முன்னுரை:
தமிழில் சிறந்த கணவன் மனைவி உறவு கவிதைகள் தொகுப்பு நாம் பார்க்க போகிறோம்.
கணவன் மனைவி கவிதைகள்: தொகுப்பு 12
கணவன்
இரவின் வெளிச்சமாய்
எந்தன் வாழ்வில் வந்த கணவன்...
வாழ துவங்கும் போது
வாழ்வை முடித்துக் கொண்டார்...
கையிலே பிள்ளை
கனவிலே கணவர்...
தூரல் இல்லா வானம்
துயரத்தை துயில் கொள்ளும் காட்சி...
வானத்தில் உதிக்க வில்லை
எந்தன் சோகத்தில் உதித்தது...
ஆடைகள் இருந்தும்
நிர்வாணத்தை உணர்ந்தேன் ...
நான் ரசித்த தேகம்
பிடமாய் சரிந்து போக...
எனது வாழ்க்கை மாறி போனது...
அரை குவளை அரிசிக்கு
கையேந்தும் நிலை...
கஷ்டங்கள் என்மேல் இஷ்டம் பட்ட தருணம்..
மூன்று வருடங்கள்
மூச்சி விட முடியாமல்
பூச்சியாய் மாறிப்போனேன் ..
புழுவாக தவழ்ந்து போனேன்...
தள்ளுவண்டி கடை போட்டு
பிள்ளையை படிக்க வைத்தேன்
அவன் முக சிரிப்பில்
என் சோகம் மறந்து போனேன்...
இங்கே வாழ்க்கை என்பது கடல்
கணவன் என்பவர் துடுப்பு ...
நானே படகு என்று உணர்ந்து போனேன்...
துடுப்பு இல்லாமல்
கடலை கடக்க முடியும் என்று
கலங்கரை விளக்காய் என் பிள்ளை தெரியும் போது
உணர்ந்து போனேன்....!!!
உறவுகளின் மத்தியில்
உதவிகள் கேட்க போனால்
என் தேகம் உரச நினைக்கும்
உறவுகளே...
சற்றே சிந்தியுங்கள்
எந்தன் வாழ்க்கை காற்றில் பறக்கிறது..
கையிறு அறுந்த பட்டமாய் ..
நான் சென்று சேர விரும்புவது
என் கணவனையே..
நான் ரசித்த பெண்
மஞ்சள் புடவை கட்டி
மணக்கும் மல்லிகை வைத்து
கூந்தலிலே ஓவியம்
வரையும் பெண் அழகே...
முதல் சந்திப்பில்
பிறையாக..
மறு சந்திப்பில்
பெளர்ணமியாக
மின்னலை மிஞ்சும்
பேரழகியா நீ...
உன் பேரழகில்
மயங்கியே போனேன்....
நீயே என் உலகம்...
உன் பார்வையே
என் சூரியன்...
உன் அசைவே
என் காற்று...
உன் பாசமே
என் ஜீவன்....
சமுத்திரத்தில் தேடினாலும்
கிடைக்காத பொற்கிழி நீ...
உன்னை
என் இதயத்தில் பொத்தி வைத்து
காக்கிறேன்.
நீ என் வாழ்கை துணையாக வந்தது
என் வரம்...
வேறு என்ன வேண்டும்
இப்பிறவியில்....
முப்பிறவியும் நீ வேண்டும்...
முதல் பிறவியில்
மனைவி யாக...
இரண்டாம் பிறவியில்
மகளாக....
மூன்றாம் பிறவியில்
தாயாக...
முப்பிறவியும் முடிந்த பின்னே
முதல் குழந்தையாய்
மீண்டும் உன் கருவறையில்
பிறக்க வேண்டும்.
காதல் கணவன்
சந்திரனுக்கு பெயர்
நிலவாம்...
இந்திரனுக்கு பெயர்
கடவுளாம்..
மந்திரங்கள் தந்திரங்கள்
சேலை மடிப்பில்
உடையவள் தெய்வமாம்...
அரும்புகள் சடங்கானால் மலராம்
அழகி சடங்கானால்
அப்போது மங்கையாம்...!!
மண்மேல் கிடக்கும்
பூவும் சரியும்...
மனைவி மேல் ஆசையும்
கடலனென துடிக்கும்..
மீசை இல்லா
மிணுக்கட்டாம் பூச்சி
அவள்..
முத்துப்பற்கலுக்கு
முன் ஆடை இதழாம்
ஆசையில் ஆடை
துறக்கும் அதிசய
மொழியில்...
வார்த்தைகள் பிறக்கும்...
இந்த பிரபஞ்சத்தில்
பிடித்தது எது என்று கேட்டேன்
சற்றும் சிந்திக்காமல்
அவள் சொன்னாள்...!!
பிடித்தது எது என்று வினவும்
காதல் கணவா..
நீ யே நான் போரிட்டு
பிடித்த உலகம்.
மூச்சு காற்று கடன்
மேகத்தின் ஆடையிலே
மயில் தோகை விரிக்குதம்மா
கருவிழி யின் தாகத்தால்
அந்த காட்சி புகைப்படம் ஆகுதம்மா...
ஆண் என்ன பெண் என்ன
வித்தியாசம் கூறம்மா...
காற்றின் பார்வையில்
இவர்கள்
கடன்காரர்கள் தானம்மா...!!
காற்றை கடன் வாங்கி
வளர்ந்த உடம்புக்கு
காதல் கோர்வையில்
காம தீண்டல்...
மீண்டும் வட்டி ஏறுது...
அழைப்பு
அவனுடன்
சிரித்து பேசி மகிழ...
தினமும் அவனுக்கு
அழைப்பு விடுக்கிறேன்..
அவன்
ஏனோ
அழைப்பை துண்டிக்கிறான்
அவன்
ஒவ்வொரு முறையும்
அழைப்பை துண்டிக்கும் போதும்
என் அணுக்கள்
செத்துவிடுகிறது
என் சிரிப்பு
அடுத்த வினாடி
அழிந்து போகிறது
என் மகிழ்ச்சி
இப்படியே கடந்து போகிறது
என் சோகம்
எப்போது அறிவான்
என் கோவம்
எப்போது புரிவான்
ஆடையில்லா
என் மனது
அனலாய் கொதிக்கிறது
அவனிடம் பேசாமல்...
தீப திருநாள்
வீதியில் திருவிழா...
வீட்டில் பெருவிழா...
ஒரு மாதம் முன்பு
அடுப்படியில் மட்டும்
வெடி வெடிக்கும் தொடர்விழா ..
சக்கரை பாவாக மாரும்
அரசி மாவாக மாரும்...
எண்ணெய் தீயில் வாடும்
நெய் ஜன்னல் வழியே மணக்கும்...
அம்மாவின் கை வண்ணத்தில்
அரிசி மாவு முறுக்காக உருமாறும்
எங்கள் வீட்டு பரணியில் குடியேறும்...
நாட்கள் செல்ல செல்ல
அம்மா பலகாரத்தில்
கூடுதல் அக்கறை காட்டும்...
அப்பா இரவு பகல் காணது
உழைப்பார்...
அப்பாவுக்கு மட்டும்
இரவு தொலைந்து போகும்...
தினமும் ஒரு பொருள்
வீடு வந்து சேரும்...
முதல் நாள் நெய்
மறுநாள் அரிசிமாவு யென குடியேறும்...
வீதியெங்கும் பட்டாசு கடைகள்
விண்வெளி போல் வெளிச்சம்
கட்டபை எடுத்து கொண்டு
வீட்டில் ஒரு ஆள் தினமும்
கடைத்தெரு சென்று வரும்..
வடக்கு வீதியில்
வண்ண ஆடை இருந்தாலும்
தெற்கு வீதி வரை
அம்மாவின் ஆராய்ச்சி தொடங்கும்
எங்களுக்கு துணி எடுக்க...
கூட்டம் கூட்டமாக
எறும்பு நகர்வது போல்
எங்கள் நகரமே நகரும்
வீதியெங்கும் மக்கள் ஓசை வீசும்...
இளசுகள் காதல் வலை வீசும்
சிறுசுகள் சந்திரனுக்கே ராக்கெட் வீசும்
கூட்டம் கூட்டமாக
சந்தோஷத்தில் மிதக்கும் காட்சி
விசித்திரமான பண்டிகை
இது விசித்திரமான பண்டிகை..
அம்மா பலகாரத்தில்
அம்மா எடுத்த புத்தாடையில்
அக்கா மஞ்சள் குங்குமம் இட்டு
அதன் கூட நல்லெண்ணெய் வைத்து
கண்களை எரிச்சல் ஊட்டும் சியக்காய்
நடுவே வைத்து...
பூமாதேவி மகனை நினைத்து கும்பிட்டு
எனக்கு தலையில் எண்ணெய் வைக்க...
அக்கா முயல... அப்பா பிடிக்க
அண்ணன் தடுக்க வீட்டில் ஒரு மல்யுத்த காட்சி.... என் தங்கை காட்சியை ஒளிபரப்பு செய்வாள்..
எப்படியேனும்
எங்களை பேசி மயக்கி
எங்களை எண்ணெய் இட்டு குளிக்க வைக்கும் தாய்...
அவள் முக மகிழ்ச்சிக்காக
மூன்று முறை குளிப்போம்..
அப்பா எங்களை துவட்டி விட வேண்டும் என்று
தண்ணீரோடு வருவோம்...
அப்பா பாசமாய் அணைத்து
துவட்டும் போது ...
வானில் பறப்போம்.
மனதில் சிரிப்போம்..
அதன் பிறகு
எங்கள் வீட்டில் ஃபேஷன் ஷோ நடக்கும்
அக்கா அண்ணன் அப்பா தம்பி தங்கை நான் யென எல்லோரும் நடப்போம்..
தாத்தா பாட்டி அம்மா
ஆசையாய் பார்த்து ரசிப்பார்கள்...
தீபாவளி ஏன் கொண்டாடுகிறோம்
என்று ஆராய்ந்து பார்த்ததில் கிடைக்காத விடை...
ஏன் எங்கள் வீட்டில்
இவ்வளவு பெரிய கொண்டாட்டம்
என்று ஆராய்ந்து பார்த்ததில் கிடைத்தது
தீராத வலியை போக்கும்
தீபாவளி.
பாவை மனைவி
அழகான ஓடையிலே
அகண்ட நீரினிலே
அழகாய் தெப்பக்குளம்
அதில் தீபமாய் பெண் ஒருத்தி
தெற்கே தோரனம்
வடக்கே வான வேடிக்கை
தள்ளாடி வந்தாளே
வைகறை நிலவாய்
பால்கனியில் பிறந்தவளோ
பழந்தமிழ் குடித்தவளோ
நந்தினி யோ
நறுமுகையோ
நாளந்தாள் பிறை நிலவோ
அவ்வையோ
அவளுக்கு இலக்கணம் தந்தவளோ..
கம்பன் மகளோ
கவிதைக்கு பிறந்தவளோ
யார் இவள்.
நடணத்தில் யாப்பை கோர்த்து
நளினத்தில் உவமை பதித்து
என் மனதில் பாற்கடல் பொங்க
அலையாய் அடிக்கும்
இவள் யாரோ!!!
அண்ணக்கொடியோ
அழகு ரதியோ
என் வாழ்க்கையின் உருவமாய்
வந்த கருவிழி மலரோ...
கண்டதும் காதல் வந்து
கருமேகம் யாழை கோர்த்து
நாதஸ்வரம் ஓங்கி ஒலித்தது
நடப்பதுயென்ன...
திருமணமா திருவிழா வா
பார்த்தோர் கூறுங்கள்
பாவை இவள்
என் மனைவியென்று.
ஆசை
ஆசையாய் முத்தம்மிட
அருகில் வரலமா....
அள்ளி மலர் முலை காம்பை மீசை தொடலாமா...
இதழ் ஓரம் ஒரு முத்தம்
இருக்கி தரலமா...
இனியவளே
இளைப்பாற மடி தரலமா
மடி ஓரம்
கண் உறச காதல் வரலமா...
பாவாடை நாடாவை
விரல் தொடலாமா
மூச்சு விடும் நேரத்தில்
முடிச்சு அவிழுமா
மூச்சு முட்ட.... காம உணர்ச்சி யை உடம்பு மேயுமா!!
இருகால்களையும் விரித்து விடு....
வெப்ப நீர்வீழ்ச்சி
குளிர்ந்த பூவாய் மலரட்டும்...
நித்திரையில் மனது
இதமாய் உறங்கட்டும்..
காம விளையாட்டு
ஒன்றும் கவிச்சி இல்லை...
கால்களை விரி
காட்டுமரம் பாயட்டும்
நாட்டுமர மேனியில்.
பெண் கொதிகலன்
அன்பே
நித்திரையில்
முகாம் மிட்டு..
இதயத்திரையில்
நாடி பிடித்து
இதழ் ஓரம்
முத்தம்மிடுகிறாய்..
அசையும் போது
அன்பாய்
இறுக்கி அணைக்கிறாய்.
வாஞ்சி ஊர்காரி
வாசம் உள்ள மேனிக்காரி
உந்தன்
வலைவின் நெளிவில்
என்னை
கெஞ்ச வைத்து
கொஞ்சும்
என் அன்பின்
கொதிகலனே...
நித்திரையை கலைத்து
நேரில் வருவது எப்போது...!!!
காதல் கவிதை
என்னிடம் நண்பர் ஒருவர் கேட்டார்
காதல் பற்றிய கவிதை ஆனால் நான்கு வரிகளில் வேண்டும் என்று...
கவிதைகள் வரிகள் அமர்வது
பூவில் இருந்து உறிஞ்சிப்படும்
தேன் போன்றது...
நான் தேனை உங்களுக்கு கவிதையாக வடிக்கிறேன்....
உங்கள் ஆதரவை தாருங்கள்..
காதல்
நினைவில் வைத்திருந்து
கனவில்
காண்பது இல்லை...
மனதில்
நினைத்து
மரணத்தில்
புதைப்பதே
உன்மையான காதல்.
களவு
தினமும் உன்னை தரிசிக்க வேண்டும்
தீரா காதலை சாட்சியாக்க வேண்டும்
இரவும் பகலும்
உன்னுடன் பேச வேண்டும்
நிலவுக்கு தாய் மடியாய்
நாம் இருவரும் ஆக வேண்டும்..
வெள்ளை அடிக்கும்
சூரியனுக்கு வெட்கம் இருக்குதடி...
வெளிச்சத்தை நமக்கு கொடுத்து
அதன்
வெட்கத்தை காட்டாமல் மறைக்குதடி...!!
நந்தினி வருகை கண்டு
நறுமுகை நதி நீரும்
நெருப்பும் காற்றுமாய்
ஏங்கி தவிக்குதடி...
உன் பாதம் பதிக்க காத்து கிடக்குதடி..
அழகு என்னும் சொல்
ஆயிரம் உறவுக்கு சொன்னாலும்
சரியாக பொருந்தவில்லை...
பொண் மகளே
உனக்கு மட்டும் எப்படி
பொருந்துதடி ...
வார்த்தைகளின்
உருவம் உன்னிடம் இருந்து
திருடப்பட்டா ...
அழகே
ஒருமுறை கண்ணாடி பார்
ஏதும் களவுப்போய் உள்ளதா என்று.
கரம்
தினமும் பேச வேண்டும்
தினவுகள் கலைய வேண்டும்
இரவின் குடைக்குள்
உதிரங்கள் உறைய வேண்டும்
கையடக்க விரல்கள்
கட்டு மரம் ஆக வேண்டும்
கனவுகள் கடந்து
நினைவுகள் வாழ வேண்டும்
அழகியே
கால்கள் துடுப்பாக
காதல் கடல் லாக
கரைகள் அழைக்க
நாம் இருவரும்
கரம் பிடிப்போம்
ஒருநொடி
ஒருமுறை கூட
உன்னை விட்டு கொடுத்தது இல்லை...
இருந்தும் ஒர் ஆயிரம் முறை
பரிதவித்து விட்டேன்
ஒரு நொடி பொழுது
உன்னை காணாது.
அகராதி
கண்ணும் கண்ணும்
பேசுவதால் ...காதல் வருமா???
கண்ணும் கண்ணும்
பேசினால் கலவரமே வரும்
என்பதை ...
உன் கருவிழியிடம்
பேசிய போது உணர்ந்து கொண்டேன்.
மாயங்கள் செய்து
மயக்கும் மன்னவா....
மர்மமான உந்தன்
பார்வை மொழியை உணர
அகராதி வேண்டும்
சற்று தந்துவிட்டு
கண்களால் பேசடா..
நிஜத்தில் மீளாய்வு
என்னவளே என்னவளே
எனக்காய் பிறந்தவளே
சித்திரை நிலவாய்
நித்திரை முகமாய்
ஆசையோடு அருகில் வந்தாய்
ஆர்வத்தோடு கட்டி அணைத்தாய்
ஏக்கமாக என்றேன்
இல்லை என்றாய்
கண்ணோடு கண் உறச
தாக்கம் என்றாய் ...
தாவணியில் தவிக்குது என்றாய்..
இதழில் உறைவிடம் கேட்டாய்
உள்ளத்தில் உணர்வுகள் கொடுத்தாய்..
என்னவளே போதுமடி
கண்ணோரம் சாய்ந்து
இமையோரம் நெறுக்கி
கருங்கூந்தல் வலையில்
என்னை பின்னியது போதும்...
விடியல் ஓசை கேட்கிறது
என்னவளே
என் கனவை விட்டு செல்லாதே ..
கனவில் இனைந்த உறவு..
நிஜத்தில் மீளாய்வு செய்தல் வேண்டும்
அன்பே அருகில் வா...
வாழ்க்கை
ஆடம்பரமாக வாழ
நாட்கள் இருக்கிறது...
ஆசைப்பட்டதை வாழ
இன்று தானே இருக்கிறது...!!
அந்த அந்த பருவத்தின்
உணர்வுகளை உணர்ந்து
வெளிப்படுத்து ..!!
ஒரு முறை மட்டுமே வாழ
தகுதி உடைய உயிர்...
இன்பத்தில் தத்தளிக்கட்டும்.
நித்தம்.
மழைச்சாரல்
கண்ணாடி கதவை விட்டு
கண்ணோரமாய் வந்தவளே...
என் கருவிழியை
கலக்கி விட்டு...
நீ எங்கே செல்கிறாய்...
உன்னை கண்ட
என் கண்கள் போதையில் சுற்றுகிறது.
மழைச்சாரல் பார்வையில்
நீ வீசிய போதை சாரல்...
மணி கணக்கில்
விழிகளில் தவழ்ந்து
இதயத்தை தீண்டுகிறது
என் விழியை மயங்கிய மாங்களி
மடிசாய அழைக்கிறேன்
வா.
பணம்
பணத்தாள் அழிந்த அழகிய வார்த்தைகள்
அத்தை மகளோ
மாமன் மகளோ
மனதுக்குள் பிடித்தவள்
மனைவியாய் அமைவது வரம்...
ஆனால்
உன்மையில் வரத்தை தட்டிவிட்டு
பணத்தை தொட்டு ரசிக்க துவங்கி விட்டோம்..
ஆசையாய் அத்தான்
ஆசையாய் மாமா
ஆசையாய் மச்சான்
இந்த சொல் எல்லாம்
அழிந்து போக ... மனித குலத்தின் பணம் மோகம் தான் காரணம்...
நீங்க என்ன சொல்றீங்க?
உறவுகளே
இப்படிக்கு
கவிஞர் சிவா
தாவணி
அவளின் தாவணி
மனதுக்குள் சிரித்துக் கொண்டே வாழ பழகிக் கொள்....
நீ சிரிக்கிறாய் யென தெரிந்தால்
அவள் தாவணி உன்னை
சிறைப்பிடித்து விடும்.
மெளனம் கவிதை
மெளனம்
மிக சிறந்த ஆயுதம்
அதை
நீ
எங்கே பயன்படுத்துகிறாய்..
என்பதில் மறைந்து இருக்கிறது
மெளனத்தின் அழகியல்.
பொங்கல்
தங்கம் ஜொலிக்கும்
தங்க வயல் நெற்கதிரே!!
பால் சுரக்கும்
பழந்தமிழர் அறிவியலே!!
மெல்ல உன்னை இழுத்து
உன் மேனி ஆடை கழட்டி...!
புத்தரசி முத்தெடுத்து
பொங்கல் இடும் வேளையிலே...
பொங்கலோ பொங்கல்யென
பாவையரும் குலவையிட
பொங்கிவரும் பொங்கலை போல்
உங்கள் வாழ்வில்
மகிழ்ச்சி பொங்கட்டும்.
காதல் உணர்வு
ஒருமுறை கூட
என்னை திரும்பி
பார்க்காத அவள் கண்கள்...
நான் மறைந்த பொழுது
என்னை தேடியதை உணர்ந்தேன்...
ஓவியங்கள் ஒரு பொழுதும்
பேசுவது இல்லை...
அதை போல் தான் அவள்
ஓவியத்தை பார்த்ததும்
அழகியல் உணர்வு பிறக்கிறது..
அதே போல்
அவளை பார்த்ததும்
காதல் உணர்வு பிறக்கிறது
கவிதை வடிவில் துடிக்கிறது.
நட்பு
மீண்டும் ஒருமுறை
இம்மண்ணில்
பிறக்க நினைக்கிறேன்
நண்பா ...
உன்னோடு
மீண்டும் விளையாட.
மீண்டும் சண்டையிட
மீண்டும் மகிழ்ச்சி
மீண்டும் நம்பிக்கை
மீண்டும் ஆறுதல்
மீண்டும் நட்பு .
முடிவுரை:
நட்பு கவிதையோடு இந்த பதிவை நிறைவு செய்கிறேன் .
No comments: