முன்னுரை:
தமிழில் சிறந்த கவிதைகள் பற்றி நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் கவிதைகள்: தொகுப்பு 11
காதல் மண்:
காதல் கவிதைகள்
கொள்ளை அழகு....!!
மனம் உகந்து
சுகம் கனிந்து
புத்துணர்வு பெற்ற
எழுத்துக்கள் கிறுக்கும்
அழகியல் ஓவியம்
இந்த காதல் கவிதை...!!
ஆண் பால் பெண் பால்
உகந்து... உணர்வுகள் சிவந்து
இதழ்களில் எச்சில் தீர்த்தம்....
மனசுக்குள் இன்ப நீர் எதார்த்தம்...
நான் ரசித்த முதல் பெண்:
அவள் பெயர் கூட தெரியாமல்
தவித்த இரவுகள்
எனக்கு அம்மாவாசையே
அழகான பெண்
அவள் முகம் பிறையாக
எப்போ மீண்டும் வரும்
என்னுள் தவிப்பு எப்போது அடங்கும்.
மின்னலை கூட கண்டு
மயங்காத என் கண்கள்
அவள் கண்களை கண்டு
மயங்கியது ஏன்
வெடி சத்தத்தை கேட்டு
மயங்காத என் செவிகள்
அவள் கொழுசு
சத்தம் கேட்டு
மயங்கியது ஏன்
மணி ஓசை கேட்டும்
விழிக்காத என் இமைகள்
உன் குரல் ஓசை கேட்டதும்
விழித்த மாயம் என்ன??
அள்ளி மலரே
ஆவாரம் பூவே
அலையாய் துடிக்கும்
என் மனசுக்கு
நீ கரையாய் வருவது
எப்போது.
கவிஞன்
உன் கவி தீண்டும்
கண்ணுக்கு....
வண்ணம் பூசியவன் யாரடி
யாழியாய் கருவிழியும்
தோழியாய் நற்பண்பும்
இயற்கை தந்த இளம்தளீரே..
கண் எதிரே
கண்ணாடி பிடித்து
என்ன தெரிகிறது என்று கேட்கிறாய்...
உன் அழகில் மயங்கிய
இந்த கவிஞன் என்ன கூற முடியும்...
வார்த்தைகள் இல்லை
வசியம் செய்ய....
இருப்பினும் நீ வினவிய வினாக்கு
விடை கூற வேண்டும் அல்லவா....
இதோ கூறுகிறேன் கேள்
கண்ணாடியில் நானும்
கண்ணாடி பின்புறம்
என் வாழ்க்கையும்
தெரிகிறது.
இரவின் குடைக்குள்
ஒழிந்து இருக்கும் பனித்துளியாய்
என் இதயத்தில் குடியிருக்கும்
என்னவனே...
கருவிழியால் காதல் செய்து
மறுவிழியால் மயக்கியவனே
வேட்டியால் என்னை
கட்டி போடுவது ஏனட..
நடக்காத புல்லாங்குழலும்
நடமாடுகிறது ..
உன் குரல் கேட்டால்...
வலையாத மூங்கில் காடும்
வலைந்து நின்று
வசியம் ஆன மோகம் என்னட..
முத்து ராஜாயாகவே
அருகில் வந்து..
அரை நிமிடம் சிரித்து விட்டு
மயங்கிய என்னவனே
உன் மடியில் சாய ஆசை
தங்கத்தேர்
தங்க தேர் ஒன்று
தரணி வந்தது என்று
தஞ்சை முழுவதுமே
பறை முரசு நீ அரைவாய்...
துள்ளி குதித்து ஒடும்
காவேரி நதிக்கரையில்
தங்கத்தில் கால் நட்டு
பந்தல் அமைத்திடவே
கட்டளையை நீ உறைத்திடுவாய்...
பிறை அழகு
தேவி அவள்...
சந்தன முலாம் பூசி
காலுக்கு சலங்கை கட்டி
மெல்ல அவள் நடந்து வர
மெத்தையை விரித்திட
நீ கட்டளை இட்டுவாய்...
யார் அங்கே
நகரமே பூந்தோட்டம் ஆகட்டும்
வீதியெல்லாம் சூரியன் உதிக்கட்டும்
காடு எல்லாம் சந்திரன் ஆளட்டும்
தேரிலே பவனி வரும்
தேன் நிலவு இப்பூமியை ஆளட்டும்...
செப்பேடுகள் தயாரா
செந்தாமரை பூக்கள் தயாரா
மல்லிப்பூ மணி மாலை தயாரா
பட்டத்து ராணிக்கு
பட்டயங்கள் தயாரா ...
தங்க கிளிக்கு கிரீடங்கள் தயாரா
யார் அங்கே
பிரம்மனை வரச்சொல்
இந்த பேரழகை வடித்த
சிற்பியை வரச்சொல்...!!
வைரத்தின் வாழ்வியலை
வையகத்தில் படைத்திட்ட
ஓவியனை வரச்சொல்...!!
எங்கும் பறைச்சத்தம் ஒழிக்கட்டும்
மஞ்சள் நீரும் வனப்பான குதிரையும்
தயாரக இருக்கட்டும்..!!
பன்னீரில் ஊறிய மாலைகள் ஆயத்தமாக இருக்கட்டும்...
புது மணல் விரித்த
மனமேடை தயாரக இருக்கட்டும்...
யானைகள் இரண்டும்
தங்கத்தால் ஜொலிக்கட்டும்..
தங்கத்தேரை தாங்கி பிடிக்கட்டும்..
வாழ்த்துக்கள் வழங்க
சோழநாட்டு மக்கள் தாயாரா...
இதே வந்துவிட்டள்
மனமேடையில் மாங்கல்யம்
ஏந்த ... சோழநாட்டு இளவரசி..
ஒழிக்கட்டும் நாதஸ்வரம்
தெரிக்கட்டும் மங்கல ஓசை
பறக்கட்டும் பழந்தமிழர் வாழ்த்து
மனக்கட்டும் மன்னனின் விருந்து
பிறக்கட்டும் இதயத்தில் மகிழ்வு
சிறக்கட்டும் வாழ்வியல் கனவு.
ஆண் அரசன்
நான் அவனை நேரில்
பார்த்ததும் இல்லை...
அவனும்
என்னை நேரில்
பார்த்ததும் இல்லை...
இருந்தும்
இருவருக்கும் பந்தம்...
என் கண்ணில்
வளர்ந்து நிற்கும்
கொடிவீரன் அவன்
இரவை விழுங்கும்
வெளிச்சமாய் ...
என் இதயத்தை
விழுங்கிய அவன்..
என் இதயத்தில்
நித்தம் பிறக்கிறான்
என் தாகத்தின்
பிம்பமாய்...
என் வாழ்க்கையின்
நிழலாய்....
நித்தம் என்னை ஆளும்
ஆண் அரசன்
எப்போது நேரில் பார்ப்பேனோ...
பொட்டு
அழகாய் பொட்டு வைத்து
அதன் மேலே திலகமிட்டு
அடுக்கு அடுக்காய் புடவை கட்டி
தலைக்கு கவசமிட்டு
கைக்கு உறை போட்டு
இருசக்கர வாகனத்தில் அமர்ந்து
கண் எதிரே நோய்வாய்ப்பட்டு கிடக்கும்
தாயுக்கும் தந்தைக்கும் கையசைத்து
குடும்ப சுமை கருதி புறப்பட்டாள்
பெண் ஒருத்தி...
வீதி யெல்லாம் சோகத்தோடு
மாலை பணத்தோடு வந்துவிட்டாள்
மருத்துவம் பார்த்து மருந்து
வாங்கி விடலாம் என்று எண்ணி
மெல்ல நகர்ந்தது வாகனம்...
நான்கு வழிச்சாலையில்
நடுவே பயணிக்காமல்
ஓரத்தில் ஓட்டி சென்றால் வாகனத்தை...
நடுவே பயணிக்காமுடியாமல்
மக்கள் கூட்டம்...
ஒருவர் அமர்ந்து
ஒரு மகிழுந்தை இயக்குகிறார்கள்
இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட
வாகனங்கள் படையெடுப்பு நிற்கிறது...
எங்கே செல்கிறார்கள்
ஏன் இவ்வளவு வேகம்
ஒன்றும் புரியாமல்
என்ன செய்வது என தெரியாது இவள்
சாலையின் ஓரத்தில் தஞ்சம் அடைகிறாள்..
மெல்லத் தான் நகர்ந்தாள்
என்ன உள்ளத்தில் நினைத்தாலோ
சட்டென்று ஒரு சத்தம்
இவள் திரும்பி பார்ப்பதற்கு முன்
மறுசத்தம்...
கை வேறு
தலை வேறு
தாங்கி வந்த சுமை வேறு
பொட்டு வேறு
புடவை வேறு
பொத்தி வச்ச மானம் வேறு
சிதையுண்டு கிடந்தாலே
இம் மண்ணுலகில்...
கண்டும் காணாமல்
காணாமல் போனது ஒரு கூட்டம்
அந்த கூட்டத்தின் பெயர் தான் உண்டு தன் வேலை உண்டு...
மற்றொரு கூட்டம்
ஓங்கி ஓங்கி ஓலி எழுப்பியது
சிதைந்த உடல்களை உடனே
அப்புற படுத்த வேண்டுமாம்
இவர்கள் சாலையில் பறக்க வேண்டுமாம்
பத்து நிமிடம் பயன் அற்று போய் விட்டதாம்...
இவர்களுக்கு தெரியவில்லை
அடுத்த tollgate எமன் நிற்பான் என்று...
கண் எதிரே
கனவுகளோடு
வந்த பெண் ஒருத்தி
உடல் சிதையுண்டு கிடக்கிறாள்
அதை கண்டு காணமல் போகும் கூட்டத்திற்கு எமன் எப்படி தெரிவான்
படிப்பும் பெருகலாச்சு
பகுத்தறிவும் கூடலாச்சு
ஏனோ ஈரமான உறவை தான்
இன்று காணவில்லை...
அடிப்பட்ட உடலுக்கு
இலவச அழைப்பை கூட
சொடுக்கி அழைக்க தயங்கும்
பெரும் குரங்கு படையே.....
ஏன் என் கவிதையில்
இவ்வளவு காட்டம் என்று நினைக்கிறிங்கலா
கனவுகளோடு வந்த
பெண்ணுக்கே கல்லரை தான்
கதி என்று ஆனபின்னே...
மனிதா குரங்கு
எவனால் இருத்தா என்ன
பூமிக்கு பாரம் தானே...
கருத்து சொல்லி திருத்துவது
கானல் நீர் போன்றது
சொரனை நமக்கு வந்துவிட்டால்
சூழ்நிலையும் மாறாதோ.
விசா
வீதியெங்கும்
விழா கோலம்
இவ்வீதியில் நீயும் நானும் மட்டும்...
நறுமுகை கடலே
உன் ஆழம் நான் கண்டதில்லை
இருந்தும் மூழ்கி போனேன்...
தேன் ஊறும் தேகம் கொண்டவளே
நான் தேடி பிடித்த வள்ளுவனின்
இன்பத்து பாலே...!!
திகட்டாத இன்பம்
தினமும் தரும் தேன் அழகே....!!
நீ எத்தியோப்பியா
பெண் அழகியா...!!
விந்தைகள் கொண்ட
மங்கையே ...
உன் மடிசாய வேண்டும்
எனக்கு விசா ஒன்று
உன் உள்ளத்தில் இருந்து அனுப்பு.
காகித ராக்கெட்
நீ
ரசிக்க வேண்டும் என்று எழுதிகிறேன்..
நீயோ
கண்டும் காணாமல் போகிறாய்.
உந்தன் ஜன்னல் வழியே
நிலவை பார்...
அங்கே காகித ராக்கெட் டாக
என் கவிதைகள் பறக்கும்.
உள்ளத்தில் ஓவியம்
மீண்டும் மீண்டும்
உன்னை நோக்கி நான் வரும்போது
புதிய ஓவியம் உள்ளத்தில்
பிறக்கிறது....!!
ஏனோ
உன்னிடம் தான் அதை
காட்சி படுத்த முடியவில்லை
என்னால்.
கண்ணீர் காதல்
நீண்ட பயணத்தின் போது
நிலா வெளிச்சத்தில் உன் முகம் பார்க்கிறேன்...
பேச துடிக்கிறேன்
கண்களில் தண்ணீர்...
எங்கே
உன் முகம் மறைந்து விடுமோ என்று
கண்ணீரை துடைத்து விட்டு
உன் முகம் பார்க்கிறேன்.
அவளின் இரகசியம்
தினமும் நீ என்ன செய்கிறாய்
எங்கே இருக்கிறாய் என்று கேட்டேன்..
கோவமாய் இதை எல்லாம்
உன்னிடம் சொல்ல முடியாது என்றாய்..
நான் தேவை இல்லை என்றாய்...
என் நம்பர் பிளாக் செய்தாய்..
சில மாதங்கள் உன் பின்னே வந்தேன்
என்னை வெறுத்து ஒதுக்கினாய்..
சில காலம் பிரிவு...
நீண்ட இடைவெளிக்குப் பிறகு டுவிட்டரில் உன் முகம் கண்டேன்....!!
பிறை நிலவை
சாய்ந்து பிடித்தது போல்
உன் புகைப்படம்...
அடுத்த நாள்
உன் திருமண புகைப்படம்
அடுத்து அடுத்து
புகைப்படங்கள் அப்லோடு செய்கிறாய்..
தற்போது குழந்தை புகைப்படம்
வந்து இருக்கிறது..
நீ என்ன செய்கிறாய்
எங்கே இருக்கிறாய் என்று
நான் கேட்காமலேயே
நீ பதிவு செய்கிறாய்..
இந்த பதிவின் ரகசியம் என்ன?
நீ வாழும் வாழ்க்கையை
நான் பார்த்து வருந்த வேண்டுமா?
என்னை ஏமாற்றிய பெண் நீ தான்
என்று இந்த உலகம் உன்னை வாழ்த்த வேண்டுமா?
ஆயிரம் இருந்தாலும்
உன் புகைப்படம் கண்டதும்
லைக் பண்ணவே
விரல் துடித்தது...!!
எங்கே நான் என்று
தெரிந்து விட்டால்
பிளாக் செய்து விடுவாயோ
என்று....
அமைதியாக பார்த்து வருகிறேன்...!!
உந்தன் ரகசியங்களை
உந்தன் அனுமதி இன்றி.
அன்பே
கடல் கரையில் எழுதப்பட்ட
நினைவுகளாய்..
நித்தம் தவிக்கிறது
என் இதயம்...
அலையென வந்து
ஆறுதல் கூறு...
மெளனமான சந்திப்புகள்
மணலின் சாட்சியாக
மலரட்டும்...
அசையாத சித்திரமாய்
கிடக்கிறேன்..
அன்பே
உன் அரவணைப்பு
இல்லாமல்....!!
உந்தன் அருமையை
இன்று தான் உணர்ந்தேன்...!!
காலையில் தேனீர் அருந்த
தேகம் துடித்தது...
சாலையோர கடையில்
அருந்த நினைத்தேன்...!!
காசு கொடுத்து குடித்தாலும்
என் இதயத்தில் சுகம்மில்லை.
என் நாவில் சுவையும் இல்லை
அன்பே உன் அன்பை
எங்கே தொலைத்தேன்..
அந்த தேனீர் குவளையில்
உன் வாசம் இல்லை...!!
மலராய் மொட்டு விரித்து
மணக்க மணக்க தேனீர் போட்டு
உந்தன் பொன் விரல் பட்டு தெறிக்க
அன்பாய் நுரைபொங்க
நீ அசைந்து எடுத்து வந்து
தரும் தேனீரை இன்று நான் தேடுகிறேன்..
அன்பே
உன்னை ஒரு நாளும்
நான் பாராட்டியதும் இல்லை
உன்னை சீராட்டியதும் இல்லை..
உணர்வுகளில் நீ கலந்து நிற்கிறாய்
என்பதை... என் உணவுகளின் சுவையில் கண்டேன்...
தேனீருக்காக உன்னை
தேடி தேடி திட்டியதை
என் தேகம் சுருங்க வெட்கி தலை குனிகிறேன்.
ஆயிரம் தான் இருந்தாலும்
உன்னை நான் நோகடிக்கும்
சமயங்களில் கூட அமைதியாய்
நின்ற தேன் தமிழே....!!
உந்தன் பிரிவுகள்
எனக்கு உந்தன் பெருமையைப் போதிக்கிறது.
ஓட்டை வாகனங்கள்
அழகு நீரே
கடலை கடந்து
நன்னீராய் வந்தாயே...
எனது தாகம் தீர்க்க
உனது உயிரை எனக்கு தந்தாயே...
நீ பிறந்தது வானிலா
நீ விழுந்து முளைத்தது பூமியிலா..
உன்னை சுமக்க வாகனம்
ஒன்று துள்ளி வந்தம்மா
உன் மதிப்பு தெரியாமல்
வழி நெடுக சிந்தி தொலைக்குதம்மா..
நீ கோவம் கொண்டு
வானம் நோக்கி நீராவியாய் உருமாறாதே
உன்னை நம்பி உயிர்கள் இங்கே
வாழ்ந்து தவிக்குதம்மா...!!
உன் வரவு இன்றி
புல்லும் பூண்டும் கருகி தொலைக்கும் அம்மா...!!
வானில் இருந்து பூமி வந்து வாழ வைக்கிறாய்...
அதனால் தான் என்னவோ
உனக்கு அமரர் ஊர்தி....
பெட்ரோலுக்கு தங்க ஊர்தி
நல்லவனுக்கு இது காலம் இல்லை
கெட்டவனுக்கே சிறந்த காலம்...
பார்த்து பார்த்து
பெட்ரோல் சிந்திவிட போகுது.
முட்டாள் கூட்டமே
ஏன் தண்ணீர் மட்டும் சிந்தனும் சிந்தி.
உயிர் விதை
ஒரு மெல்லிய கோட்டில்
உன்மை அறியும் சோதனை
தோழனுக்கும் தோழிக்கும்..
தோழியின் கேள்வி!!
விதவைக்கு மீண்டும் விவாகம்
செய்யலாமா தோழா....
தோழனின் பதில்...!!!
உயிர் விதையை முளைக்க விடுவது நல்லது தோழி...!!
தோழியின் கேள்வி..
வாழ்வில் முன்னேற்றம் வந்து விடுமா தோழா...
தோழனின் பதில்..
தானாய் உப்புக்கடல் முத்துக்கள் வருவது இல்லை தோழி...
யார் என்ன சொன்னாலும்
காதில் வாங்காதே தோழி...
உனக்கு பிடித்ததை நீ செய்.
மறுமணம் என்பதும்
திருமணம் தான் தோழி...
மகிழ்ச்சியோடு பாதம் எடுத்து வை.
உன் ஆசைகள் அடைய
இந்த தோழனின் வாழ்த்துக்கள்.
மழை
எண்ணெயில் குளித்த கூந்தல்
இழையென நீண்டு பெய்யும்..
மண்ணில் பட்ட சுகத்தில்
நதியென நீண்டு ஓடும்...!!
இருகரை தவிப்பு
உன்னால் தீரும்
வரப்புக்கு ஆடை
மழைநீர் ஆகும்..
இந்த அழகியல் நிகழ்வு
எப்போதாவது நடக்கும்...
நீ வெண்மழை நீரோ
தேன் சுவை மழையோ!!!
என் இதயத்தில் உன் சுகமே
என் தேகத்தில் உன் நயமே
நீ பூமிக்கு வந்துவிட்டால்
சந்தோஷத்தில் பூப்பது
என் விழியே...
மழையே நீ வாழ்க.
நான்மடிசாய வருக.
விண்ணப்பம்
மங்கையே..
பொங்கி வழிந்திடும் தேன்
பூக்களின் வியர்வையடி....
ஏங்க வைத்திடும் தேன்
இதழ்களின் வியர்வையடி...!!
காட்டு பூவாய்
வாசம் வீசுகிறாய்
நுரையீரல் வரை
மாற்றம் செய்கிறாய்..
தேனை சுரக்கும்
தேன் நிலவே
எந்தன் தேகம் பொழிவு பெற
உந்தன் இதழ் தேன் வேண்டுமடி..
ஒப்பந்தம் போட
விண்ணப்பம் செய்து இருக்கிறேன்
பரிசீலனை செய்து
காதல் அனுமதி
தந்துவிடு...
அள்ளி பருக வேண்டும்
உந்தன் இதழின் வியர்வை.
மணநாள்
மணநாளில் கைபிடித்து
என் மடி சாய வந்தவளே...
சாய்ந்துக்கொள்
என் மடியும் உன் தாய் மடியே...!!
எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்
உன் கைவிரல் பிடிக்கும் போது
முடிவு செய்து விட்டேன்
நீயே என் முதல் குழந்தை என்று....!!!
ஆசைக்காக சொல்லவில்லை அன்பே
ஆயிரம் ஆசைகள்
கடல் அலையாய் கொதிக்கிறது
என் இதயத்தில்...!!
ஒன்றன்பின் ஒன்றாக
செய்து முடிக்க தவிக்கிறது என் இதயம் ❤️
என் முதல் குழந்தைக்கு...
உறவாய் நீ வந்தாய்
உதிரமாய் நீ வந்தாய்
முதல் குழந்தையாய் நீ வந்தாய்
உந்தன் உந்து விசையால்
என் உலகம் சுற்றுகிறது உயிரே...!!
சின்ன தூரம் நான் கடந்தால்
பெரிய துயரம் என்னிடம் பிறக்கிறது உயிரே...
உயிருக்கு உறவாக வந்தவளே
உன் முகம் காண விட்டால்
என் இதயத்தில் மலரும் சிரிப்பு
பூக்க மறுக்குதடி...
கண்ணோ உன்னை காண தவிக்குதடி..
மெளனத்தை தாய்மொழியாய் கொண்டவளே....
உன் மெளனத்தின் இலக்கணம் என்ன??
பதில் கூறடி என் பழந்தமிழே ...
உவமைகள் இன்றி
கவிதைகள் ஏது!!!
எந்தன் கவிதையின்
உருவகம் நீயடி...
உந்தன் கைவிரல்
தீட்டும் ஓவியம் எழுத்துக்கலாம் ...
உந்தன் கூந்தல்
தீட்டும் ஓவியம் காவேரியாம்...
அழகு குயிலே
எந்தன் கரிசல்காடே...
உந்தன் பற்கள்
தீட்டும் ஓவியம் பாற்கடலாம்...
உந்தன் கண்கள்
தீட்டும் ஓவியம் அதிசயம் மாம்...
முடிவுரை:
சிறந்த கவிதைகளை உங்களுக்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.
No comments: