தமிழ் கவிதைகள் தொகுப்பு- 13| Tamil Kavithaigal collection -13

முன்னுரை:

குறிஞ்சிக்காடு எனும் என் புத்தகத்தில் இருந்து உங்கள் பார்வைக்கு சில கவிதைகளை பதிவு செய்து இருக்கிறேன் .

சிறந்த பத்து கவிதைகள்: தொகுப்பு13


வாழ்க்கையின் வெற்றி ரகசியம் 

பலமுறை தோற்ற பிறகும் 
ஏதோ ஒரு இடத்தில்...
எனக்காக வெற்றி இருக்கிறது
என தேட துவங்குனேன் ..
முடிவில் தான்
தெரிந்து கொண்டேன்
அந்த இடம்
என் மனம் தான்
என்று.

இலக்கு 

தோற்ற பிறகும்
முடியுமென நம்பு...!!
உன் உள்ளத்தில்
அம்புகள் புறப்படும்..!!
இலக்கை தீர்மானித்து கொள்...!!
அதை நோக்கி ஏவு...!!
தோல்வி தோற்று ஓடும்
வெற்றி தேடிவரும்.


திறமை 

திறமை இருந்தும்
உனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது
என்றால்......!!!
கலங்காதே
மெளனத்தை வெளிக்காட்டு
கோபத்தை மனசுக்குள் வை
உனக்கான நேரம் வரும்
அப்போது
அனைவரையும் கரு அறு.

அன்புள்ள அப்பா

நீயே என் உருவம்...!!
நானே உன் பிம்பம்...!!
நம் வீட்டு விழா நாட்களில்
உறவுகள் என்னை பார்த்து
அப்பா போல் இருக்கிறாய் என்று
கூறும் போது...!!
பட்ட மரத்தின்
உதிரும் சருகாய் ...
உங்கள் பசுமை மரம் 
தேடி அழைக்கிறேன் ...
மீண்டும் என் கண்ணில்
வாங்க அப்பா..
ஏன் மறைந்தீர்கள் .
என்னை தனியே விட்டு.

அவள் நினைவு 

மனைவி என்னும்
சொல்லுக்கு மகத்தான
உயிர் அவள்!!!
மறுபடியும்
எனக்காக அவள் பிறக்க வேண்டும்
எத்தனை பிறவி எடுத்தாலும்.

எங்கோ பிறந்து
எனக்காய் வளர்ந்து
என் கைவிரல் பிடித்தம் பொழுது
எனக்குள் ஆயிரம் நம்பிக்கை பிறந்தது..!!
அழகான வாழ்வுக்கு
அன்பான மனைவி தேவை
என்னவளோ..!!
அன்புக்கே அன்பாய் 
பிறந்தவள்...
நானோ கருப்பு
என்னவளோ சிவப்பு
எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை
எப்போதும் ஒழிந்து இருக்கும்...
ஆனாலும் 
அவள் கைவிரல் என்னை தனியே
விட்டது இல்லை...!!
ஆயிரம் முறை
வெளியே பயணம்
அவள் கைவிரல் என்னுள்..!!
கருப்பு அழகன் என்பாள்
கைவிரல் ஓவியம் என்பாள்
மீசை வைத்த மாவீரன் என்பாள்
என் புருஷன் வெள்ள மனசுக்காரன் என்பாள்....!!
அவள் ஆசையாய்
கூறும் போது...
ஆனந்தம் உள்ளத்தில்
அள்ளி அணைத்து முத்தமிட தோனும்...
அவள் கவிதையில் அழகாய் வாழ்கிறாள்
நான் கற்பனையில் அவள் நினைவாய் வாழ்கிறேன்.


தனிக்குடித்தனம் 

அவளும் நானும்
அதிகம் பேசியது இல்லை...!!
அவள் அசைவுகள்
கூறும் மொழியியல் அறிவேன் நான்.
என் உடல்மொழி அறிவாள் அவன்..
கணவன் மனைவி உறவு
என்று நினைத்தே இருவரும் இணைந்தோம்.
பிறகு தான் தெரிந்தது
உறவு இல்லை அவளே உயிர் என்று.
ஆசையாய் அவள் என்னிடம்
அதிகம் பேசியது இல்லை...
விரும்பியதை கூறியதும் இல்லை..
எப்போதும் வீட்டில் வேலை வேலை வேலை..
அவள் கைவிரல் ரேகை கூட அழிந்து போகும்
அவ்வளவு வேலை....!!
கண்ணெதிரே அவள் படும் கஷ்டத்தை
என்னால் பார்க்க முடியவில்லை.
தனிக்குடித்தனம்
ஏன் வந்தோம் என்று நினைக்க தோன்றுகிறது...
அவள் படும் கஷ்டத்தை 
பேசிய மொழி பேசும் காற்றில்..
என்னாள் சுவாசிக்க முடியவில்லை..!!
தாய் இருந்தும்
தங்கை இருந்தும்
என்னையே தூக்கி வளர்த்த அக்கா இருந்தும்
அப்பா இருந்தும்
அண்ணன் இருந்தும்
நான் மட்டும் ஏன் தனிக்குடித்தனம்.
கஷ்டத்தை கடக்கும் பொழுது
உறவுகளோடு வாழ்ந்து கடத்துங்கள்.


தீராத காதல் 

தீராத காதலை 
தீண்ட ஆசை !
தீ சுடரே 
என் அருகில் வா...!!
தினம் தீண்ட
தீயாய் துடிக்கிறது மனசு!!
திரி இன்றி எரிகிறது வயசு!!!
தீ மூட்டும் 
கூந்தல் சுடரே!!
உந்தன் தேகம் 
என்ன மெழுகா!??
கண்டதும் காதல் தீ
காட்டுத்தீயாய் பரவுகிறது.

மனைவி 

ஏக்கமாக இருக்கிறது
என் உயிரே !! உன் உயிர் காணாமல்!!!
தூரத்தில் வாழ்க்கை
துயரத்தில் இதயம் ...
நித்தம் கலங்குகிறது
சித்தம் உடைகிறது!!
என்னோடு வாழவே
உன் கணவன் நான் ஆனேன்...
ஆனால்
இன்று நீ எங்கோ ..
நான் எங்கோ...
ஆசையோடு அருகில் வந்தாய்
ஆர்வமாய் கைபிடித்தாய்
ஏனோ ...
வாழ்க்கை நம்மை பிரித்து வைக்கிறது..
வாழ ஆசைப்பட்டு
அடைந்தேன் உன்னை!!
நீயோ அங்கே 
நானோ இங்கே...
பணம் எனும் பாவி ....
நம்மை பாட படுத்தவில்லை....
உறவு எனும் கூட்டம் 
நம்மை ஒன்றவிடாமல்
தடுக்கிறது.
காத்து இருக்கிறேன்
கண்மணி...!!
காலங்கள் ஓடலாம்
ஒருநாளும் நம் காதல் ஓடாது உயிரே.

தமிழன் 

கேளிக்கை கூட்டமா?
டேய் அவன் யாருடா
உன்னை கேளி செய்ய....!!
உன்னை போல் அவனும் ஒரு ஆளு தானடா....
தட்டிவிட்டு... 
உன் பாதையில் நீ தான்டா ராஜா...!!
வெற்றியோடு வாடா...!
எதற்கும் அவனுக்கும்
அஞ்சாதே.
நீ தமிழன் யென்னும்
பெரும் கூட்டத்தின் பிள்ளை.
வெற்றியோடு வாடா.

வாழ்க்கை 

கண்ணோடு கவி பாட 
என்னவளே அருகில் வா...
நீ சிரிக்கிறாய்
முத்துக்கள் மிளிர்கிறது 
முந்தானை ஜொலிக்கிறது...
முன்னேறும் உத்வேகம்
உன்னாலே பிறக்கிறது...!!!
ஆயிரம் தடைகள் வரலாம்
அனைத்தும் உடைத்து
உன் முகம் காண
என் உள்ளத்தில் ஏக்கம்.
வலியில்லா விலையில்லா
வாழ்க்கை....
இருந்தும்
மனித இனம் மாறிவிட்டது...மகிழ்வதற்கு 
என் பேனாவால்
அவர்களை திருத்த முடியாது...
எனக்கு பிடித்தவளை தொலைக்க முடியாது...!


தலைக்கனம்

தாயின் கருவறையில்
தவழ்ந்தப்பொழுதே....
நான் தலைக்கனத்துடன்
தவழ்ந்தேன் ...!
பத்து மாதம் தலைக்கு ஏறியது போதை!!
என்னை விட சிறந்தவன் 
இனி இப்பூமியில் பிறக்கப் போவது இல்லையென்று.
பிறந்த மறுக்கனமே 
உணர்ந்தேன்....""
தந்தையின் பாசமே
இவ்வுலகில் தலைச்சிறந்ததுயென்று.

பெண் சிறகு 

நான் 
அடைய நினைத்த 
சுதந்திரத்தை மீண்டும் 
ஒருமுறை எட்டி பிடிக்க....
மீண்டும் எழுதிட வேண்டும்
ஒரு கீதம் ‌...
அதில் நான்
இறகுகள் உடைய
பறவையாக .... 
இவ்வுலகை அளக்க வேண்டும்
சிறகுகளால் ....!!

( House wife feeling lyrics)


வெற்றி 

எதிலும் தோல்வி
எப்பவும் சோகம் 
மனதில் கவலையுடன் இருக்கும் உங்களுக்கு ...
ஒரு கதை கவிதை வடிவில்...
கண்ணுக்கு எட்டிய தூரம் வரை
வண்ணத்தை கொடுக்கும் வானத்தை பாருங்கள்....!!
அதில் ஆயிரம் உருவங்கள் ஒழிந்து நிற்கும்
ஓவியத்தை பாருங்கள்..!!
நீங்கள் பார்த்ததும் வடிவத்தை மாற்றும் காட்சியை பாருங்கள்...
சற்று நில்லுங்கள் 
சிந்தனை செய்யுங்கள்.!!
காட்சி மாறியதை உணர்ந்தீர்களா ?
காற்றின் தாக்கத்தை
தாங்க முடியாத மேகங்கள்
தன்னை மாற்றிக் கொள்ளலாம்....::
காற்றை கடந்து நிற்கும்
வானத்தை பாருங்கள்..!!
ஒருபோதும் ஒருபொழுதும்
தன்னை மாற்றிக் கொள்ளாது.
இங்கே வானத்தின்
வெற்றி என்பது வானத்திடம் உள்ளது 
உன் வெற்றி என்பது பிறரிடம் இல்லை...
உன்னிடமே இருக்கிறது.

அன்பே 

நினைப்பதில்லை என்று வருந்தாதே
என் நாழிகை நகர்ந்து கொண்டிருப்பது
நம் அழகிய நினைவுகளில் தான் உயிரே
கையளவு இதயத்தில் கடலளவு காதலை நிரப்பி மூழ்கடிக்கும் சித்திரமே...
தொலைதூர நிலவாய் நீ
பின் தொடரும் மேகமாய் நான்
" இரகசியங்கள் ஏதும் இல்லை
இருந்தும் ஏன் நினைவுகளால் நிதமும் படையெடுப்பு"
என்னை சுற்றி நீ இல்லை...!
உன் நினைவுகள் இன்றி நான் இல்லை "
ஆயிரம் முறை சண்டையிடு
அடுத்த நொடி முத்தம்மிடு
" சித்திரங்கள் உருவாக
சிற்பி யிடம் அடிவாங்கும்
முடிவில்
சித்திரங்கள் அழகுயென்று புகழப்படும்..!!
உருவாக்கிய சிற்பி சிதைந்து போவார்.

மனைவி 

காதலியே கார்முகிலே 
காலம் தந்த இளம்தளீரே
நீந்தும் ஓடையில்
உன் முகம் உவமை கண்டேன்.!!
ஒரு நொடி சிலிர்த்து
மறுநொடி மயங்கி போனேன்...
என்ன அழகு 
என்ன அழகு 
என் மயிலே....!! நீ என்ன அழகு 
உப்பு நீரில் வெட்கி நிற்கும் படகாய்
துடுப்பு டன் 
உன் அழகு ஜொலிக்க...!!
மனசோ கட்டி அணைக்க
இடியாய் இடித்தது...!!!
தவியாய் தவித்தது..
நான் கண்ட 
காட்சிகள் கலையாமல்
கருவிழி காத்தது...!!
என் மனசோ
உன் முழு அழகை
படமாய் பிடித்தது...
ஓவியம் இல்லாத
என் இதய அறையில்
ஓவியமாய் வந்தவளே
ஒரு நொடி பொழுதும் 
என்னை கடந்து செல்ல அனுமதிக்க மாட்டேன்...
என் அழகிய இதயத்தில்
சித்திரமாய் பதிந்ததவளே
என் வாழ்க்கை ஓவியம் நீ 
இனி
Download செய்வதும்
Delete செய்வதும்
ஆண்டவன் குற்றம்.
ஆகையால்
உன்னையே கரம் பிடிப்பேன்.
மனைவியாக. 

ஆசை 

ஆசையடி உயிரே ஆசை!
உன் அழகியல் இதழில் ஆனந்தமாய் தீண்ட ஆசை...!!
உன் மொழியியல் மயக்கத்தில் மடிசாய ஆசை...!!
உன் கருவிழி கருமையில் கண்ணுறங்க ஆசை....!!
உன் சேலையின் மடிப்பில் காற்றாக ஓழிய ஆசை...!!!
உன் கண் புருவம் உயர்ந்த போது கட்டில் அறை ஆசை....!!
என்னவளே எனக்காய் பிறந்தவளே!!!
ஆசை ஆசை ஆசையென படுகிறேன் பாடு...
அள்ளி அணைத்த சுகம் 
உன் ஓவியத்தை கண்டதும் வந்ததடி..
தீராத காமத்தை
தீர்த்தம் கொண்டு உன் திருமேனி முழுவதும்
பூசிவிட ஆசை...!!
தூரத்து நிலவின் நிழலை
உன் மேனியில் பிரதிபலிக்க ஆசை.
இந்த பேசாத ஓவியத்தை
பேச வைக்க பேராசை என்னவளே.

அப்பா

நீங்கள் தானே என் பந்தம்
நீங்கள் தானே என் சொந்தம்
நித்திரை முழுவதும்
பத்திரமாய் பார்த்த உத்திரம் ..
ஆம் 
எங்கள் வீட்டு உத்திரம்...
அப்பா 

ஏழை வீடு
ஓழையின்
 ஓட்டைக்குள் ஆயிரம் வெளிச்சம் 
இரவுகளின்
நட்சத்திரமாய் ஒளிரும் 
நிலவு...
எங்கள் வீட்டில் மட்டுமே
காண கிடைக்கும் அரிய காட்சி...!!
எங்கள் வீட்டில்
பாத்திரங்கள் ஜொலிக்கும்!!!
பட்டினியில் வயிறு வலிக்கும்!!!
எத்தனையோ வேலைகளை
என் அப்பா எனக்காக செய்து விட்டார்...
இருந்தும்
வருமை கோட்டின் விளிம்பினை கூட 
தொட இயலவில்லை!!!!!
எது எப்படியோ
நான் வருந்தியதும் இல்லை...!!
கலங்கியதும் இல்லை...!!
ஏன் தெரியுமா!!!
என் தந்தையின் மடியே
என் சொர்க்கம்...!
என் தந்தையின் பேச்சே 
என் பாடல் ...!!
என் தந்தையின் விரலே
என் அரன்...!!
என் தந்தையின் உழைப்பே
என் உயிர்....!
என் தந்தையின் கரமே
என் படிப்பு...!!
அவரின் கனவே 
என் வெற்றி...
என் வெற்றியே
அவரின் சொத்து.
இதுவே இலக்கு...
முன்னே தந்தையின் வடுக்கள்
பின்னே பிள்ளையின் முயற்சி
ஏழையாக பிறந்து விட்டோம்
வசதியான வாழ்க்கையை 
வாழ்ந்து பார்க்காமல் சாகமாட்டோம்.


அந்தரங்க தேர் 

தேன் கிண்ணம் !!
அவள் கண்ணம்!!
பாலச்சுழை!!
அவள் இதழ்கள்...!!
நறுமணம் 
நங்கையின் வாசம்!!
தூரத்தை குறைக்கும் 
குறுகிய பார்வை....!!!
காதலை தீண்டும் 
கருவிழி பார்வை...!!
ரசிக்க காத்து கிடக்கும்
ஆகாய தாமரை...!!!
அள்ளி இடை....!
அழகான நடை...!!
ஏக்கத்தை தூண்டும் முன்னழகு...!
கண்ணால் காமத்தை தூண்டி
விழிகளின் மேலே மிதக்கவிட்டு..
விரல்கள் மூலம் இனிப்பு ஊட்டும் 
தேன் கிண்ணம்....!!!
அள்ளி பருக
இனிக்கும் அவள் கண்ணம்...!!
மஞ்சள் பூசிய தோல்
மனசை மசைக்கும் தேள்...
கொட்டாத தேனீ 
கொடிமுல்லை வா நீ
கைவிரல் அழகுக்கு 
கரிசல்காடு மயங்கும்
நெற்றியின் அழகுக்கு
நெற்கதிர் மயங்கும்...
அந்தரங்க தீட்சனி
பஞ்சை தீ மூட்டும் தீச்சுடர் நீ ‌..
திரி இன்றி எரிகிற தீச்சுச்வாலை நான்...
எண் கண் புருவம் 
உயர்த்தி உன்னை கண்ட காட்சி....
வள்ளலார் அருளிய தீபமாய்
மனசில் இருக்கிறது உயிரே...!!
அழகுக்கு அழகு சேர்க்கும்
அந்தரங்க தேரே i love you ❤️💕

கருத்த குட்டி 

கட்டழகு கருத்தப்புள்ள
கம்மா கரை போகையிலே!!
சுட்டு எரிக்கும் சூரியனும்
சுகம் கொண்டு அணைக்கையிலே !!
மத்தி வெயில் மறைந்து போகும்
மரிக்கொழுந்து வாசம் வீசும்..
முல்லை மருதம் நெய்தல் பாலை
நான்கு நிலக்கிழர்கள் நாடி வந்து
உன்னை கேட்டாலும்....
இசைந்து விடாதே இனியவளே
இமைக்காமல் காத்து நிற்பேன் .
அள்ளி அணைத்த சுகம்
நெஞ்சோடு நிக்கையிலே...
எத்திசையில் எதிராக படைக்கொண்டு வந்தாலும்....
பம்பரமாய் சுத்தவிட்டு
வெற்றி கனி பெற்றுவிடுவேன்...
கலங்காதே கலங்காதே
காதலியே கார்முகிலே....
உன் முகம் காண
இரவென காத்து நிற்பேன்.
நீயே என் முழு நிலவு.

அன்பே...!!

இளமைக்கு
ஆடையாகும் பெண்மயிலே...
உயிர்ச்சிலையே ...
உத்தமியியே....
கற்பனையில்
கடல் கடந்த பரிசலே...
தூரிகையே...
வனத்தின் வனப்பே!!
காட்டின் காமமே...
கல்யாணி ராகமே..
காதல் கடலோ நீ...
சோலையிலே பூத்தனிந்த பூவே...
யாரடி நீ
உச்சி முதல் பாதம் வரை
பதம் செய்யும் பாதகி...
நான் தொட்டு ரசிக்க பூக்க நிற்கும் மொட்டு...நீ தானே...!!
சொக்கி நிற்கும்
வெள்ளிக்குடமே....
அமுதை சுரக்கும்
ஊற்றே.....
" ஆளுமை செய்யும் பெண்மை"

அறும்புகள் துளீர 

காதல்
பார்வையில் பரிசம் அடைந்து 
அவள் விழி வழி கடந்து
இதயத்தின் அறையை தட்டி
இருப்பிடம் கேட்குமாம்....

இனியவள் இணங்க
இதழ்களும் சுவைக்க...
அரும்புகள் துளிர்க்க....
ஆனந்தம் கூத்தாட...
ஆசையின் வெளிப்பாடு
காதலாம்.
உலர்ந்த சருகனெ
உதிர்ந்த நெஞ்சம்...
உன்னை கண்டதுண்ணால்
ஊஞ்சல் ஆடும் ஓவியம் ஆகும்...
உறவே உறவே
ஒருமுறை கூறு...
உந்தன் காதல் 
கவிஞன் நான் தான் என்று.


இனிப்பிலும் இனியது 

அழகியல் உணர்வு
ஆனந்தம் உள்ளத்தில்
அதிசயமாய் நிகழ்வுகள்
வண்ண விளக்குகள் புடைச்சூழ
கட்ட கருப்பழகி
காதல் ஒளி வீசயிலே....
பந்தல் குடைப்பிடிக்க
பன்னீர் துள்ளி தெரிக்க
குங்குமமும் சந்தனமும்
தன் பங்குக்கு வாசம் வீச...
உற்றார் உறவினர் நண்பர்கள் மத்தியில்
நாதஸ்வரம் தவில்
ஓங்கி ஒழிக்க....!!
பச்சரிசி முத்தாக
பலர் கையில் 
விலகி விட்டுத்தெரிக்க.
பட்டம் கட்டிய மனவாளன்
கட்டழகி மேனி மொத்தமும்
பச்சரிசி முத்தம்மிடு
உறவுகளே சத்தமிட
ஒருமனதாகத் ஒன்று சேர்ந்தோம்.
திருமண பந்தத்தில்....
திகட்டாத இனிப்பு
பார்க்காத பழங்கள்
பல வண்ணத்தில் உணவுகள்
தோரணங்கள்..வான வேடிக்கைகள்
ஊர்திகள்... சடங்குகள்..
தங்கத்தில் உடைகள் ...
தாமிரத்தில் பாத்திரங்கள்..
வீம்புக்கு வெள்ளி உபகரணங்கள்
நீண்டு செல்லும்
என் கண்ணின் பார்வையில்
என் தாய் தங்கை தந்தை தமையன் 
உழைப்பு ஒழிந்து இருப்பதை உணரமுடிகிறது....!!
இவ்வளவு கடன்கள் பெற்று 
கிடைக்கும் மகிழ்ச்சி 
மகிழ்ச்சி இல்லை...
என் தந்தையின் மடியும்
என் தாயின் மடியும் தரும் மகிழ்ச்சி
இனிப்பிலும் இனியது..!
முடிந்த வரை
மனதை விலை பேசி
வாங்க திருமணம் யென்னும்
மார்க்கெட்டை வீதியெங்கும் திறக்காமல்.
தமிழர் உறவு இனைப்பு முறையை நாடெங்கும் பரப்புங்கள்.
நம்மவர்கள் கடன் இன்றி வாழட்டும்.


அழகியல் ஓவியம்

அழகாய் மாற காரணம் என்னவோ.....!!
தங்கத்தை வயிற்றில் சுமப்பதால்
தங்கத்துக்கு இந்த வனப்போ.....!!
என் கண் முன்னே
நடமாடும் நந்தனமே....
முதல் மாதம் 
உயிராய் வளர்ந்தாய்...
இரண்டாம் மாதம்
சோர்வாய் வளர்ந்தாய்...
மூன்றாம் மாதம்
உறக்கத்தில் வளர்ந்தாய்...
நான்காம் மாதம்
நடுக்கத்தோடு வளர்ந்தாய்...
ஜந்தாம் மாதம் 
அஞ்சியே வளர்ந்தாய்...
ஆறாம் மாதம் 
ஆர்வத்துடன் வளர்ந்தாய்...
ஏழாம் மாதம்
எழுச்சியோடு வளர்ந்தாய்..
எட்டாம் மாதம் 
எட்டி உதைத்து வளர்ந்தாய்...
ஒன்பதாம் மாதம்
முன்னே பின்னே நகர்ந்து வளர்ந்தாய்...
பத்தாம் மாதம்
பத்திரமாய் பிறந்தாய்...
அழகுக்கு அழகாய்
என் உயிராய் 
அவள் உருவாமாய்
எங்களின் பிம்பமாய்
தாய்க்கு சேய்யாய்
தங்க கிளிக்கு மகளாய்
தையல் மத்தியில்
தவழ்ந்த உறவே சிசுவே
நீயே எங்கள் உலகம்.

மகிழ்ச்சி 

கண்ணின் 
கடைப்பார்வை காதலியே
காட்டவிட்டால்
மண்ணின் 
மலையும் மாவீராய் மடியும் ‌.
அன்பே 
உன் மெய்த்தொட்ட
இன்பமெல்லாம் ...
என் கைவிரலும் அறியும்..
காதல் நினைவு வந்தால்
கைவிரலும் இனிக்கும் 
பொங்கு தேனாய் 
அவள் தேகம் மிளிரும் 
மிளிரும் தேகத்தில்
காதலும் வடியும்
வடியும் அங்கத்தை 
எனதுடல் தழுவ ...
அலைபுரளும் அவள் அங்கம்
அகத்தில் மலரும்.
மலர்ந்த அவள் இதழ்கள்
மறுபடி அழைக்கும் ...
நெருங்கி போனால்
அவள் இருகரம் தடுக்கும்
இளமைக்கு விருந்தாய்
அவள் விழிகள் கிடைக்கும்.
நினைவுகள் அனைத்தும்
அழகாய் இனிக்கும் 
இதுவே மகிழ்ச்சி
இதுவே மகிழ்ச்சி..


போதையடி

போதையடி
உயிரே போதை...
தேவையடி
உயிரே தேவை...
உன் ஒருவிழி கண்டதும்
ஒருவகை போதை...
உன் மறுவிழி கண்டதும்
மறுபடி போதை...
மதுவின் போதை
போதாது பூமியிலே...
மாதுவின் போதை
பேறாது ஓய்வதில்லை...
உன்னை கண்டதுண்ணால்
ஏறுதடி போதை...
வண்ண மரிக்கொழுந்தே
வாசம் உள்ள பூங்கரும்பே...
பூக்களின் மருத்துவக் குணம்
உன்னிடம் இருப்பதை அறிவேன்...
ஆசையாய் கைவிரல் தொடு..
போதையில் முத்தம் தருகிறேன்.
முத்தம் ஏன் தெரியுமா ?
பூக்களை முத்தமிட்டே
வண்டு தேனை உறிஞ்சி தீர்க்குமாம்...
நீயே பூ 
நானே வண்டு
ரகசியமாய் வருகிறேன்
காதல் தேனை கடன் கொடு உயிரே..

கரு

இவ்வுலகில் வலிகள்
நிறைந்த வாழ்க்கை...பெண்களின் வாழ்க்கை....
ஆனால் ஒருநாளும் பெண்கள்
அதனை வெளிக்காட்டிக்கொள்ள
விரும்புவது இல்லை...
பெண் எனும் மா பூந்தோட்டத்தில்
நான் ரசித்த முதல் பெண் என் அம்மா...!!
திருமண பந்தத்தில்
முதல் முயற்சி வயிற்றில் ஒரு சிசு ...
அப்படி ஒரு சிசு இல்லையென்றால்
கொசு கூட என் அம்மாவை மலடி என்று கூறி இருக்கும்...
உறவுகளே
திருமண பந்தத்தில் உடனே கருவுறுதல் அனைத்து பெண்களுக்கும் முதல் ஆசை..
சிலர் வெற்றி பெறுகிறார்கள்
பலர் பட்டம் பெறுகிறார்கள்....
வசைச்சொல் காற்றில் கூட பிறந்த பறந்து வருவதைப் காண முடியும்....
என் அன்பு உறவுகளே....
எதற்கும் கலங்காதே....
என் தாய் கூட .... தாமதமாக தான் என்னை பெற்று எடுத்தால்..!!
என்னை பெற்று எடுத்தால் மகிழ்ச்சி என்று அன்று என் தாய் நினைத்தால்...
பின் என்னை வளர்க்க அரும்பாடு பட்டாள்...
அன்னை என்பது அழகான வார்த்தை
அவள் கைவிரல் ரேகை கூறும்
அம்மாவின் உழைப்பை....
நல்ல கணவர் அமைந்தாலும்
கஷ்டம் யாரைவிட்டது...
எத்தனை தற்கொலைக்கு
இந்த வசைச்சொற்கள் காரணம் ஆகியது...
{நீ இன்னும் உண்டாக வில்லையா}
நீங்கள் வருவீர்கள் பேசுவீர்கள் செல்வீர்கள்...
எத்தனை குடும்பங்கள்
வெட்கத்தில் வேதனையில் செத்துமடிகிறது.
புது மனைவி
புது கணவன்
புரிதலுக்கு கொஞ்சம்
நேரம் கொடுங்கள்...
இயற்கையில் அவர்கள்
கருவுறுதல் அடைய இறைவனை வழிபட்டு வாழ்த்துக்கள்.
அதைவிட்டு எடுத்ததும்
என்ன கற்பம் உண்டாயிற்றா 
என்று கேட்பதை தவிருங்கள்.

அவர் அவர் வாழ்க்கை
அவர் அவர் இஷ்டம்.

வாழ்க்கை

ஆயிரம் முறை 
சண்டையிடுவேன் அவளோடு...
ஆனாலும் 
அவள் இன்றி
என்னால் வாழ முடியாது... உள்ள

சில தவறுகள்
இயல்பில் நடப்பதை கூட
என்னால் தாங்கிக் கொள்ள முடியாது...

அதை அவளிடம் 
சொல்லிச் சொல்லி
குத்திக்கொண்டே இருப்பேன்...

என்னவள் 
அழுதுகொண்டே
அமைதியாய் இருப்பாள்...
அவள் அமைதியாக இருப்பதால்
நான் அதிகமாக பேசுவேன்....!!

வாயில் வந்த அனைத்து
பச்சை வார்த்தைகளும்
மீண்டும் ஒருமுறை
 என் செவி கொடுத்து 
கேட்டால் நானே முகம் சுழிப்பேன்
அவ்வளவு கேவலமான முறையில் பேசுவேன் அவளிடம்...
அதையும் 
காதில் வாங்கிக் கொண்டு
அடுத்த நொடி 
எனக்கு சோறு போடுவாள்.
மெல்லிய குரலில் 
நல்லா சாப்பிடுங்க என்பாள்...
கண்ணீரை துடைத்து கொண்டு
தாகம் தீர நீர் கொடுப்பாள்...
விக்கல் தீரும் வரை
தலையை தேய்த்து விடுவாள்.
மீண்டும் சோறு போடுவாள்
வயிற்றில் சிறிது பள்ளம்
இல்லாதது போல 
உணவை ஊட்டி நிறப்புவாள்..
ஒருமுறை 
கூட அவள் சமைத்த உணவை 
பாராட்டியது இல்லை...
எனக்குள் அவ்வளவு அகந்தை..

எத்தனை முறை 
சண்டையிட்டாலும்
அழுதுகொண்டே 
அமைதியாய் இருப்பாள்..
ஒருமுறை 
திட்டிக்கொண்டே இருந்தேன்
திடிரென மயங்கி விழுந்தேன்...
அடுத்த நொடி எனக்கு 
என்ன ஆயிற்று 
என்று தெரியவில்லை...
கண்விழித்து பார்த்த போது
என் மனைவி அழுத முகத்தோடு
மருத்துவரிடம் கெஞ்சுவதை கண்டேன்.
செவி வழி ஒரு செய்தி
என்னுடள் எது ஆனாலும் கவலையில்லை சார் 
என் கணவர் உடல் சுகம் காண வேண்டும்..
சிறந்த மருத்துவம் தாருங்கள் அய்யா...
இதை கேட்ட பிறகு
என்மனம் கூறியது...
என்னை இவ்வளவு காதலிக்கும்
உன்னையாடி இவ்வளவு நாள்
சண்டையிட்டேன்.

மனது என்பது குரங்கு
சட்டென்று மாற கூடியது தான்.
எனவே உறவுகளே
முத்தம்மிட்டு வாழுங்கள்.
சண்டையிட்டு வாழாதீர்கள்.

முடிவுரை:


கவிதை வடித்தாலும் கண்ணீர் சிந்தினாலும் முடிவில் எழுத்துக்களே இன்பம் அடைகிறது.












No comments:

Powered by Blogger.