழுதி இருக்கிறேன்.
கதையின் பாத்திரம்: அழகி, குயில் இருவரும் தோழிகள் ....
வாங்க
பேச்சு வார்த்தை இரு தோழிக்கும்.
அழகி : அழகான ஓவியத்தை வரையும் ஓவியர் அழகாய் இருப்பது இல்லை என்றால் .
குயில் : ஏன் இப்படி கூறுகிறாய்?
அழகி: அழகை ரசிக்க தெரிந்தவன் மட்டுமே
தன்னை விட அழகாய் ஒரு ஓவியத்தை வரைய முடியும்.
குயில் : நீ ஓவியர் அழகு என்று கூறுகிறாயா? இல்லை ஓவியம் அழகு என்று கூறுகிறாயா?
அழகி: தமிழ் மொழியின் உவமை அழகு என்று கூறுகிறேன்.
குயில்: உவமையா!!!
அழகி: ஆம் . தமிழ் மொழியின் உவமை அழகு.
இங்கே ஓவியரும் அழகு தான் ..அவர் வரைந்த ஓவியமும் அழகு தான் .
நீங்கள் அழகானவர் என்று நாங்கள் நம்புகிறோம். எங்கள் உரையாடல் அழகை நீங்கள் ரசிப்பதால் .
End .
@Writing Siva
எங்க போறிங்க உங்கள் வரவை எதிர்பார்த்து எங்கள் வலைத்தளத்தில் பல கவிதைகள் காத்து இருக்கிறது.
உங்களுக்கு பிடித்த கவிதைகளை படியுங்கள், உங்கள் மனதை எங்கள் கவிதை வரிகள் தாலாட்டும் , சீறாட்டும் , சிந்திக்க வைக்கும்.
கவிதைக்குள் ஆயிரம் உணர்வுகள் ஒழிந்து இருக்கிறது.
எங்கள் கவிதை உங்களுக்கு எந்த உணர்வை தந்தது என்று மறக்காமல் பதிவு செய்யுங்கள்.
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி
chozhanattukavingar@gmail.com
அடுத்த பதிவில்
உங்களுக்கு இன்பம் மூட்டும்
இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: