முன்னுரை:
இயற்கையின் படைப்பில் அனைவரும் சமம் எனில் நான் ஒரு அழகான பூமி பந்தில் பிறந்து இருக்கிறேன் என்று தான் அர்த்தம்?
இந்த அழகான பூமி தந்த சுகத்தை அனுபவித்து கவிதையாக எழுதி இருக்கிறேன்.
எனது கவிதைகள்: காதல் கவிதைகள்
சிட்டுக்குருவி
நான் என் கணினியைதிறக்கும் முன் ... திரையின் பின் வாழ்ந்து கொண்டு இருக்கும்... சிட்டுக்குருவி யை பார்க்காமல் என் வேளையை துவங்குவது இல்லை...
அழகான கூடு கட்டி
அதன் உள்ளே மெத்தை அமைத்து
உணவுக்கு ஒரு அறையும்...
உயிர் காதலிக்கு தனிஅறையும்
சிட்டுக்குருவி
சிறிதும் ஒய்வு இன்றி
உழைப்பதை கண்ட பிறகு...
எனக்குள் ஒரு குற்ற உணர்வு...
நாம் இன்னும் கடுமையான உழைக்க வேண்டும் தன் குடும்பத்திற்கு என்று.
உறிஞ்சி தீரடா
வண்டின்
காம தீயை உணர்ந்த பூ..
தேனை உறிஞ்சி தீர்க்க.
மெளனமாய்
அனுமதித்தது...
இயற்கையின்
படைப்பில்
முதுமை ஏதடா...
முழுவதும் நீ உறிஞ்சி தீரடா.
வாழ்வது ஒருமுறை எட்டி பாரடா..
வாஞ்சையோடு அள்ளி பூசடா..
கவலை கடந்து
இளமையில் துளிர்க்க..
தளிர் இதழ் தேனை உறிஞ்சி தீரடா..
தீர்ந்த வேர்வையில்
குளிர்ச்சி காணடா...
தேக பலம் பெற
தினமும் தீண்டடா
வரிகள் வடிக்கும்
தீயை பாரட..
வள்ளுவன்
காமத்து பாலை
இதுக்கு சூட்டடா...
மயில் இறகுகள்
உடம்பில் ஏதாவது ஒரு பாகத்தில்
அலகு குத்திய வரை பார்த்து இருக்கிறேன்...
முதல் முறையாக
உடல் முழுவதும் அழகு குத்தியவளை
இன்று தான் நேரில் பார்க்கிறேன்...
அவள் நடந்து போகையில்
அடர்ந்த காட்டில்
அழகாய் அசைந்தாடும் பூவாய் பார்க்கிறேன்...
கைவிரல் எடுத்து
தலைமுடி கோதும் போது..
என் கண்முன்னே
மயில் தோகை விரித்து நிற்பதை உணர்கிறேன்...
உன்னை சந்திக்கும் போது எல்லாம்
அழகை அதன் குகைக்குள்
சென்று ரசிப்பதாய் உணர்கிறேன்.
யார் மனைவி...
எங்கோ பிறந்து..
இளமையில் வந்து
மஞ்சள் சூடி ...
மன அறையில் கூடி..
கைவிரல் தீண்டி..
மெட்டியில் உரிமை சூடி..
பழகிய உறவுகளை கடந்து
புதிய உறவுகளை ஏற்று...
உறங்க புது இடமும்..
உணவு அருந்த புது இடமும்
அழகாய் ஆறு மாதங்கள்
அன்பாய் கழித்து...
அவர் உழைப்பை
உச்சி முகர்ந்து...
நாவிற்கு இனிய உணவு சமைத்து
நல்லபடியா நாலு வாய் உண்டு...
கழித்த சுகம்...
வருவாய்க்கும் செலவுக்கும்
சரியாய் இருக்க..
தினசரி வாழ்க்கையில்
இருவரும் உழைக்க
புதிய பட்டியலை போட்டு..
அதற்காக உழைத்து
ஓடாய் உடைந்து....
அவரின் ஊதியம்
அரைவயிறு நிரம்ப...
அய்யோ அம்மா
என்று மாதங்கள் கழிக்க...
இறுக்கி பிடித்து
நகர்த்தினால் மனைவி...
கடன் வாங்கும்
நிலையில் வாழ்க்கையின் உளவியல்
இருந்தாலும்....
கணவன் உழைப்பின்
வருமானத்தை உணர்ந்தவள்
மனைவி.
இரு சேலை தான் உடுத்தி
ஆடம்பரம் தான் வெறுத்து..
சிறுக சிறுக சேமித்து
சிகரம் தொட்டுவிட்டாள்
என் மனைவி.
இன்று
பக்கத்து வீட்டு
தேன்மொழிக்கு... இவள் தான் முன் உதாரணம்.
மடிசாய மலர்ந்தவள்
பூவே
உன் பூச்சரம் கண்டு
தினமும் புன்னகைக்க ஆசை...
முதல் நாள் மொட்டாய் ..
மறுநாள் பூவாய்..
இரண்டாம் நாள் உச்சவத்தில்
நீயே கம்பீரம்....
கண்டதும் ஏதோ சுகம்...
கண்கள் கவரும் காட்சி...
பூவாய் நீ மலர
பூந்தென்றல் மனமனக்க
சோலையிலே சேலை வந்து
உன்னை சொந்தம் ஆக்கி
தலைமுடியில் தாங்கும்
அழகு என்ன.....
மங்கை அவள்
மடிசாய மலர்ந்தாயே...
மறுதிங்கள் முழு
நிலவாய் ஆனாயோ..
காதலியே காதலியே
காதலை தீண்டும் பாதகியே...
பருவம் வந்த சிட்டே.
துருவம் தந்த மொட்டே...
முன்னே நீ நடந்தால்
முல்லை பூவின் வாசம்
பின்னே நீ வந்தால்
சென்பக பூவின் வாசம்
ஆசையாய் அருகில் வந்தாள்
அமைதியாய் நிற்கிறாய்...
மெல்லமாய் தீண்டும் போனால்
முறைத்து பார்க்கிறாய்...
முழு நிலவு நீ தானடி..
மேகமாய் உனை மூடி
பாசமாய் பருக நினைக்கிறேன் உயிரே உன்னை.
காதலியே காதலியே கார்முகிலே
வள்ளுவன் மூன்றாம் பால் துள்ளல் கொண்டவளே.
மெல்ல தீண்டடி
தேகம் கூசுது .
கண்ணே கண்மணியே
காதல் சுகம் தாராயோ...
தோகை விரித்து நிற்கும்_ மயிலாய்...
உன் அழகை திறப்பாயோ...
யாரடி நீ
வென்னீர் சூடாய்
பன்னீர் சுவையாய்
தவழும் தாழம்பூவாய்
மனசு எல்லாம்...
மகுடம் சூட்டி...
கோபுர கலசத்தில்
உச்சி வெயில் நிழலாய்
அழகாய் .. அசைந்து ஆடுகிறாய்..
மனதில்.
என் மனதில்
பூத்து குலுங்கும் பூவே
நீ முதல் மொட்டாய்
மறுநாள் சிட்டாய் மாறாதே...
அழகாய் கூடு கட்டி
குஞ்சம் தொங்க விட்டு
காத்து இருந்த இதயத்தில்
இரவில் பாதம் பதித்து
நள்ளிரவில் மூன்றாம் பால் சுவைத்து
விடியலில் சோகம் இனைவது
முறையோ...
சிட்டுக்குருவி கூட்டத்தில்
சிறந்த சீர் அழகே...
ஏங்க விட்டு பறப்பது
முறையோ.
பேரழகி
என்னடி
நீ பேர் அழகி...
காதலியாய்
அழகியாய் நீ
கார்முகிலாய்
அழகியாய் நீ
பூவிழியால்
அழகியாய் நீ
பூந்தென்றல்
அழகியாய் நீ
அரும்பாய்
அழகியாய் நீ
மொட்டாய்
அழகியாய் நீ
கருவிழி
அழகியாய் நீ
கருமை நிற
அழகியாய் நீ
அன்பே
என் பேர் அன்பே
நீ அசையும் பெண் சிலையோ
அந்தரங்க தேர் சிலையோ...
கண்ணால் கண்ட போது ஏதோ மயக்கம்
மான்விழி பாய்ந்த போது ஏதோ தயக்கம்
தீண்டலின் தீச்சுடர் நீராய் பாய்ந்து
இருமாதம் இரத்தத்தில் உறவாய் தவழ்ந்து
கருப்பையில் கருவாய்
அன்பே நீ
தாய் பருவம் ஏந்தியபடி மயங்கையில்
அன்போ
நீ ஒரு தாயாய் பேரழகி.
அழகான மனைவியை
அதிகாலை தீண்டு...
அவ்வப்போது ஆறுதல் கூறு..
மகிழ்ச்சியை அவள் மனதில்
விதையாய் தூவு...
சிரிப்பாளோ
முறைப்பாலோ
தினமும் முடிந்த வரை
இருமுறை இதழ் பதி..
இன்பம் துன்பம்
இரு சுவை விருந்து...
இடைவிடாது...கொடுத்து வா
நம்பிக்கை கொள்...
அவள் கைவிரல் தீண்டியதும்
கனவுகள் ஜொலிப்பதாய்
காதலி....
நீண்ட தூரம் நட...
அவள் மடியில் உறங்கு...
அவளோடு நெடுக பேசு.
மனைவி என்னும் சொல்
ஆண்மகனை மயங்கும் சொல்
இது மந்திரம் கொண்டது...
நம்பிக்கை தரும் உணர்வை
நெடுக எனக்குள் தெளிப்பவள்.
அவளே மனைவி.
பாலை நிலத்தில்
தீண்டலின் சுகம்.
நீ அறிவாயோ ...தென்றலே...
மெல்லமாய் நீ நீந்தி
மரக்கிளை யோரம் நீ பேசயில...
நட்சத்திரம் நின்று
பார்க்கும்..
மனமோ
அடி நெஞ்சில்
காதல் பூக்கும்
காற்றின் வாடையிலே
காதல் கவிதை பறந்து
காதலை அள்ளி தெளிக்கும்....!
இயற்கையின் படைப்பை...
யார் அறிவார்...
மெல்ல நீ தீண்ட
இலை ஒன்று காம்பு தள்ளி...
மொட்டாய் மாறி நிற்க..
தென்றலாய் நீ தீண்டும்
சமையத்தில் பூவாகி...
மெல்ல மணம் வீசி...
மாயவனை வலைத்து போட்டு..
சுவாசத்தில் உட்புகுந்து
காமத்து பாலை நிலத்தில் விதைப்பவளே...
நீ மலரா
நீ காற்றா
நீ யாரடி
இந்த
இயற்கையின் படைப்பில்.
அவள் சம்மதம்
சாலையோர பயணம்
சில்லென்று வீசும் காற்று
மலைச்சாரல் நீர்த்துளி
என்மேல் செல்லமாய் தீண்டியது.
சூடான தேநீர் தேடி
ஒரு டீ என்றேன்.
கண்ணு கருத்தபுள்ள
கண் சிமிட்டி தலை அசைத்தாள்
வெள்ளை நிறம் அழகு என்று
சுற்றி திரிந்த எனக்கு ..
கருவண்டாய் கருத்த குட்டி
என் இதயத்தில் புகுந்து
காதலை தெளித்து விட்டாள்
அய்யோ..
எனக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சி
மிதந்தேன் காதலில்...
திடீரென்று ஒரு சத்தம்
டீ என்று...
அவள் கைவிரல் பட்டும் படாமல்
வெதுப்பான தேநீரில்
வெந்து தணிந்தது ஆண்மை.
அழகான கருத்தவளே
I love you
நீ என் மனைவியாக சம்மதிப்பாயா?
ஆதாம் ஏவாள்
தூரத்தில் இருந்து
தினமும் என்னை
தூங்க விடாமல்
செய்யும் காதலியே...
நீ இன்று நலம் தானே?
செய்தி
கேள்விப்பட்டேன் ...
உனக்கு சுகப்பிரசவம் என்று.
தாய்யும் சேய்யும்
சுகம்தானே..
அந்த ஆதம் ஏவாள் போல்
வாழ ஆசைப்பட்டேன் .. உன்னோடு
மதம் நம்மை பிரித்து விட்டதே.
இப்போது
இன்னொருத்தி என்னை நம்பி வந்துவிட்டாள்...
அவள் இமைக்கும் நொடி யெல்லாம்
உன் நினைவாய் உள்ளது உயிரே...
நீ தொட்ட இடமும்
நீ தீட்டிய படமும்
நீ பாடிய பாடலும்
அழகாய் பூக்கிறது
என் இதயத்தில்....
அரும்பு மீசை அரியாத
காதல் தானே...அரியாத வயசு காதல்
பசுமையாக பதிந்து இருக்கிறது..
அழியாமல் காத்து
வைத்து நிற்கிறேன்.
அதனால் தான் ஏனோ
உன்னை தொலைக்கவும் முடியாமல்
அவளை ஏற்கவும் முடியாமல் நிற்கிறேன்.
போர்
ஏனடி
உன் மீது மட்டுமே..
என் காதல் பிறக்கிறது...
ஏனடி
உன் மீது மட்டுமே
என் ஆசை பிறக்கிறது...
ஏனடி
உன் மீது மட்டுமே
என் பார்வை விழுகிறது
ஏனடி
உன் மீது மட்டுமே
என் பரிசம் தோன்றுகிறது
மயாவலையில்
என்னை மயக்கிய...அரசியே
மர்மங்கள் நிறைந்த
உன் முழு அழகை...
முதலில் தீண்ட
நித்தமும் போர் தொடுக்கிறேன்.
நீ சோழநாட்டு அரசியோ
சாய கோபுர கலசத்தில்
ஜொலிக்கும் தங்காமாய்...
சற்றும் சலிக்காமல்
நித்தமும் என்னை வெல்கிறாய்.
கவலை
தினமும் ஏதோ கவலை
உன்னை தொலைத்த அதே இடத்தில் நிற்கிறேன்..
மீண்டும் ஒருமுறை வாய்ப்பு கொடு.
என் கைவிரல் பிடி
மீண்டும் தொலைக்க மாட்டேன்.
மீண்டும் ஒருமுறை தொலைக்க
வாய்ப்பு கொடுக்காதே...
என் கண்ணீரை ஏற்றுக்கொள்
என் கோவத்தை ரசித்துக்கொள்.
என் அழகை சுவைத்துக்கொள்
என் கடின வார்த்தையை கனிந்துக்கொள்.
என் காதலை மீண்டும் பசுமையாக்கு
என்னை மெல்ல தேற்று...
என்னை மடியில் சாய்த்துக்க.
என் கைவிரலை மீண்டும் விட்டுவிடதே...
தங்கத்தை ஒருமுறை தொலைத்து
நான் சிதைந்தது போதும்...
இனிமேல்
என் மரணம் வரை கூட இரு.
துணை
மனதில் இருக்கும் ஆசையையும்
உடம்பில் இருக்கும் அழுக்கையும்
யாரிடம் உன்னால் தங்கு தடையின்றி
கொட்டமுடிகிறதோ..
அதை யார்
முகம் சுளிக்காமல்
முழு ஆசையோடு
முழுவதும் தனக்கானதுயென்று
பெற்றுக்கொள்கிறளோ
அவளே உன் வாழ்க்கை
துணை.
உன் வாழ்க்கை
நீ ஆசைப்பட்டு
விரும்பிய வாழ்க்கையை
ஒருபோதும் தொலைக்காதே
யாருக்காகவும் எதுக்காவும்
விட்டுக்கொடுக்காதே...
நிமிடங்களை நினைவுகள் ஆக்கு
நித்திரையை மகிழ்ச்சி ஆக்கு..
வாழ முடிந்த ஒரு வாழ்க்கை
இப்போது நீ வாழ்ந்து கொண்டு இருக்கிறாய்.
நீ நித்தம் உனக்கு பிடித்த
வாழ்வை அழகாய் நேர்த்தியாய்
காதலி...
அழகாய் பூக்கும்
ஆசையை தீர்த்துக் கொள்ள நேரம் ஒதுக்கு.
பிடித்ததை செய்..
தானம் கொடு..
தர்க்கம் தீர்..
ஊக்கம் கொடு ... உணர்வை இன்பமாய் கொடு...
இயன்ற உதவிகளைச் செய்து கொண்டே இரு...
அன்பு காட்டு
ஆறுதல் கூறு.
உறவுகளை உன் உடமை ஆக்கு
பாசம் வை
பனிவிடை செய்.
முடிவுரை:
முத்தான முத்தமிழ் தந்த சுகத்தை அனுபவித்து மகிழ்ந்து இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
No comments: