முன்னுரை: எங்கள் கவிதை தொகுப்பில் இருந்து அழகிய கவிதைகளை உங்களுக்கு பதிவு ஏற்றி இருக்கிறோம்.
தமிழ் கவிதைகள் தொகுப்பு- 09| Tamil Kavithaigal collection -09
வாசம் கவிதை:
கமழும்
நங்கை அவள் வந்துவிட்டால்...
வானமே குடை பிடி
சூரியனே விளக்கு ஏற்று..
மரங்களே அசையுங்கள்
வீசட்டும்
அவள் வாசம்மெங்கும்
இந்த பொன்னான பூமியில்
காமம் கவிதை:
உயிரியல் தேரில்
அலங்கரிக்கும் நந்தவனம் காமம்...
ஓரறிவு உயிர் முதல்
ஆறறிவு உயிர் வரை
ஆசைப்படும் நந்தவனம் காமம்..
என்பால் இச்சைக்கு
பிறர் பால் உயிர் நீத்தால்
காமம் கசக்கும் கசக்கும்..
இங்கே
தழுவுவதும்
தீண்டுவதும் சுகமே
பிறர் பால் ஒப்புதல் ஓடு..
கா -எனும் கணவனும்
ம- எனும் மனைவியும்
ம்- எனும் அசைவில் அந்தரங்கம்
புகுந்தால்...
காமம் இனிக்கும்
காதலோ
காலம் திளைக்கும்.
வெள்ளம் கவிதை:
காட்டு வெள்ளம் போல
கரை கடந்து வந்தவளே...
ஆவாரம் பூவா நீ
அதிமதுர தேனா நீ
மீசையோடு தாவணிய
சேர்த்து வைத்து தைத்தவளே
காதோரம் கானம் பாடும்
காதல் நிலவும் நீ தானே..
மெல்லமாய் துள்ளி ஓடும்
முயலும் நீ தானே
ஆசை காதலியே
அந்தரங்க தேன் சுவையே
தினமும் தித்திப்பு ஊட்டும்
காதல் ரதியே
வெள்ளமாய் இனிக்கும்
கொள்ளை அழகுக்காரி
கட்டில் அறை
தளவாடங்கள் காத்து கிடக்குதடி
கயல்விழியே
உனக்காக.
மதமா இனமா கவிதை:
ஆசையோடு காதல் பயணம்
ஆண்டுகள் சில கழிந்தன...!!
காதலின் அடுத்த கட்ட நகர்வுக்கு
ஆயத்தமனோம்..
இங்கே தான்
இடியுடன் மின்னலும்
இயற்கை பரிசு கொடுத்தது..
எப்போதும் அன்பினை கொடுத்த
அப்பா ஆயுதத்துடன்...
அம்மா கயிறு டன்...!!
என்ன செய்து வைத்து இருக்க
இருப்பதை விட செத்துவிடு..
அக்காவின் வார்த்தைகள்
இதுவரை நான் காணத
போலி முகங்கள்..
நான் இருப்பது எங்கே
வீட்டிலா வேறு எங்கையுமா
என நினைக்க வைத்த தருனம்.
காதல் செய்வது குற்றமா?
நான் நினைப்பாதாய்
நாலும் எண்ணி செய்த தந்தை
நான் விரும்பியதை
ஏற்றுக்கொள்ள மறுப்பது ஏன்!!
மதமா இனமா.?
இரவின் சுழல் கவிதை:
என் இரவு பயணங்கள்
சுவையிலும் இனியது...
நட்சத்திரம் நாட்டியம் ஆடும்
வானம் திரைபிடிக்கும்
மேகங்கள் சாட்சிகள் ஆகும்
தென்றல் காற்று
சில்மிஷம் செய்யும்...
நிலவு வேடிக்கை பார்க்கும்
என் மனமோ இவைகளோடு
இரவு உரையாடலுக்கு ஆயத்தமாகும்...
காலை முதல்
மாலை வரை
மீசையோடு தாவணியை
கோர்த்து தைத்தவளின்
காதல் உற்சவம்
காட்சிகளால் மீட்டப் படும்
மரமும் பறவையும்
ஆர்வாமாய் கேட்கும்..!!
வால் நட்சத்திரம்
பட்டாசு வெடிக்கும்...
இருள் கண் விழிக்கும்
மினுக்கட்டாம் பூச்சி முத்தமிடும்
நரிகள் கீதம் பாடும்
நாய்கள் இசை அமைக்கும்
மகிழுந்து இம்மசை படுத்தும்
கவிதைகள் பொம்மையாகும்
கண் மூடி துயில் கொள்ள
விரும்பினால்..
மனமோ
காதல் நிகழ்வுகளை
என்னவளோடு அசைபோடும்..
இரவுவின் இனிமை
சுவையிலும் இனியது.
அன்பே கவிதை:
பகல் நிலவு தான்
உன்னை கண்ட
நாள் முதல்....
வெயில் ஏது
குளிர் ஏது
தெரியவில்லை... வித்தியாசம்
ஆனால் ஒன்றடி
மினுமினுக்கும்
உன் வண்ண கண்கள்
மட்டும் தெரிகிறது
மெத்தை இரவிலும்
வைரமாய் ஜொலிக்கிறது
என் ரகசிய
காதல் அறையில்.
அறுவடை காதல் கவிதை:
சோழதேசம்
நெற்கதிர் புடைச்சூழ
அறுவடைக்கு
ஆள் தேடி அலைந்த பொழுது
என் கண்ணெதிரே தோன்றினாள்..
காட்டு வெள்ளமாய்
கரை கடந்து வந்து தாக்கினாள்
சோழநாட்டு இளவரசி
சொக்கலிங்கம் பெத்த மகள்
வனப்புக்கு இனிப்பு ஊட்டும்
வாலிப வயசுக்காரி
வனப்பான பேரழகி
கண்டதும் காதல்
அவளை என் கண்கள்
அறுவடை காதல் செய்தது.
பெண்ணின் தவிப்பு கவிதை:
கத்தி மீசையோடு
அருகம்புல் தாடியோடு
இளந்தென்றல் காற்றோடு
தங்க சங்கிலியால்
என் இதயம் இழுத்து சென்றவனே..!!
இந்த பிரபஞ்சத்தில்
நான் இதுவரை கண்டிராத
இயற்கை ஓவியம் நீ...!!
மெளனத்தை மட்டும் ரசித்த இதயம்
முதல் முறையாக உரையாட ஆசைப்படுகிறது உன்னோடு..!!
நீ யார் என்று
தெரியவில்லை..
இருந்தும் என் மனமோ
மனதில் ஆயிரம் கோலம் வரைகிறது..!!
நீ கள்வனோ வேடனோ
ஏதும் அறியவில்லை..
காணமல் போனது
என் மவுனமும் இதயமும்..!!
உன்னை கண்ட பொழுது
உதிரம் எரிமலையாய் கொதிக்கிறது
நீ திரும்பி என்னை பார்க்கையில்
பனித்துளியாய் கரைகிறது...!!
அந்த மீசை ஈட்டியாய்
இதயத்தில் பாய....
மீசையோடு தாவணியை
கட்டிப்போட்டு இசை மீட்ட
இதயம் தவிக்கிறது...!!
சரி என்று சொல் வாயடா..
போறதுதெங்கெ கவிதை:
காட்டு மல்லி பூவே
நீ கால் கடுக்க போறதுதெங்கெ
கரிசல் காட்டு தேனே
நீ வழித்தேடி போறதுதெங்கெ
தங்க அழகி
தித்திக்கும் இனிப்பி
பால் சுரக்கும் மதன நீரின் மத்தாப்பூ
நீ மறைமுகமாய்
போறதுதெங்கெ..
மீசை இல்லா
பூனை குட்டி
முன்னழகில்
செவத்த குட்டி
நீ ஆடி அசைந்து போறதுதெங்கெ.
தழுவும் காதல் கவிதை:
நெற்கதிர் புடைச்சூழ
வெண்நாரை வட்டமிட
பூமி பூக்கோலம் விரிக்க
ஆகாய கங்கை
ஆறாய் உருமாறும் நேரம்.
ஆனந்தம் புதிதாய்
புல்லரிக்கும் காலம்..
நீரின் வீழ்ச்சி
கணங்களை இளைப்பாறும் நேரம்
கண்ணா உன் மடியில்
நான் தழுவும் காலம்..!!
நீண்டு ஒடும்
நதியில் நனைந்து
வானத்தில் பாதை ஏற்று
பட்டாம்பூச்சி வண்ணத்தை திருடி
நம் மேனியில் பூசிக்கொண்டு
நான் நீயாக
நீ நானக உருமாறும் நேரம்...
ஆசை மனைவி கவிதை:
இவ்வுலகில் சிறந்த ஓவியம்
என் மனைவி...!!
உலகத்தின் அதிசயத்தில்
ஒன்றாக இருக்க வேண்டியவள்
ஏனோ
என் வாழ்க்கையில் அதிசயமாய்
வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்..
நான் என்ன தவம் செய்தனோ
அறியவில்லை....!!
எங்கள் ஒருநாள் பொழுது
உங்களுக்கு போதும் ...
புரிதலுக்கு..
காலையில் ஆசையாக
எழுப்பும் என் ஆசை மனைவி..!!
நெத்தியில் முத்தம்மிட்டு
காலை வணக்கம் சொல்லும் போது
மீண்டும் ஒரு இரவு பிறக்காத என்று
என் மனம் ஏங்கும்..!!
என்னை எழுப்பிய தேவதை
அவசர அவசரமாக சமயலறை நுழைவாள்...
பாத்திரங்கள் இவளை கண்டதும்
உயிர் பெற்று விழிக்கும்...!!!
ஈரம் சொட்டும் இளந்தென்றல் இமைக்காமல் ஜன்னல் வழி நோக்கும்..!!
கமகமக்கும் தேனீர்
தேன் நிலவை மீண்டும் அழைக்கும்..
இளஞ்சுரியன் வாசலில் வந்து நின்று
தேனீர் கொஞ்சம் கேட்கும்..!!
நான் குளித்து விட்டு
வருவதற்குள்....!!!
உணவு உண்ணும் மேசை
செழித்து வளர்ந்த வனப்பாய்
ஒருபுறம் வட்ட நிலவு போல் இட்லி
மறுபுறம் மனமனக்கும் கொத்தமல்லி துவையல்....
தாமரைப்பூவை தாங்கி நிற்கும்
தண்டு போல் ...
சட்டினியுடன் என்னவள்...!!
ஆசையோடு சமைத்து வைத்து
ஆர்வத்தோடு நிற்பாள்...!!
நான் ரசித்து உண்ணுவதை காண..
தேனில் ஊறிய மாதுளை போல்
தேகம்மெல்லாம் தித்திக்கும்
அவள் சமையல்..
என்னவளை அருகில் அழைத்து
கைவிரல் பிடித்து முத்தமிடுவேன்
அவள் அதை விரும்பாதது போல்
இன்னும் கொஞ்சம் வைக்கவா என்று கேட்பால்...
நான் போதும் என்பேன்
இது மட்டும் என கூறி இரண்டு இட்லி சேர்த்து வைப்பால்...!!
இன்பம் திகட்ட திகட்ட
உணவு மேசையில்
ஒரு உள்ளறமே நடக்கும்...!!
தமிழே வாழ்க கவிதை:
விந்திய மலைத்தொடர்
பெற்று தந்த அழகிய தமிழ் இனமே!!
இயல் இசை நாடகம் எனும்
முக்கோண விதியின் காவியமே....!!
உயிரும் மெய்யும் தன்னுள் கொண்ட
பழந்தமிழர் காப்பியமே!!
எழுத்துக்களின் நடை அழகே
ஒலியின் அடர்த்தியே!!
தேன் வடியும் பாத்திரமே!!
அகத்தின் நெடுந்தொகையே
நற்றிணையின் நல்வழியே
ஏலாதியின் மருத்துவமே..!!
பொதுமறையின் எழில் வடிவே...!!
நன்நெறி கூறும் பெரியபுரணமே !!
இந்த பிறப்பு முழுவதும் தாகம் தீர்க்கும்
என் தாய்த்தமிழ் அமுது..!
வேறு என்ன வேண்டும்
கடல் கடந்து திரவியம் தேடினாலும்
அமிர்தமாய் நீ தானே
என் அன்னை தமிழே...
வாழ்க வாழ்க
என் தாய் தமிழே வாழ்க.
கை கோத்து கவிதை:
அலைபேசியில் அழைப்பும் இல்லை
குறுஞ்செய்தி வாயிலாக வரவேற்பும் இல்லை...
நெடுந்தொலைவு பயணத்திற்கு பேருந்தும் இல்லை...!!
நடைபயணமாய் வந்து அழைக்க பாதையும் இல்லை...!!
ஆழமாய் நினைவில் கொள்ள
ஆறறிவும் இல்லை..
இதில் ஏதும் இன்றி
ஒவ்வொரு துக்க நிகழ்வுகளிலும்
கூட்டமாய் கை கோர்த்து நிற்கிறது
காக்கை.
தன் இனத்துக்காக.
மனிதா நீ எப்போது
கை கோர்ப்பாய்.
அவள் என் தாய் கவிதை:
நான் உணவு அருந்தும்
போது எல்லாம்
என்னவளுக்கு ஒரு வாய்
ஊட்டி விடுவது வழக்கம்...
நான் ஊட்டும் உணவை
வாங்கி கொண்டவள் முகம்
மத்தாப்பாய் மின்னும்...
அவள் தரும் தண்ணீர்
அமிர்தமாய் இனிக்கும்..
இதனை மேசை வேடிக்கை பார்க்கும்...
சில நிமிடங்கள்
கடந்த பின்பு..
என்னவள் அலமாரி நோக்கி ஒடுவாள்
எனக்காக பார்த்து பார்த்து
துவைத்து தேய்த்த
சட்டையை எடுக்க..
நான் சிவப்பு வண்ணத்தில்
புடவை கட்டி இருக்கேன்..
நீங்களும் இதே வண்ணத்தில்
உள்ள இந்த சட்டையை அணிந்து கொள்ள விரும்புகிறேன்...என்று கண்ணோரம்
கண் அடிப்பாள்..
எனக்கோ அவள் கண்கள்
மினுக்கட்டாம் பூச்சியை
நினைவு படுத்தும்...
நான் மீண்டும் ஒருமுறை
அவள் முன் குழந்தையாய்
அவள் என் தாய்யாய்
உருமாறி என்னை அலங்கரிப்பாள்..
ஆடவர் அழுகை
கணவனை இப்படி பாருங்கள்...
கல்லூரி காலம் முடிந்து
கனவுகளோடு ஒடுகிறான்
சிலருக்கு கனவுகள் நிஜம் ஆகிறது
பலருக்கு கனவுகள் வெறும் கனவாகிறது.
காலங்கள் ஒருபுறம் துரத்த
குடும்ப சுமைகள் மறுபுறம் துரத்த
எங்கே ஓடுவது என்று அறியாமல்
கனவோடும் சுமையோடும்
ஒடுகிறான் ஆண்மகன்....
ஒருவழியாக ஒரு இடத்தில்
வேலை கிடைத்து பெரும் மூச்சு விட்டால்..
அங்கேயும் அரசியல்..
பதவி உயர்வு பெற தகுதி இருந்தும்
பலர் பாதத்தில் நம்மை
நம்ப வைத்து கழுத்து அறுக்கப்பட்டு
மீண்டும் பழைய நிலைக்கு தள்ளப்படுகிறேன்
வரும் வருமானத்தை ஈட்டித்
தாய் தந்தை தங்கை அண்ணன் யென
உடன் பிறந்த அனைவருக்கும்
நான் இருக்கேன் கலங்காதே என்று ஆறுதல் கூறி..
கடன் பட்டு அவர்களுக்கு எல்லாம் செய்து
திரும்பி பார்க்கையில்
பத்து வருடங்கள் ஓடி விட்டது..
இப்போது என் திருமண வயதை கடந்து
முடி நரைத்து...மீசை நரைத்து
தேகம் மெலிந்து.. மனதில் ஏதேதோ
கவலைகள் தீரும் யென நம்பி...
பாதையாக வருங்கால மனைவியை
எதிர்பார்த்து காத்து நிற்கும்
ஆண்மகன் ஆனோன்...
இன்று தான்
அவளுடன் முதல் சந்திப்பு
அவள் என்ன நினைப்பாள்
முடி நரைத்தவன்
வயது முதிர்ந்தவன்
என்று தானே நினைப்பாள்
அவள் என்ன செய்வாள் பாவம்
என் வாழ்வின் தியாகம்
நான் இன்னும் அவளிடம் சொல்லவில்லையே
ஒருவேளை சொன்னால்
என்னை ஏற்பாளா!!!
அன்பே
நீ என்னை ஏற்றுக்கொள்ள வேண்டும்
ஏன் தெரியுமா ...
வருமையை மட்டும் என் வாழ்வில்
பார்த்த எனக்கு
முதல் முறை
உற்சாகம் வருகிறது
வாழ்வில் மீண்டும் போராட...
ஆறுதல் கொண்டு
கை கோர்..
நிச்சயமாக அன்பாக
இந்த பூமி பந்தில்
அழகாய் ஆதாம் ஏவாள்
போல நாமும் வாழ்வோம்.
சின்னத்தாயி கவிதை:
கண்ணாலே நான் செய்த
ஓவியமே சின்னத்தாயி..
பதில் ஒன்றும் கூறாமல்
போறியடி சின்னத்தாயி..
ஆசைப்பட்டு வளத்த என்னை
அம்போனு விட்டு புட்டு...!!
தீராத வலியோடு
போறது எங்கே சின்னத்தாயி..
மண்ணாலே என்ன செய்து
மழையில விட்டுப்புட்டு
கண்மூடி காணமா
போறது எங்கே சின்னத்தாயி..
தங்கத்துல என்னை செய்து
தாங்கி என்ன வளத்தவளே
தனியா தவிக்க விட்டு
போறது எங்கே சின்னத்தாயி..
கொடிய நோய் ஒன்னு
உனை தேடி வந்திச்சோ
மறைத்து அதை நீ
வளர்த்தியோ சின்னத்தாயி...
விவரம் தெரியாமல்
வெம்பி நிற்கும் சின்னபுள்ள
கையில கரிசட்டி
கண்ணுல எரியுதம்மா....!!
ஆறுதலுக்கு ஆளும்யில்லை
போறதுக்கும் வலியும் இல்லை
என் ஆசை அம்மாவே
என்னை கூட்டிட்டு போய்விடும்மா.
மகிழ்ச்சி பொங்கும் மங்களம் கவிதை:
மகிழ்ச்சி பொங்கு மனமே!
புது மகிழ்ச்சி பொங்கு!
கிழக்கே ஒருவன் தீ சுடரில்
பிறக்கின்றான்..
மகிழ்ச்சி பொங்கு மனமே!!
மகிழ்ச்சி பொங்கு..!!
ஏதும் துணையின்றி!
கிழக்கே கதி யென்று
இளம்சிவப்பில் வருகின்றான்-ஒருவன்
மகிழ்ச்சி பொங்கு மனமே!!
மகிழ்ச்சி பொங்கு..
தீராத வலிக்கு
அழுகை தீர்வா!!
சேறாத இடத்துக்கு
பாதை தடையா...!!
துனிந்து எழுந்து
முயன்றதை செய்யுடா..!
முட்கள் கூட -ஒருநாள்
பாதையாய் மாறும்..
சாரை எரும்பை
சாடையாக பார்- நண்பன்
கூட்டம் இருப்பதை காண்!!
நெடுங்காலம் அசதியும் இல்லை!!
சிகரம் ஏறுவதை இலக்காய் கொண்டு
நகரும் நகரும்
இலக்கை நோக்கி...
மனிதா மனிதா
சோகத்தை சேர் ... !!
கெட்டியாக மூட்டை கட்டு
தூக்கி சுமப்பது கொடியது அறிவாய்?
சோகத்தை தூக்கி மழைத்துளியில் வீசு!!
மகிழ்ச்சி பிறக்க இளந்தென்றலை தீண்டு!!
மேகத்தை விலக்கி வானத்தை பார் வழிகள் தெரியும்
பிடித்து நடந்து வா
மகிழ்ச்சி பொங்க பொங்க.
முடிவுரை:
சிறந்த கவிதைகள் நம்மை சுற்றியுள்ள நிகழ்வுகளை நினைவு படுத்தும்.
No comments: