தமிழ் கவிதைகள் தொகுப்பு- 10| Tamil Kavithaigal collection -10

முன்னுரை: 

சிறந்த கவிதைகளை உங்களுக்கு பதிவு செய்து வருகிறோம், எங்கள் குறிஞ்சிக்காடு எனும் அழகியல் கவிதை தொகுப்பில் இருந்து உங்கள் பார்வைக்கு சில கவிதைகளை இதில் பதிவு செய்கிறோம்.
வாருங்கள் கவிதையை காண்போம்.


தமிழ் கவிதைகள் தொகுப்பு- 10| Tamil Kavithaigal collection -10

நாணம் நழுவி கவிதை:

மொட்டுக்கள்
விரிவது வண்டுக்காக...!!
வண்டு 
உறிஞ்சுவது தேனுக்காக!!

மனம்
 விரிவது அன்புக்காக!!!
இதழ்
 விரிவது மொழிக்கா!!!

மொழி பரிமாற்றம்
கலை தடுமாற்றம்
காதல் விளையாட்டு
காட்சிகள் திரையேற்றம்..

ஊமை
காட்சிகள் இன்பம் ஊட்டும்..
செழுமை
காவியம் காதல் மீட்டும்..

கையின் தீண்டல்
மின்சாரம் பாச்சும்..
இதழின் எச்சில்
அமிர்தம் மாகும்..

ஆசையாய் தேடி வந்த வண்டு
அசதி பெறாமல் அள்ளி பருகும்..
பூக்களோ 
நாணத்தில் நழுவி...
அமிர்தத்தில் நனையும்..
நிலவின் ஒளியில்
நித்திரை கழியும்..!
வாடை காற்றில் 
புடவை மாற்றும்..
புன்னகையோடு 
பூத்துக்குலுங்கும்.


அக்கா கவிதை:

தெற்கே மழை வீச
வென்மேகம் நிலைக்குலைய
காட்டு வெள்ளமாய் தண்ணீர் சூழ
அம்மா துடிதுடிக்க...
அப்பா வேகமாக
அம்மாவை நோக்கி ஒடிவந்தார்...!!!

என்ன ஆச்சு செல்லம்மா யென
அப்பா கேட்க....!!
அம்மா வயிற்றை காட்டி
வலிக்கிறது மாமாயென கத்த...!!
நான் அழுது கொண்டே அம்மா நோக்கி
ஓடினேன்..!!
சித்தப்பா அப்பா ஆயா என்று
எல்லாரும் சேர்ந்து அம்மாவை
மருத்துவ மனைக்கு அழைத்து சென்றார்கள்.

மறுநாள் காலையில்
சூரியனை பின்னுக்கு தள்ளி
முன்னே என் தம்பி பிறந்தான்..!!
உறவு எனும் அறிமுகத்தில்
நானும் தம்பியும் சந்தித்தோம்..
பந்தம் எனும் சொந்தத்தில்
நானும் அவனும் இனைந்தோம்.
அக்கா தம்பி ஆனோம்..

என் எச்சில் பாலை பங்கிட்டு
இதழ் ஓரம் புன்னகைத்து
பிஞ்சு விரல் விரித்து
என்னை பிடித்தவன்
இன்னும் விடவே இல்லை..

நாங்கள் களவாடிய பொழுது
தங்கத்தில் பொறிக்க பட வேண்டும்
எங்கள் சண்டை காட்சிகள்
ஓவியமாய் தீட்ட படவேண்டும்..
எங்கள் பாசம்
வரலாற்று சுவடை தீண்டி
முத்தமிட வேண்டும்..

தந்தையை விட
ஒருபடி மேலே என்னை தூக்கும்
தங்கமே...!!
அன்னையை போல்
தந்தையை போல்
தம்பியை போல் 
உன்மையான நேசத்தை வேறு எங்கும் கண்டதில்லை..

என் உயிர் உள்ளவரை
மூவரின் உறவும் அன்பும் பாசமும்
முக்கடல் ஓவியமாய்
முழுநிலவாய் எனக்கு
என்று வேண்டும்.

காதல் கவிதை:

உணர்வுகளின் உச்சக்கட்டம்
கண் கதை பேசும்..
மனம் அலைபாயும்
மகிழ்ச்சி கண்ணில் வெடிக்கும்
இரவுகள் பகல் ஆகும்
நிலவு சூரியனாய் தெரியும்..

அவள் நிற்கும் திசை கிழக்காகும்
அவள் நடக்கும் திசை என் பாதையாகும்
மனதுக்குள் பூ ஒன்று பூக்கும்
அதில் அவள் பாய் போட்டு
பனித்துளியாய் பரவசம் மூட்ட..

என் மனமே வைரத்தை
தன்வசம் ஈர்த்த சுகத்தில்
மல்லாந்து படுத்து
காதல் போதையில் உச்சி கொட்டும்..
என் எழுத்தாணி
அவள் அழகை கவிதையால்
தீட்டி..
வண்ணம் பூசி
வனப்பின் போதையில் மட்டையாகி
மீண்டும் எழுந்து..
அள்ளி பருகும் அவள் காதலை
சிந்தாமல் சிதறாமல்.

காதல் ரொம்ப சுவை தான்.

நீ கவிதையில் வாழ்கிறாய் கவிதை:

காலங்கள் ஓடின
கவலைகள் வாட்டின
துன்பம் தீர்க்க
துறவு போனேன்..!!
சாலையெல்லம் மண்வாசம்
பூக்கள் எல்லாம் தேன் வாசம்

என் வாழ்க்கையில்
தொலைந்து போன நிமிடங்கள்
நினைவுயெனும் நாடாக்கள் மூலம்
ஓவியமாய் ஒளி வீச முயன்றது..!!

கருகியது என் மனமே

குற்ற உணர்ச்சி என்னை கொள்ளுதே..!!
கடந்து செல்ல நினைத்தாலும்
கால்கள் தடுமாறி நிற்கிறதே..
நானே பாவி
கண்கள் இரண்டும் இருந்தும்
ஆசையாய் பார்க்க முடியவில்லையே..
உன்னை ..

குற்ற உணர்ச்சி
கண் முன் வந்து நிற்குதே..

என் கவிதையில் கூட
காதல் செய்யும் உறவுகள்
மரணிக்க வாய்ப்பு தந்தது இல்லையேடி..!!
என்னை நம்பி வந்தவளே
நான் வருவதற்க்குள்
ஏனடி நீ மட்டும் தீக்குளித்தாய்.....!!
இந்த பூமி
நமக்கும் சொந்தம் தானடி
சாதி மதம் இனம்
கடந்து
நீ நான் கவிதை
மூவரும் 
சில நிமிடங்கள் ரசித்து வாழ்ந்து இருக்கலாம்.

என்னை தனியே தவிக்கவிட்டு
நீ கவிதையில் வாழ்கிறாய்
நான் உன் கல்லறையோடு
வாழ்கிறேன்.

உழைப்பு கவிதை:

காற்றில் கிழியும் தேகம்
சேற்றில் படியும் பாதம்
உழைப்பு உழைப்பு
நித்தம் உழைப்பு..!!
ஐந்து இஞ்ச் வயிறு நிறைய
அள்ளல் படும் அவலம்...!!
பறக்கும் தட்டுகள் இங்கே
ஓடும் ஒவ்வொரு மனிதனும்..!!
பாசம் பனமரத்து கல்லும்
இன்று இருப்பிடம் தெரியவில்லை..!!

கைப்பிடி கவிதை:

கண் விழியால் கதை பேசி
காதல் வளர்த்தவளே...
கைபிடிக்க தவிக்கிறேன்
எங்கே இருக்கிறாய்...
உன் ஓவியத்தை கேட்டால்
வண்ணத்தை கேட்க சொல்கிறது
வண்ணத்தை கேட்டால்
வானவில்லை கேட்க சொல்கிறது
வானவில்லை கேட்டால்
மழையை கேட்க சொல்கிறது
மழையை கேட்டால்
நீராவியை கேட்க சொல்கிறது
நீராவியை கேட்டால்
கடலை கேட்க சொல்கிறது
கடலை கேட்டால்
அலையை கேட்க சொல்கிறது
அலையை கேட்டால்
கரையை கேட்க சொல்கிறது
கரையை கேட்டால்
மணலை கேட்க சொல்கிறது
மணலை கேட்டால்
நீயும் நானும்
நின்று பேசிய பாதச்சுவடுகளை கேட்க சொல்கிறது..
பாதச்சுவடுகளை கேட்டால்
பாசத்தை கேட்க சொல்கிறது
பாசத்தை கேட்டால்
பார்வையை கேட்க சொல்கிறது
மீண்டும் பார்க்கிறேன்
மீண்டும் கேட்கிறேன்
நீ எங்கே என்னவளே
உனக்காக காத்திருக்கிறேன்
கை பிடிக்க.


எழுத்தாணி முத்தம் கவிதை:

தீ சுடரில்
ஆராதனை நீ
திலகமிட்ட
செந்தூரம் நீ
வற்றாத நதி நீர் நீ
வனப்பான இளந்தளிர் நீ
கைவிரல் தீண்டலில்
மின்சாரம் நீ..
கருவிழி பார்வையில்
பொற்கிழி நீ..
பூவுக்கு தெரியாமல்
சுரக்கும் தேனீர் நீ
சுவாசத்தில் மிதக்கும்
தங்க படகு நீ
ஆயிரம் உவமை
அள்ளி தெளிக்கிறேன்
ஆனால்
உன்மேல் உள்ள போதை
இன்னும் உவமையில்
நீச்சல் அடித்து
எழுத்தாணி முனையில்
உந்தி பாய்கிறது
உன் அழகை கவிதையால்
கரம் பிடிக்க.
நீ என்ன பிரம்மன் வீட்டு கட்டுத்தரியா
கவிதையில் ஜொலிக்கிறாய்
தங்க முலாம் பூசாத தாரகையே.
தவிக்கிறது என் கவிதை
எழுத்தாணியை இருக்கி பிடித்து முத்தமிடு.
தவிப்பு அடங்கட்டும்


கவிதை: ஆலங்கட்டி

ஆலங்கட்டி மழையால்
இதயத்தில் ஈடி இடிக்கும்
காதல் சித்திரமே..😍
உனக்காக இந்த பிறப்பு❤️
எனக்காக உந்தன் வனப்பு..❤️
கண்ணில் நீர் தெளித்து
மனதில் செடி வளர்க்கும்
காதல் சரித்திரமே❤️
இதயத்தின் நரம்பியல்
சந்தத்தில் ஊர்ந்து
காதலாய் சொந்தம் கொண்டாட
பிறந்தவளே..🥳
மனம் எனும்
பூமியில் ... புதைந்து பூக்கிறதே
உன் காதல்..❤️
அறுவடை செய்ய
ஆசையாய் காத்து நிற்கும்
காதல் பிறையே 🥰
நீ இல்லாமல் நான் இல்லை
உன் சுவாசம் இல்லாமல்
இவ்வுலகில் தென்றல் இல்லை...😋
எத்தனையோ இடர்பாடுகள்
நம்மை இறுக்கி பிடித்தாலும்
அன்று என் விரல்
பிடித்தவள்...
இன்னும் விடவில்லை...😍
இதை விட சிறந்த
காதல் ஓவியம்
இவ்வுலகில் உண்டோ.🧐


கவிதை:முல்லை அழகு

இரவுகள் நீ இல்லாமல்
இனிப்பே இல்லை..
இராத்திரி ரகசியம்
தவிப்பே தொல்லை..
முல்லைக்கு அழகு
சூட்டிய நறுமுகையே..
மெல்ல நட 
மெல்ல நட
தவிப்போடு பார்கிறேன்..

கட்டில் அறை யுத்தத்திற்கு
ஊறடங்கு போட்டவளே...!!
உள்ளம் தவிக்குதடி
மேனி சிலிர்குதடி...!!

ஆண் குயிலும் 
பெண் குயிலும் 
அழகாய் தீண்டயில..
செவி ஓரம் காம தீபம் 
அனலாய் எரியுதடி..

அணைக்க பிறந்தவளே
ஆசையான அள்ளி கொடி
கொடியாய் நீ காத்திருக்க
உன்மேல்
செடியாய் நான் படறலாமா.
செழித்து நாம் வளரலாமா.


கவிதை: சச்சரவு

மீண்டும் ஒருமுறை
இம்மண்ணில் பிறக்க 
போவதும் இல்லை...

இதுவே முதல் மற்றும் கடைசி
பிறப்பு..

நீயும் நானும் அறிவோம் தானே??

இருந்தும் ஏன் அன்பே
காயங்களும் கவலைகளும்?

அன்பாய் அரவணைத்து 
ஆதரவாய் இதழ் பதித்து 
இயற்கை தந்த பரிசத்தை
நித்தம் அள்ளி திண்று...

இன்பத்தில் திளைத்து
சந்தர்ப்பத்தில் கடித்து
சதுரங்கத்தில் பினைந்து
விடியலில் கலைந்து
வியர்வையில் நனைந்து

பழங்கதைகள் பல பேசி
உடல் அசைவுகளை வரியில் கோர்த்து
திகட்ட திகட்ட படித்து
செப்பேட்டில் இன்பத்தை பதிவிறக்கி
பூமி மேட்டில் கால் விரல் பதிக்காமல்
காதல் கூட்டில் பயணிப்போம்
கணவன் மனைவி யாக.
சண்டை சச்சரவு இல்லாமல்.


கவிதை: தாகம் பார்வை

கண்களால் கடத்த பட்ட
காதல் உனக்கு கிடைத்தாத அன்பே?

காயங்களும் கவலைகளும்
என் அன்பால் மறைந்ததா அன்பே??

தூரத்தில் நீயும்
துயரத்தில் நானும்
வியர்வை கூட
அசுரனாய் ஆனதை நீ அறிவாயா அன்பே??

அறிவில்லையா!!
இதோ அறிந்துக்கொள்..!!

தூரத்தில் நீ நிற்க
தாகத்தில் நான் பார்க்க
நெற்றி வியர்வை நதியாய் மாறி
கண் எனும் கடலை அடைய
தூரத்தில் உன் முகம் மறைய
வேகமாய் கோவம் வந்தது வியர்வை
எனும் அசுரன் மேல்...
அசுரனை துடைத்து விட்டு
கருவிழியை போர் கருவியாக்கி
உன் மீது படையொடுக்கிறேன்
ஏனோ ஒற்றை
தடுப்புச்சுவர் நித்தம் மறைக்கிறது
உன்னை அடைய விடாமல்...
நீ என் அன்பை
வண்ணம் இல்லாத கோலமாக பார்க்கலாம்
நான்
எனது வாழ்க்கை எனும்
கோலத்தில் முதல் புள்ளியாய்
உன்னையே பார்க்கிறேன்.

காத்து நிற்கிறேன் கனவுகளோடு.


கவிதை:அவள் மட்டும் ஏன் அடுப்படியில் 

அவள் யார் என்று அவள்
இன்று வரை அறிந்தது இல்லை....
நீண்ட வலிகளை நித்தம்
சுமக்கும் சித்திரை நிலவு பெண்...
அவளை பற்றி வர்ணிக்க
வரிகள்...வலைகாப்பு கேட்கும்...
மேகம் தூவானம் வீசும்..
காற்று சுதந்திரம் அடையும்...
அவளை சுற்றி அனைத்தும்
அழகாய் வாழும்.....
அவள் மட்டும் ஏன்
அடுப்படியில்.

கவிதை: கரங்களில் இன்பம்

புள்ளிகளை இனைத்தால்
மட்டுமே ...
புள்ளிகள் கோலம் ஆகிறது...!!
தனி தனியே
இருந்து விட்டால்.... புள்ளிகள் வெறும் புள்ளிகள் தான்..
அதுபோல 
மனங்களை இனைத்தால்
மட்டுமே..
கரங்கள் நான்கு ஆகிறது
வாழ்வியல் இன்பம்
வாழ்க்கையை வசியம் செய்கிறது
பிரிந்து வாழ
இங்கே சட்டம் இருக்கலாம்
மனம் உகந்து வாழ
இங்கே இன்பம் மட்டுமே இருக்கிறது.
சட்டமா இன்பமா
முடிவு உன் கையில்.


கவிதை: பிரம்மன் படைப்பு

தினமும் காலையில்
அவள் முகம் சித்திரம்...
சின்ன இதழ் அழகி
மயக்கும் விழியழகி
சின்னதாய் சிரித்து விட்டாள்
முத்துக்கள் சிதறும்
முறைத்து பார்த்து விட்டாள்
கடல் அலை அடங்கும்...
வைகாசியில் பிறந்த
என் கைராசியே..
வானமே உன் அழகில்
மயங்கி கிடக்க ....
நான் மட்டும் மயங்காமல்
இருப்பனா?
பிரம்மன் படைப்பின்
அழகியல் ஓவியம் நீ..
உன்னை காணது
என் விடியல் இல்லையடி
அனுதினமும்.

கவிதை:கருங்கூந்தல்

மெளனமாக நின்றேன்
என்னவளே உன் அழகை கண்டு...
உன் கண்கள் என்ன
தேனில் ஊறிய நெல்லி கனியா!!
பார்த்ததும் வசியம் செய்கிறது...!!
பரவசம் மூட்டும்
உந்தன் அழகியல் ஓவியத்தை
பிரம்மன் எதில் அச்சு எடுத்தானோ
தெரியவில்லையடி..!
உந்தன் கருங்கூந்தல் என்ன நதியா?
தலையில் துவங்கி பாதம் வரை நீள்கிறது...
அசைந்து ஆடும்
பூங்காற்றே...
நீ எப்போது என் சுவாசத்தில் கலந்து
என் இதயத்தில் குடிபுகுவாய்..

கவிதை: ஆடவன் தவிப்பு

தவிப்பு 
பல ஆண்டுகளாக
காத்து இருக்கிறேன் உயிரே
உன் வரவை எதிர்பார்த்து....!!
சித்திரையில் 
கைபிடிக்க நினைத்தேன்
ஆசைகள் தொலைந்தது...!!
ராகுவின் ஆட்சியால் ...
வைகாசியில்
கரம் பிடிக்க நினைத்தேன் 
ஆசைகள் தொலைந்தது
கேதுவின் ஆட்சியால்..
ஆனியில்
ஐவிரல் பிடிக்க நினைத்தேன்
ஆசைகள் தொலைந்தது
செவ்வாயின் ஆட்சியால்
ஆடியில் 
மெளனமாக கடத்த நினைத்தேன்
ஆசைகள் தொலைந்தது
புதனின் ஆட்சியால்
ஆவணியில்
மீண்டும் ஆர்வம் கொண்டேன்
ஆசைகள் தொலைந்தது
சந்திரன் ஆட்சியால்
புரட்டாசியில்
புத்துணர்வு கொண்டேன் 
ஆசைகள் தொலைந்தது
சுக்கிரன் ஆட்சியால்
ஜப்பசியில்
ஆயத்தமானேன் 
ஆசைகள் தொலைந்தது
சூரியன் ஆட்சியால்
கார்த்திகையில்
காதல் சொல்ல வந்தேன்
ஆசைகள் தொலைந்தது
குருவின் ஆட்சியால்
மார்கழியில்
மயங்கியே போனேன்
ஆசைகள் தொலைந்தது
சனியின் ஆட்சியால்
கிரகங்களின் பார்வை மற்றும் சேர்க்கைகள் நடந்ததே தவிர...
உன் வரவு இன்னும் நடக்கவில்லையே அன்பே...!!
காலங்கள் கழித்து...
கனவுகள் கடந்து...
தேகத்தில் சுருக்கம் துவக்க
ஜாதகம் ஒரு தடை கல்லாக இருக்கட்டும்...
என் மனதை ரசித்து
என் உணர்வை ருசிக்க
என்னோடு வா....
நீ எந்த தோஷமாக இருந்தாலும்
நான் ஏற்கிறேன்...!!
கிரகங்களின் வீழ்ச்சியில்
நாம் ஆட்சி செய்வோம்...!!
இவ்வுலகில் ஆண் பெண்
இனைந்தால் இன்பமும் இல்லறமும்
தானே அமையும்...
இது தானே இயற்கையின் நீதி.


தவிப்பு அடங்கும்.

கவிதை: மனதின் துடிப்பு 

அன்பான பேரழகி
பகல் நிலவாய் ஜொலிக்கும் 
உந்தன் வட்ட முகம் பிடிக்கும்...!!
என்னை கண்டதும்
தலைச்சாயும் 
உந்தன் வெட்கம் பிடிக்கும்..!!
வெட்கத்தின் தங்கையாம்
நாணம் சினுங்க 
மிதந்து வரும் ஓசை பிடிக்கும்...
என்னை கண்களால் போர் செய்து 
வெற்றி கொள்ள துடிக்கும் ..
உந்தன் கருவிழிகள் பிடிக்கும்...!!
ஜாடையில் பார்க்கும் 
உந்தன் மனசு பிடிக்கும்...
சரித்திரம் பேசும் உந்தன் நடை பிடிக்கும்...
நெருங்கிய பொழுது
உந்தன் மல்லிகை வாசம் பிடிக்கும்..
மயக்கும் வனப்பு பிடிக்கும்
மடியில் சாய பிடிக்கும்
உன் கைவிரல் தொட்டதும்
என் மனமோ 
திருமணம் செய்துவிட 
துடியாய் துடிக்கும்.


கவிதை:புகார் 

காரணம் இல்லாமல்
என்னை களவாடும் 
உந்தன் சிரிப்புக்கு
எந்த சட்டத்தில் 
புகார் செய்வது???
எனக்கு தெரிந்த ஒரே சட்டம் 
திருமண சட்டம் தான்..


கவிதை:நிலா அழைப்பு 

ரகசியம் பேச 
அழைக்கின்றேன்...
இன்று ஒர் இரவு 
வருவாயா...
உந்தன் நிழல் மீது 
நான் ஒப்பந்தம் போட வேண்டும்..
இன்று ஒர் இரவு
வெளிச்சம்
தருவாயா...
சமிக்கை சொல்லடி
கருமை குளித்தவளே..


கவிதை: சமரசம் 

அன்பான மனைவி
ஆயிரம் முத்துக்களுக்கு சமம்...
சமுகத்தின் நீதியில்
அவளே தேவதை....!!
உழைப்பு என்பது 
அவளின் பிம்பம்..!!
கலைப்பு என்பது
அவள் கண்டிராத ஓவியம் 
இப்பேர்பட்ட தேவதையை
நாம் எப்படி பார்க்க வேண்டும்??
மனைவி என்பவள்
இன்பத்தின் நீட்சி இல்லை
அவள் ஒரு மலர்
தன்னுடல் வாடினாலும்
முகத்தில் ஒரு சிரிப்பு
அவள் எப்போதும் வைத்து இருப்பாள்...
அவளிடம் அன்பாக பேசு
ஆதரவாக இரு..
தினமும் பேசு
திமிராய் பேசாதே
அவள் தான் உந்தன் பிம்பம்
என்று நினை...
எப்போதும் உன்மையாய் இரு..
அவளோடு உரையாடு
அழகாக விளையாடு
அவளுக்கு என்றும் தீபமாய் இரு
அவள் கைவிரல் பிடி
அவள் அறிந்ததை பெருமை படுத்து
அவளை ஊக்கப்படுத்து
தைரியம் கொடு
சந்தேகம் கொள்ளாதே
சங்கடங்கள் தவிர்
சமத்துவம் பேனு
சந்தோஷம் இல்லத்தில் மிதக்கட்டும்
சமரசம் முந்தானையில் முடியட்டும்.


முடிவுரை:


முத்தான சிந்தனைகள் சில நிமிடங்கள் நம்மை சந்தோஷம் படுத்தும்.




No comments:

Powered by Blogger.