கணவன் மனைவி காதல் ஹைக்கூ கவிதைகள் தொகுப்பு

கணவன் மனைவி கவிதைகள் தொகுப்பு:


முன்னுரை:

கவிதைகள் எப்போதும் காதலின் நெருக்கத்தை, இனிமையை மற்றும் அதன் மயக்கத்தை கொண்டுவரும் ஒரு மந்திரம். காதல் என்ற வார்த்தை, உயிர்கள் இரண்டின் நெஞ்சுக்குள் ஓர் எதார்த்தமான உறவின் ஆழத்தைக் குறிக்கிறது. இங்கு, நம் கவிதை காதலின் இனிய தருணங்களை, ஆழமான பாசத்தை மற்றும் அதன் மர்மங்களை கவிதையாக எழுதியுள்ளேன். எமது கவிதைகள், காதலின் மெல்லிய உணர்வுகளை, கற்பனையான காட்சிகளை மற்றும் உண்மையான மனித மனத்தின் அன்பைக் கொண்டுள்ளது. இந்தக் கவிதை உங்கள் இதயங்களை தொடும் அற்புதமான வரிகளின் தொகுப்பாகும். வாருங்கள், காதலின் வெவ்வேறு பரிமாணங்களை ரசித்துக் கொண்டாட இந்த கவிதையைப் படிக்கலாம்.

கணவன் மனைவி  பற்றிய கவிதைகள்

மயக்கம் கவிதை

"என் கவிதைகளில் உன் மயக்கம் எனக்கும் உனக்கும் யுத்தமடி இழுத்து பிடிக்கும் சத்தமடி ."_சோழநாட்டுகவிஞர்

தென்றல் கவிதை

"பூவாய் தூரும் தூரலடி.. பூந்தென்றல் வீசும் வாசமடி.. . "_சோழநாட்டுகவிஞர்

வசியம் கவிதை

"அள்ளிக்கொடியே அறுசுவை உணவே கண்ணாடி பிம்பத்தில் உன்னை கண்டப்பொழுது கருவிழி வழியே காந்தமாய் பரவி.. இதயத்தில் காதலை சுரக்கும் மா இடை வசியக்காரி.. "_சோழநாட்டுகவிஞர்

சலிக்காத வசியம் கவிதை

"உன்னை எத்தனை கவிதையில் உவமை படுத்தி எழுதினாலும் வற்றாத கங்கையாய் காதல் வசியம் செய்கிறாய்.. "_சோழநாட்டுகவிஞர்

நான் கவிதை

"காதல் செய்ய பிறந்தவள் நீயென்றால் உன்னை கவிதை ஆக்க பிறந்தவன் நான் . "_சோழநாட்டுகவிஞர்

சினுங்கள் கவிதை

"ஜீவன் உள்ளவரை மீதி இன்றி எழுதுவேன் உன் காதல் சினுங்களை . .."_சோழநாட்டுகவிஞர்

காதலி கவிதை

"ஒரு வரி கவிதையாக என் உயிர் காதலி. . "_சோழநாட்டுகவிஞர்

பார்வை கவிதை

"ஆசை தீர உன்னிடம் பேசி அயர்ந்து தூங்கி விடியும் பொழுது உன் முகம் நித்தமும் பார்க்க வேண்டும்."_சோழநாட்டுகவிஞர்

தங்க நிலவு கவிதை

"எத்தனை நளினம் என் வீட்டு மயிலுக்கு தத்தி ஓடும் தங்க நிலவு என் மனைவி. "_சோழநாட்டுகவிஞர்

பிறவி கவிதை

"இரு மனதின் உள்ளே எத்தனை உணர்வுகள் அத்தனையும் தீர்க்க ஒரு பிறவி போதுமா?."_சோழநாட்டுகவிஞர்

சோகம் கவிதை

"சிட்டெறும்பாய் ஓடும் வெள்ளை முத்துக்கள் அவளின் சோகத்தை சுமந்து செல்கிறது. "_சோழநாட்டுகவிஞர்

மறுபிறவி கவிதை

"மீண்டும் பிறக்க வேண்டும் உன் கணவனாக இல்லை உன் முதல் குழந்தையாக? சம்மதிப்பாயா? ."_சோழநாட்டுகவிஞர்

மெளனம் கவிதை

"நிலவு தனிமையில் விடப்பட்ட போது கண்ணீர் பால் ஆனது ! மெளனம் பெண் ஆனது "_சோழநாட்டுகவிஞர்

உடை கவிதை

"சாதாரண உடைகள் என்று ஏதும் இல்லை என்னவள் உடுத்திய அனைத்து உடைகளும் அவள் பெண்மையை காத்து நின்றது .."_சோழநாட்டுகவிஞர்

உதவி கவிதை

"ஏதும் உதவிகள் என்றால் அவள் கண்கள் மட்டும் முதலில் ஓடிவரும் பிறகு அவளே வருவாள் "_சோழநாட்டுகவிஞர்

உறவு கவிதை

"கணவன் மனைவி உறவு என்பது கப்பல் பயணம் போன்றது மேடும் வரும் பள்ளமும் வரும் மெதுவாய் நகர்ந்து செல்ல வேண்டும் "_சோழநாட்டுகவிஞர்

இனைப்பு கவிதை

"வறண்ட வயலையும் குளிர்ச்சியான நதியையும் இணைக்க மழை வந்தது என்னவளும் என் வாழ்வில் அப்படித்தான் வந்தாள் ."_சோழநாட்டுகவிஞர்

போராட்டம் கவிதை

"ரோஜாக்கள் எல்லாம் போராட்டம் செய்கிறது அதிகாலை என்னவள் முகம் பார்க்க வில்லையாம்  "_சோழநாட்டுகவிஞர்

தாரம் கவிதை

"தாயின் ஈரத்தை தாரமாய் கொண்டு வந்தவளே என் தவிப்பின் ஓசை அறிந்தவள் நீ தானே இப்படி தவிக்க விடலாமா? . "_சோழநாட்டுகவிஞர்

வாழ்க்கை கவிதை

"கண்ணாடி பிம்பத்தில பாயுதடி உன் பார்வை பருவகுயில் அலங்காரம் மேயுதடி என் உணர்வை நெஞ்சில் தீ மூட்டி நெத்தியில வேர்வை சொட்ட வனப்பான சோலை ஒன்னு பொசுக்குனு போகுதடி. வடைக்கு காத்து நின்ன காகம் போல் என் வாழ்க்கை ஆனதடி."_சோழநாட்டுகவிஞர்

விழிப்பார்வை கவிதை

"மினுக்கட்டாம் பூச்சியை பார்க்கும் பொழுதுகள் யாவும் அவளின் விசித்திரமான விழி பார்வை என்னுள் சூழ்ந்து கொள்கிறது "_சோழநாட்டுகவிஞர்

தங்கம் கவிதை

"தங்க ஆபரணங்கள் ஏதும் தேவை இல்லை என் தங்க வெண்ணிலாவுக்கு. .. "_சோழநாட்டுகவிஞர்

பெண்நிலவு கவிதை

"நீண்ட இருசக்கர வாகன பயணம் இடையில் கூட்ட நெரிசல் பின்னாடி பார்ப்பதற்கு கண்ணாடி பார்த்தேன் சட்டென்று பெண் நிலவு ஒன்று என் கண்ணை பார்த்து கண் அடித்தது என் வாகன கண்ணாடியில் "_சோழநாட்டுகவிஞர்

கோவம் கவிதை

"எதிரும் புதிருமாக நானும் அவளும் ஒரு இருபது நிமிடங்கள் இருந்தோம் என்ன நினைத்தாலோ தோசை மாவு என் முகத்தில் வெந்தது"_சோழநாட்டுகவிஞர்

மனைவி கவிதை

"எல்லோரும் இருக்கலாம் அழகு தான் ஆனால் இவள் இருந்தால் தான் எனக்கு பேரழகு"_சோழநாட்டுகவிஞர்

கண்மணி கவிதை

"எனக்காக பிறந்தவள் நீ உன் கண் பார்வை நான் சுவாசிக்கும் தீபம்"_சோழநாட்டுகவிஞர்

தீராத காதல் கவிதை

"ஏனோ உன் மீது மட்டும் ஏனடி எனக்கு இவ்வளவு காதல்."_சோழநாட்டுகவிஞர்

உயிர் கவிதை

"பசியார நீ வேண்டும் என்னோடு வருவாயா என் உயிரே "_சோழநாட்டுகவிஞர்

நினைவு கவிதை

"எந்தன் உரையாடல் உன் நினைவுகள் மட்டும் மறுசுழற்சி செய்யும்."_சோழநாட்டுகவிஞர்

ஏக்கம் கவிதை

"ஏனோ சில நாட்களாக உன் ஏக்கம்மாக இருக்கிறது "_சோழநாட்டுகவிஞர்

நிகழ்வு கவிதை

"என் வாழ்வின் அனைத்து நிகழ்வுக்கும் உன் புன்னகையே சான்று."_சோழநாட்டுகவிஞர்

துணிவு கவிதை

"ஆயிரம் உறவுகள் மத்தியில் நீ மட்டும் ஏனடி என்னோடு வாழ துணிந்தாய்"_சோழநாட்டுகவிஞர்

முகம் கவிதை

"எனக்கான ஏக்கம் உன்மீதானது நீ ஒரு முறை முகம் சுழித்தால் நான் பலமுறை ஏங்குகிறேன்."_சோழநாட்டுகவிஞர்

விருப்பம் கவிதை

"வெற்றியோ தோல்வியோ நான் உன்னோடு மட்டுமே வாழ்ந்து சாய விரும்புகிறேன்"_சோழநாட்டுகவிஞர்

வாசம் கவிதை

"காற்றோடு கலந்து வரும் உன் வாசம் இப்பிரபஞ்சத்தின் பேரானந்தம்"_சோழநாட்டுகவிஞர்

அவளுடன் கவிதை

"அவள் அழகு என்னை வசியம் செய்யும் நான் மயில் தோகை விரித்து வருடுவேன்"_சோழநாட்டுகவிஞர்

தேன் கவிதை

"ஊத்து நீர் ஊற்றி பூவின் தேன் அருந்தலாமா"_சோழநாட்டுகவிஞர்

பட்டாசு கவிதை

"ஆயிரம் வாலா பட்டாசு போல் வெடிப்பவளே உன் காதல் பட்டாசு எப்போது வெடிப்பாய்."_சோழநாட்டுகவிஞர்

வாசம் கவிதை

"உன் கூந்தல் வாசம் வீசும் காற்று என் நாசியில் சுவாசம் வீசுதடி."_சோழநாட்டுகவிஞர்

பன்னீர் பூக்கள்  கவிதை

"வெள்ளை மலர் தோட்டம் பூத்து குலுங்கும் தாமரையே நீ பன்னீர் பூக்கள் பூப்பது எப்போது ."_சோழநாட்டுகவிஞர்

இனிய பூச்சரம் கவிதை

"இனிப்பான நறுமுகையே இனிய பூச்சரம் பூண்டவள் என் இதயத்தில் நீ பூப்பது எப்போது?"_சோழநாட்டுகவிஞர்

நகரும் நட்சத்திரம் கவிதை

"என் அன்பு மனைவியே ஆசை துணைவியே நீ என்னுள் நகரும் நட்சத்திரம்"_சோழநாட்டுகவிஞர்

விளையாட்டு கவிதை 

"சித்திரம் பேசுதடி சின்ன சிறுங்கிளியே தை பொங்கல் மஞ்சள் நீர் ஊற்றி விளையாடமா?"_சோழநாட்டுகவிஞர்

சோகம் கவிதை

"ஆயிரம் சோகம் வந்தாலும் சிரித்துக்கொண்டே வரவேற்றாள் என் மனைவி"_சோழநாட்டுகவிஞர்

அவளுக்கு யார் கவிதை

"தனி மரமாய் வந்து இன்று குடும்பத்திற்கு நிழல் தருகிறாள் தனியே நிற்கும் அவளுக்கு என்னை விட்டாள் யார்"_சோழநாட்டுகவிஞர்


வெற்றிக்கான பொன்மொழிகள்

அன்பு கவிதை

"வாழ்வில் வெற்றி பெற நித்தமும் உற்றார் உறவினர் கூட அன்பு செலுத்துங்கள்"_சோழநாட்டுகவிஞர்

தோல்வி கவிதை

"தோல்வியில் துவண்ட பொழுதுகள் எல்லாம் என்னவள் தட்டி கொடுக்க தவறியது இல்லை"_சோழநாட்டுகவிஞர்

  • தமிழ் ஹைக்கூ கவிதைகள் 
  • தமிழ் வாழ்வியல் கவிதைகள் 
  • தமிழ் இளமை கவிதைகள் 
  • தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள் 
  • தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள் 
  • தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள் 
  • சோழநாட்டு கவிஞரின் கவிதைகள் 

முத்து கவிதை

"சிற்பிக்குள் கிடக்கும் முத்துப்போல் எனக்குள் கிடக்கிறாள் என்னவள் முத்தாக"_சோழநாட்டுகவிஞர்

கோவம் கவிதை

"கொடிய விஷம் கோவம் தான் இதை யார் சேலையும் வீசாதீர்கள்"_சோழநாட்டுகவிஞர்

அரிசி கவிதை

"அங்காடி அரிசியும் அன்பாய் மணக்கிறது என்னவள் பண்பால்"_சோழநாட்டுகவிஞர்

ரோஜா கவிதை

"நித்தமும் எனக்காக எங்கள் வீட்டில் பூக்கும் ரோஜா என்னவள்"_சோழநாட்டுகவிஞர்

ஆறுதல் கவிதை

"ஆறுதல் சொல்ல மட்டும் ஆள் இருந்து விட்டால் நெடுங்கடலையும் நொடியில் கடக்கும் சக்தி பிறக்கும்"_சோழநாட்டுகவிஞர்

மூன்றாம் பிறை கவிதை

"தேய்பிறை போல் நகர்ந்து செல்லும் என் வாழ்வுக்கு வளர் பிறை போல் வந்தாள் என் மனைவி மூன்றாம் பிறையாக"_சோழநாட்டுகவிஞர்

வெற்றி கவிதை

"வெற்றி வரும் போது எல்லாம் மெளனம் ஆகிறேன் "_சோழநாட்டுகவிஞர்

முடிவு

காதல் என்றால் என்ன எனும் கேள்விக்கு யாருக்கும் முழுமையான பதில் கிடையாது. ஆனால், இந்தப் பின்வரும் கவிதை காதலின் மாயம், இனிமை, மற்றும் அதனுடைய ஆழமான உணர்வுகளைச் சித்தரிக்கிறது. இதன் மூலம் காதலின் மெய்யான அழகையும், பாசத்தையும் நாம் உணர முடிகிறது. காதல் என்பது இரு இதயங்களின் இனிய சங்கமம். இக்கவிதை, அந்த இனிய உறவை அழகிய காட்சிகள் மற்றும் உணர்வுகளின் வழியாக, நமக்கு உணர்த்துகிறது. வாருங்கள், காதலின் ஆழமான உணர்வுகளை ரசித்துக் கொள்ளலாம்.

No comments:

Powered by Blogger.