முன்னுரை:
எனது மனதில் தோன்றிய உணர்வுகளை காதல் கொண்டு கவிதையாக எழுதி இருக்கிறேன்.
வாருங்கள் கவிதையை காண்போம்.
எனது கவிதைகள்: தொகுப்பு 14
அப்பா
இன்று நான்சாலையில் வரும் போது
ஏதோ ஒன்று உள்ளத்தை தாக்கியது...
ஒருவகையான
கவலை....
ஒருவகையான
சோர்வு....
வெயிலின் தாக்கம்
என்னுள் தாகத்தை ஏற்படுத்தியது...
தாகம் தீர்க்க
இளநீர் கடையை தேடி
ஒருவழியாக தாகம் தீர்த்தேன்..
இளநீர் விற்பனை செய்த
இளைஞனிடம்....
அய்யா கொஞ்சம்
அந்தப்புரம் சாலையில்
என்னை விடும் மாறு
கூறினேன்....!!
அவரும்
என் கைவிரல் பிடித்து
சாலையை கடக்க உதவினார்...
சாலையை கடந்த
பிறகு அந்த இளைஞருக்கு நன்றி கூறி
என்னால் உங்களுக்கு இடையுறு ஆகிவிட்டது
நீங்கள் பத்திரமாக சாலையை கடந்து
வியாபாரத்தை காணுங்கள் என்றேன்.
அதற்கு அந்த இளைஞன்
அய்யா... உங்களை கண்டதும்
என் தந்தையின் உணர்வு வந்துவிட்டது.
இதே சாலையை கடக்க முயன்ற போது
என் தந்தையை பறிக்கொடுத்தேன்... விபத்தில்..
இன்று பணம் இருக்கிறது
என் பாச தந்தை இல்லை...!!
உங்கள் வடிவில்
அப்பாவை காண்கிறேன்.
நீங்கள் எப்போதும்
உதவிக்காக அழையுங்கள்
உரிமையோடு இங்கே காத்து நிற்பேன்.
பத்திரகாளி
காலையில்
அடுப்படியில் ஒரே சத்தம்...
நான் மெல்ல
கண்விழித்து பார்த்தேன்...
பத்திரகாளி
எங்கள் வீட்டில்
அவதரித்ததை கண்டு அதிர்ந்தேன்..
நான் கூறிய
பத்திரகாளி என் மனைவி..
நேற்று முன்தினம்
வாங்கிய வாழைப்பழம்
கருகிவிட்டதாம்
அதுக்கு இவ்வளவு
அலப்பறை.....!!!
இதில் எனக்கு பழங்கள் வாங்க தெரியவில்லை என்று...
நிமிடத்திற்கு நிமிடம்
குத்திக்காட்டல்
இவளுக்கு உண்மை
தெரியவில்லை...
பழங்கள் வாங்க
தெரிந்து இருந்தால்
இவளையா திருமணம்
செய்து இருப்பேன்.??
நீங்கள் கருத்து கூறுங்கள் உறவுகளே
பரிசம்
கண்களால்
காகிதம் தீட்டி...
கவிதைகளால்
காதலை ஊட்டி...
சிறுக சிறுக
சிகரம் தீட்டி...
பெறுக பெறுக
அன்பை ஊட்டி...
ஆறுதலாய் மனதை வருடி
ஆபத்தாய் கற்பை திருடி
அதுக்குள்ளே சிசுவை ஒழித்த
என்னவனே....
ஒருமுறை என்னை உற்று பார்...
ஒருவகை மாற்றம்
ஒருவகை பதட்டம்
உன் உள்ளே வரும் ...
என்னவனே
என் அருகில் வா..
நீ அன்பாய் தீண்டும்
என் இடையை பார்...
நீண்ட கோடுகள்
நிற்கதியாய் நிற்பதை பார்...
அதிகாலை ரசிப்பாயே
இப்போது ஒருமுறை பார்....
இயற்கையில் பிரசவத்திற்கு
இயலாத உன்னவளை பார்..
சற்று உதவி செய் ..
என் இருகரம் இருக்கி பிடி...
மெல்லிய குரலில்
என் பெயரை கூறிக்கொண்டே இரு...
என் மூச்சு நின்று விட்டால்
கலங்காதே....
இதுவரை நான் உனக்காக ஏதும்
செய்யவில்லை...
இம்முறை தயங்கி என் மூச்சை உள்ளே இழுத்து...
உன் வாரிசை வெளியே தருகிறேன்...
நீண்ட அமைதி...
சார் கையேழுத்து போட்டுவிட்டு கொஞ்சம் வெளியே போங்கள்.
மருத்துவ இல்லத்தின் நீண்ட மெளனம்.
சற்று நேரத்தில் குழந்தை கூக்குரல்...
உறவுகள் மத்தியில் மகிழ்ச்சி....
மருத்துவர் வருகிறார்
உங்களுக்கு பெண் குழந்தை பிறந்தது...
சுகப்பிரசவம் செய்ய முடியாத நிலை
எனவே அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுத்தோம்.
உங்கள் மனைவி மயக்கத்தில் இருக்கிறாள்...
சென்று பாருங்கள்...
கணவன் கண்ணில் கண்ணீர்
எப்போது கண்விழிப்பாள் என்ற கவலை..
ஒருவகை தயக்கத்தோடு
அறுவை சிகிச்சை அறையில் நுழைகிறான்...
உள்ளே ரத்த வெள்ளத்தில் மனைவி...
அவளின் ரத்தம் வயிறு முழுவதும்....
நீண்ட வலிகளோடு
அருகில் செல்ல....
அழகாய் குழந்தை கைவிரல் பிடித்தது..
ஒரு நாழிகை நகர்ந்து
மனைவி மயக்கத்தில் இருந்து விடுப்பட்டாள்..
மாமா யென்னும் பாசக்குரல்
அம்மு யென்னும் அழுகைக்குரல்
நீண்ட கண்ணீர்..
நீண்ட மெளனம்..
மனைவியின் கை
கணவனை அழைக்கிறது..
உன் வாரிசை சுமந்த
வரலாற்று சுவடுகள் பார் என்கிறது..
இனி நான்
இல்லை என்றாலும் கவலை இல்லை..
உன் வாரிசை
வாஞ்சையோடு கொடுத்துவிட்டேன்
என்னுள் பாதியாய் உட்புகுந்து
என்னுள் மீதியாய் வளர்ந்து
முழு நிலவாய் வெளியேறி விட்டாய்..
அழகு மகளாய்.
இப்போ தெரிகிறாத
பெண் எனும் பிறப்புக்கு
அர்த்தம் .
கணவன் கட்டி அணைத்து முத்தமிட
இல்லறம் இனித்தது.
பரிசம் நீண்டது.
யார் முதலில் தீண்டுவது
எச்சில் ஒழுகும்
வண்டுக்கு ...பூ மொட்டு இதழ்
விரித்து நிற்கும் காட்சி...
வெப்பம் ஊட்டும்
வாசனை ...
தப்பை கூட்டும்
யோசனை...
இதழ் விரித்த பூவை
முத்தமிட்டு உறிஞ்ச ஆசை...
வெளிச்சம் தடுக்கிறது
வெப்பம் தவிக்கிறது..
பூவுக்கும் வண்டுக்கும்
நெடிய போராட்டம்....
பூக்கோள இன்பத்தை அனுபவிக்க.
ஆசையோடு பூக்கள்
வாசனையை தெளிக்கிறது..
மீசையோடு வண்டுகள்
மீதி இன்றி சுவைக்கிறது... மொட்டு இதழ் விரியா.... கூதிர் பூவை.
பட்டும் படாமல் யுத்தம் செய்கிறது நித்தம்.
பூ
பொங்கி வழிந்தது
பூக்களின் வாசமடி...
தங்கி ரசிப்பது
வண்டுகளின் நோக்கமடி...
அசைந்தாடும் தென்றல்
அயராது வண்டோடு சண்டையிட்டாலும்..
வண்டோ...
பதிந்த இதழ் மறையாது...
பூவின் இதழ் மடியாது...
பொங்கி வரும்
தேனை உறிஞ்சி...
மகிழ்ந்த பின் வண்டு
பூ விடம் கூறியதாம்
பூவே உன் வேர்வை வாசம் ...
இத்தேன் சுவையில் கண்டேன்...
இந்த பிரபஞ்சத்தில்
கொடியது மாது இதழ் என்றே நினைத்து இருந்தேன்...
அந்த மாதுவுக்கே
வாசம் தரும் இதழ் நீயென அறிந்த பிறகு..
உன்னையே நெனச்சு உருகி போனேன்..
வெட்கம்
பூமியில்
பூத்து குலுங்கும் பூவே...
நீ பூப்புனிதம்
அடைந்து விட்டாயோ...
உன்னை
வருடி வரும் தென்றல்...
வனப்பான வாசனையில்
வாசம் வீசுதடி.
ஏரிக்கரையில்
நீ எட்டி பார்க்கையில் நினைத்தேன்...
நீ சத்தம்மின்றி சமைத்து நிற்கிறாய்யென்று.
வெட்கத்தை பார் ...
உன்னுள் பொங்கி விழிந்திடும் தேனை பொத்தி வைத்துக்கொள்...
பூக்களின் வியர்வை
வண்டு ருசிக்கலாம் .
சிற்பி
தித்திக்கும் தினையே
திகட்டாத இனிப்பே...
பட்டும் படாமல்
இதழை கடிக்கும்
இன்னிசை கொடியே...
காதல் ரசமே
ஓவிய அழகே
நீ பார்த்ததும்
பரவசம்....
உன் பார்வையில்
தனி சுகம்...
பெண் எனும் போர்வையில்
பிறந்து இருக்கும்...
அழகியல் சித்திரமே...
உன்னை சிலை
வடித்த சிற்பி யார்...
இரவில் இருவர் உரையாடல்...
உன்னை மிச்சம்மின்றி
உண்ண போறேன்......!!
முடிந்தால் சத்தமின்றி
உண்...
வெள்ளி கொலுசு சத்தம்
வீதியெங்கும் நிலவின் எச்சம்
இரவுக்கும் பகலுக்கும்
இடை விடாது இன்ப சத்தம்...
இங்கே யார் முதலில்
விழுங்கி பிரதிபலிப்பது யென்னும் யுத்தம்.
நெடுக உழைப்பு
நெத்தியிலே தவிப்பு
இரவை நிலவு விழுங்க...
இடைவெயில் சிறிய மாற்றம்
நிலவை இருள் விழுங்க
இதழ் விழியில் பெரிய மாற்றம்.
இனிப்பான பனித்துளியும்
இளந்தென்றல் நீர்த்துளியும்
மிதிர்வான கட்டில் அறை ஆகும்..
அதன் மேலே
மிதக்கவிட்டு நிலவின் நிழல்
இன்பத்தில் திளைத்து
இளமையில் ருசித்து
இருளை விழுங்கும்...
இரவின் நிழலோ
நிலவினை ருசித்து
வெளிச்சத்தை விழுங்கும்.
முதலில் தீண்டுவதும்
பிறகு தூண்டுவதும்
இயற்கையின் அழகு.
இந்த கவிதை இரவில் நிலவுக்கும் இருளுக்குள் இருக்கும் உறவை உவமையாக கொண்டு எழுதப்பட்டது .
தூது
அவள் முகம் நிலவு
அவள் நிறம் வினவு..
பாலுக்கு வெண்மையை
கொடையளித்த பாதகி...
உன் கட்டுமர அழகுக்கு
கரசல்காடு மயங்கும்..
உன் பொற்கிழி பார்வைக்கு
மனக்காடு மயங்கும்...
மனசை மசைக்கும்
மா இதழ் சொந்தக்காரி...
உன் மடிசாய
தூது விடுகிறேன்...
தூவான சாராலாய்
என் மனதை நனைக்க வந்து விடு...
காத்து இருக்கிறேன்
வறட்சியுடன்.
வெட்கத்தில் காடு
புள்ளி மான் துள்ளி ஒட...
பின்தொடர்ந்து சிங்கம் ஒட..
காட்டுக்குள் காதல் ஒலி சத்தம்...
வெட்கத்தில் காடு சாய...
பூக்களும் மெல்லச் சாய...
தாங்கிய தென்றல்
மெல்லிய மணம் வீசியது...
காட்டின் ஈரமே காற்றில் கலந்து...
ஏட்டில் சரித்திரம் காட்டில் பதிந்து..
தாய் மானை வேட்டை ஆடிய சிங்கம்
அதன் குட்டி மானை குழந்தையாக
பார்த்த தருணம்... மெல்ல பிறந்தது .. தாயின் உள்ளம்... காட்டில் வளர்ந்து பெண்ணின் நேயம்.
பெண்ணாக உணர்ந்த
சிங்கம் புள்ளி மானை குழந்தையாக
வளர்த்தது.
மத்திமம்
பாத்திரங்கள்
சத்தம் ஐன்னல் வழி நித்தம்..
என் பக்கத்து வீட்டில்...
தாயுக்கும் மகனுக்கும் யுத்தம்...
தாய் பருவம் வந்த தன் மகனுக்கு திருமணம் செய்து முடிக்க துடிக்கிறாள்...
மகனோ மறுக்கிறான்...
மத்திமம் செய்ய மாமா வை அழைக்கிறான் மகன்.
குடும்பத்தில் யுத்தம்
தாய் தவிக்க...
மகன் வெறுக்க...
கண்ணீரும் கண்ணத்தின்
ஆடையாய் மாறிய தருணம்.
தாயும் மாமனும்
வாழ்க்கையில் எது வெற்றி என்று புரிய வைக்க தவிக்கிறார்கள்...
முடிவில் புத்தனையும் ஏசுவையும் சாட்சிக்கு இழுத்து...
புத்தன் வாழ்வு முற்றம் பெற்றது.
ஏசுவின் வாழ்வு முற்றம் பெறதாது..
இங்கே குறலை
கூட தெய்வமாய் அழைக்க திரு என்று இனைப்பதே...திருக்குறலாய் ஆனது..
அதில் வாழ்வியல் சந்தம் இருப்பதால்..
உனது வாழ்வியல் வெற்றி என்பது
திருமண பந்தத்தில் இருக்கிறது...
இருமனம் இனைந்த திருமண பந்தத்தில்
தான் இந்த பூக்கோள வாழ்வு ஆரம்பம் ஆகிறது...
பிள்ளைகள் பெற்ற பின்
வாழ்வு முற்றம் பெறுகிறது.
ஆணும் பெண்ணும் இணைதல் என்பது
பிரபஞ்சத்தின் இனிப்பு...
இனிப்பை வெறுப்பவர்கள்
விரைவில் மறைகிறார்கள்.
விரும்பி சுவைப்பவர்கள்..
நீண்டு வாழ்கிறார்கள்..
காலத்தே கல்யாணம் செய்து கொண்டு வாழ வேண்டும் என்பதே இறைவனின் எழுதப்படாத கட்டளையாகும்.
இயற்கையின் விருப்பமும் இதுவே தான்.
முடிவில் மகன் சம்மதிக்க
மாமன் மகிழ்ச்சி பொங்க
தாய் அரவணைப்பில்
அழகாய் திருமணம் நடந்தது.
பூ
அழகாய் மனம் வீசி
ஆனந்தமாய் அசைந்து ஆடி
அற்புதமான உடை அனிந்து...
அள்ளிச்சூடும் வெள்ளி மலரே...
உன் அழகை
கண்ட போது உள்ளம் இனித்தது..
உன் அழகை
தீண்டும் போது ஏக்கம் தனிந்தது..
சமச்சீராய் வளர்ந்தவளே!!!
சமயம் பார்த்து சமைந்தவளே...!!
சாய்ந்து ஆடும்
உன் அழகில் என் சோகம் கலைவது ஏனோ...
உன்னை பார்த்தவுடன் பரவசம்
மனதில் அள்ளி அணைத்த சுகம்..
அழகின் ரகசியம்
அந்தரங்க பூஜ்யம்
தொட்டதும் தீ மூட்டும்
தேகம் கொண்டவளே...
அழகான பூவே...
அதிகாலை பிறப்பவளே..
கடவுளின் கால் அடியில்
தெய்வம் ஆகிறாய்..
பெண்ணின் தலைமுடியில்
வள்ளுவன் மூன்றாம் பால் ஆகிறாய்..
மணக்கும் மல்லிகையே...
உன் பெயர் தான் என்ன.
விவகாரத்தும் ஏக்கமும்
என்னவளை
கண்ணால் கண்ட போது ஏதோ சுகம்...
அவள்
காதலை கூறிய போது ஏதோ சுகம்...
அவள்
கருவிழி பார்வையில் ஏதோ சுகம்..
அவள்
சம்மதிக்க துனிந்த போது ஏதோ சுகம்.
அவள்
கைவிரல் தீண்டும் போது ஏதோ சுகம்..
அவளுக்கு
பொட்டு வைத்த பொழுது ஏதோ சுகம்..
அவளுக்கு
தாழி கட்டிய போது ஏதோ சுகம்..
அவள்
கணவன் நான் ஆன போது ஏதோ சுகம்..
அவள்
சேலை வருடும் போது ஏதோ சுகம்..
அவள்
மார்பில் தலை சாயும் போது ஏதோ சுகம்..
அவளை
கட்டி அணைத்து போது ஏதோ சுகம்..
அவள் மனைவியாய் ஆன போது ஏதோ சுகம்...
அவள்
என் குழந்தை சுமந்த போது ஏதோ சுகம்..
சுகம் சுகம் எல்லாம் சுகம்
இவையாவும் அவளோடு இருந்த போது..
இப்போது அவள் தூரத்தில்
அவள் நினைவுகள் தரும் சுகத்தோடு நான் தனிமையில்.
நீ பேசு
என் உயிரே.. நீ பேசு..
உன் குரல்
ஓசை கேட்கவே இந்தபிறவி...
நீ பேசு
என் கனவே ..நீ பேசு..
உன் முகம்
காணவே இந்த கனவு..
நீ பேசு
என் மலரே ...நீ பேசு..
உன் ஓசை
கேட்கவே இந்த தவிப்பு..
நீ பேசு
என் உறவே ...நீ பேசு
உன் முக
அசைவை ரசிக்கவே இந்த கண்கள்..
நீ பேசு
என் தமிழே ...நீ பேசு
உன் இடை
நடை காணவே இந்த எழுத்து...
நீ பேசு
என் முகிழே...நீ பேசு
உன் அழகியல்
அந்தரங்கம் காணவே இந்ததவிப்பு ..
நீ நான் அன்பு
இதுவே போதும்...
என் வாழ்வில்.
துயர் தீர்க்க
கதிரவன் கண் விழிக்கும் முன்பே
என் தாய் அவள் கண்விழித்து..
ஐந்துக்கும் பத்துக்கும்
களனியில் கால் பதித்து..
அயராது உழைத்து
நித்தம் வேர்வையை
சிந்தி..ஒட்டிய வயிறோடு
வறுமையின் தாக்கம் ஓழிய..
களவாணி பயலாய் சுற்றி திரிந்த
என்னை பட்டப்படிப்பு படிக்க வைத்த தாயே..
உன் துயர் தீர்க்க
அடியேனும் புறப்பட்டேன்
பட்டணத்தை நோக்கி....
கலங்காதே என் தாயே
கலங்காதே...
பணம் என்னும் அரக்கனை நானும் வென்று உன் காலடியில் மண்டியிட்டு முத்தமிட வைப்பேன்.
பொண்ணி நதி
தூரத்தில் ஒளி வீசும்
ஓலை வீடு தான்... நான் கட்டிய அரண்மனை...
என் வீட்டில்
நானும் மனைவியும் மட்டுமே...
எங்களுக்கு பிடித்தது தனிமை...
அவளும் நானும் நெடுக பேசினாலும்
ஆனந்தமாய் அன்பு ... அந்த குற்றாலத்தின் அருவியாய் பொங்கி வழியும்...
அவள் காதல் அவ்வளவு இனிமையானது..
அவள் கைவிரல்
தீ மூட்டும் தீச்சுடர்..
அவள் கண்கள்
பவளம் தீட்டிய பெற்சுடர்
அவள் கூந்தல்
வளைந்து ஓடும் பொண்ணி நதி.
அவள் தேகம்
மெய்யூட்டும் சந்தன பீழை..
மணக்கும் மல்லிகையே
மாமா நான் தேன் உண்ணும் பூச்சியாய் உண்ணுள் ஊர்ந்து...
ஓவியங்கள் வரைந்து
பட்டம் பெறலாமா....
முடிவுரை:
தமிழ் காதல் கவிதைகள் தொகுப்பு எப்படி இருந்தது உங்கள் பொன்னான பதிலை பதிவு செய்யுங்கள்.
No comments: