சோழநாட்டுகவிஞர்
தமிழ் கவிதைகள் தொகுப்பு- 08| Tamil Kavithaigal collection -08
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
December 1, 2023
பள்ளி பருவத்தில் உடல் மாற்றத்தில். உந்தப்பட்ட முதல் காதல்...!! அன்று காதலித்த பொழுது காலப்பொழுதுகள் காதலில் நனைந்தது...!! நேரில் பார்ப்பதும் நிமிடங்கள் ரசிப்பதும் காதல் இல்லை... எங்கோ இருந்தாலும் உனக்காய் இருப்பேன் என்றாயே என்னவனே!! அன்று நீ கூறிய வார்த்தைகள் நெஞ்சிலே பதிந்தது!!! இன்றும் அதே இளமையோடும் அதே காதலோடும் பதினைந்து வருடங்கள் கழித்தும் காத்து நிற்கிறேன்...!! எங்கே நீ என்னவனே!! எங்கே நீ...!! காத்திருக்க சொன்னாயே காதல் செய்து போனாயே!! காதலித்தது தவறா! நெஞ்சிலே பதிந்தது தவறா!! உனக்காக நான் காத்து நிற்கிறேன் வருவாயா!!
தலைப்பு: முதல் காதல் கவிதை
நீரில் இருந்து நீராவி பிறந்தது போல்.. உன்னிடம் இருந்து நான் பாவி பிறந்தேனோ தாயே!! அடிவயிறு கணக்க எனை சுமந்தவளே...!! என்னை இறக்கி வைத்து நீ போறது எங்கே!! தென்னை ஓலை நாலு பறித்து ஓலை மேலே புல்லு வைத்து புல்லு மேல சேலை துணி விரித்து அதுக்குள்ள என்னை வைத்து இரத்தம் வடிய வடிய நீ போறது எங்கம்மா... தொப்புள் கொடி வானம் கொண்டு பத்து மாதம் காவல் காத்தவளே.. முட்புதரில் எனை வீசி விட்டு நீ போறது எங்கம்மா...!! கறுப்பா பிறந்ததால் தூக்கி வீசி போறியோ கரை சேர்க்க முடியாமல் கண் கலங்கி போறியோ.. அம்மா நீர் குடத்தில் சுமந்தவளே பால் இன்றி நிற்கதியா கிடக்கின்றேன் நின்று பாரம்மா.. நானும் வரேன் நில்லம்மா.
தலைப்பு: நிற்கதி கவிதை
அன்பே ஆயிரம் பூவாய் தினமும் பூக்கிறாய்.. சித்திரம் அழகாய் தினமும் சிரிக்கிறாய்.. கடலாய் நீ கரையாய் நான் கை பிடிக்க முடியவில்லையே நிஐமாய் நீ நிழலாய் நான் நித்தம் பயணிக்க முடியவில்லையே பட்டாம்பூச்சி வண்ணத்தை தன்னுள் கொண்டவளே...!! என் விரல்களில் வண்ணம் பூசி கலைவது ஏன்?? காற்றில் கிழியும் இலை ... காற்றின் மேல் கோவம் கொள்வது இல்லை.. என் காதலே இலையாக நான் காற்றாக நீ நாம் இருவரும் இணைந்து காதல் தோணியில் வலம் வரும் நாள் எப்போது. ஆண்ட்ராய்டு அழகி கருப்பு நிறத்தழகி கரிசக்காட்டு பூவழகி கருமை உதட்டில் பால்நிலவு பிறப்பது எக்காலம்... காதல் உடன்பட்டு பாவை ரசம் பட்டு சினுங்கி நடப்பவளே சில்மிஷம் செய்வது எக்காலம் ஆன்டிராய்டு அழகியே மென் பொருள் கண்டு ப்பிடிப்பே.. தட்டச்சு மந்திரமே காட்டுக்குள் சென்று தண்ணீர் தேடுவது எக்காலம்... கருப்பட்டியின் பிம்பமே காதல் வயக்ரா வே நீரோடையில் நீ நடக்க மனதோடையில் மகிழ்ந்து நீந்துவது எக்காலம்... அழகிய பாய்மரமே அந்தரங்க பேய்மரமே தூரிகை நான் கொண்டு தூக்கி ரசப்பது எக்காலம்... மஞ்சள் நீ அரைக்க மனசோரம் அது மனக்க.. இளமை விளையாட்டு இனிதே துவங்குவது எக்காலம்... தண்ணீர் குடம் தூக்கி வைத்து... தக தகனு நடப்பவளே.. தடுமாறி நீயும் விழ உனைத்தாங்கி நான் தீண்டுவது எக்காலம்... இளசான இளம்மேனி இளைப்பாற மடி சாய இமை மூடி.உறவாட நீ இன்ப முத்தம் தருவது எக்காலம்...
தலைப்பு: காதல் தோனி கவிதை
என் அன்பு மகளே பத்து மாதம் மொட்டு விரித்து... இன்று பூத்து நிற்கும் என் செல்ல மகளே...!! உனக்கு நான் பால்சோறு ஊட்டுகிறேன் உன் குட்டி வயிறு நிறைந்தாத என் மகளே...!! நீ முதல் அகவை கடந்து... நீ தத்தி தடுமாறி நடந்து.. இன்று நீயே உனக்கான உணவை எடுத்து உண்ணும் போது மகிழ்ந்து போகிறேன்...!!! உன் சாயலில் உன் தந்தையை கண்டு மகிழ்ந்து போகிறேன்...!! நீ உண்ணும் உணவை எனக்கு ஊட்ட சொல்லி உனக்கு சொல்லி கொடுத்தது யார்?? சுவற்றில் கைபிடித்து நடந்தால் கீழே விழ மாட்டோம் என்று சொல்லி கொடுத்தது யார்....!!! ஒவ்வொரு செயலும் உன் தந்தையை போல் செய்கிறாய்... உன்னிடம் கணவனை கண்டு அவர்களை நான் மறந்தே போனேன் என் அன்பு மகளே....!!! உன் விரல் இடுக்கில்... சங்கமிக்கும் சோற்று பருக்கை எல்லாம் தேவரிடம் வரம் பெற்ற தேன் அமிர்தமோ... சிந்தும் பருக்கை எல்லாம் நான் எடுத்து உண்ணும் போது வயிறு நிறையுதடி என் மகளே.. எனக்கு நீயும் உனக்கு நானும் ஊட்டி விட வேண்டும் நாளை என் அன்பு மகளே.
தலைப்பு: மகள் கவிதை
அழகான சோலையில் அங்கும் இங்கும் காணி நிலம்...!! ஆத்தா நீ வேர்வை சிந்தி அயர்ந்து உறங்கும் ஆலமரம்....!! கழனி சுத்தி கள்ளிச்செடி... நடுவே கொட்டகை துணைக்கு நாய் ஒன்னு கொத்தி பொறுக்க கோழி ஒன்னு இதுவே சொத்துனு சுத்தி வந்த என் தாயே...!!! ஆசைப்பட்டு பெத்தப் புள்ள ஆபிசர் ஆகனும்னு அனுதினமும் உழைத்து எனை ஆளாக்க உழைத்தவளே... கட்டிக்க சேலை இல்லை மாத்து துணிக்கும் வழியும் இல்லை ஆயிரம் தான் வலி இருந்தும் என்னை படிக்க வைத்தவளே...!! உன் வலியை மறைத்தாலும் நீ பெத்தப் புள்ளம்மா உன் சோகம் தெரியாத....!! கலங்காதே என் தாயே காலம் மாறும் தயங்காதே.. கல்லூரிக்கு நேரம் ஆச்சு பழைய கஞ்சி தண்ணீ ஊத்து தாயே குடித்து விட்டு போய்வாரேன். என் ஆசை மகனே உக்காந்துட்டு குடி தம்பி.. ஒத்த பிள்ளையை பெத்து சோத்துக்கு வலி இல்லாமா இப்படி கஞ்சி தண்ணீ உத்துறேனே இந்த பாவி... அய்யோ அய்யோ... அழாதே அம்மா மாளிகையில் பிறந்தாலும் நினைத்ததை வாங்க பணம் இருந்தாலும் இந்த கஞ்சி தண்ணீக்கு ஈடு ஆகுமா என் தாயே... காலம் கடந்தது தாய் கண்ட கனவு பலித்தது நடுவன் அரசில் வேலை...!! எங்கள் பசி தீர்ந்தது...!! மாளிகை உண்டாச்சு எல்லாம் கிடைத்தும் என் தாய் அந்த ஆலமரமும் அந்த கொட்டகையும் அந்த நாய் மற்றும் கோழியையும் விட்டு வரமுடியாமல் தவிக்கிறாள்... ஏனோ ஆலமரத்தின் அடியில் உறங்கும் என் தந்தையின் நிழலில் தன் காலத்தை கழிக்க என் தாய் விரும்புகிறாள் போல.. ஆயிரம் தான் இருந்தாலும் என் அம்மா கிராமத்து தாய் தான்.
தலைப்பு: கிராமத்துதாய் கவிதை
அழகியல் ஓவியத்தின் அந்தப்புரம் நீ... கணிதவியல் கோட்பாட்டின் காலச்சக்கரம் நீ.. மறுமொழி பேசாத தமிழ் மொழி நீ.. பழமொழி கூறாத புகழ்மொழி நீ.. உன்னிடம் உள்ளதடி என்னோட காதல்.. காலையில் உன் முகம் கண்டால் என் இரு கண்ணும் போதையில் பூக்கும்.. நீ என்ன வரம் வாங்கி பிறந்தாயோ என்னவளே. என்னுள் காதல் கிறுக்கை கொடையாக அளித்த பொன் உடலே....!! நீ என்ன வரம் வாங்கி பிறந்தாய்...!! உன் அழகான முகத்திற்கு அம்மு என்று பெயரிடவா.. அம்மு என்று அழைத்தால் என் இரு இதழும் கம்மு போல் ஒட்டி விடுகிறதே... என் பிறை கடலே.. பகலின் பால்நிலவே இராத்திரியின் இரகசியமே இந்த பிறப்பு நீ என்னோடு இனி எப்பிறப்பும் நான் உன்னோடு... ஓசையில்லா கிளிஞ்சல் நுனியில் ஒட்டி வந்த மரகதமே... ஆசையோடு கட்டி அணைக்கும் என்னழகு சித்திரமே இனி எப்பிறப்பும் நான் உன்னோடு.
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.
@Writing Siva✍️💕💕💕💕
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: