ஒரு மனைவியின் அழகு மற்றும் புனிதம் கவிதைகள் தொகுப்பு:
முன்னுரை:
இந்த கவிதையில் காதலின் இனிமையை, அதனால் உருவாகும் நிலைகளைப் பற்றி விவரிக்கின்றேன். நம் மனதின் அழகிய உணர்வுகளை, அன்பின் புனித தருணங்களை, மற்றும் திருமணத்தின் மகிழ்வுகளை இத்தருணத்தில் பரிசளிக்கிறேன். புது வாழ்க்கையின் உள்நிலை, காதலின் உன்னதத்தை, மற்றும் மனதைத் தொட்டு உருக்கும் இளமையின் மழை போன்ற ரசனைகளை இக்கவிதை மூலமாக வெளிப்படுத்துகிறேன் .
இளமை பற்றிய கவிதைகள்
காதல் கவிதை
"அவள் அழகிய மீனாய் அவன் விழிகளுக்கு விருந்தாய் "_சோழநாட்டுகவிஞர்
தவிப்பு கவிதை
"ஒட்டி பிறந்த இரட்டையர் போல் பூவும் வண்டும் வெப்பக்காதல் தரும் இளம் சூட்டில் இரு உயிரும் வெந்து தணிந்தது "_சோழநாட்டுகவிஞர்
பேசும் கவிதை
"பெண் இதை தானே விரும்புவாள் இதை விட சந்தோஷம் வேறு இருக்கா இவ்வுலகில்"_சோழநாட்டுகவிஞர்
ஏக்கம் கவிதை
"அவன் நெஞ்சோரம் தலைசாய்த்து அவன் நெஞ்சு முடியில் கைகோர்த்து கையின் இடையே முகம் பதித்து அவனை ரசிப்பதில் தானே இவள் சுகம் சுருங்கி இருக்கு ."_சோழநாட்டுகவிஞர்
புதியவாழ்வு கவிதை
"ஆசைகள் நீர்விழ்ச்சியாய் வழிந்து ஓடினாலும் தீயாய் வெப்பம் பரவினாலும் அணைத்து அவள் முத்தமடியில் என் உள்ளம் புதிதாய் மலர்ந்தது . "_சோழநாட்டுகவிஞர்
சந்திப்பு கவிதை
"முதல் சந்திப்போ என்னவோ நீண்டு கொண்டே போகிறது அந்த அந்திவெயில் மந்தி பொழுதாய்."_சோழநாட்டுகவிஞர்
தாகம் கவிதை
"நித்தமும் ரசிக்க கற்று தந்தவளே என்று தான் தாகம் தனிப்பாய் "_சோழநாட்டுகவிஞர்
தவிப்பு கவிதை
"உயிர் காதலியே உன்னதமான இளந்திரளே உன் கண்கள் கவிப்பாடும் உன் புன்னகை இயல் பாடும் உன் நடை மொழி பழந்தமிழ் சுவைத்தேடும் அழகுக்கு அழகு கூட்டும் பத்து விரல் பனி மலரே மாசற்ற மாணிக்கமே கண்ணகியின் உயிர் வடிவே உன் மடிமீது சாய்ந்து உறங்க மனம் தவியாய் தவிக்கிறது ."_சோழநாட்டுகவிஞர்
தங்கசெழிப்பு கவிதை
"உன்னால் வாழ்கிறேன் வாழ்க்கை செழிப்பான சோலையில் பூத்து குலுங்கும் பூவை போல் செழிப்புடன் . "_சோழநாட்டுகவிஞர்
பார்வை கவிதை
"மெளனம் சில நிமிடங்கள் நாம் நினைக்காத பரிசையும் சட்டென்று பரிசலிக்கும் அவள் விழித்திரை பார்வை போன்று. ."_சோழநாட்டுகவிஞர்
வானவில் கவிதை
"நுட்பமான உணர்வை சத்தம்மின்றி பீச்சும் வானியல் அழகி அந்த வானவில்லாய் வந்து போவாள் சில நிமிடங்கள். "_சோழநாட்டுகவிஞர்
சுகர் கவிதை
"ஈரம் சொட்டும் இனியவளே இனிப்பான நறுமுகையே நீ ஊட்டும் இனிப்பால் எனக்கு உடம்பில் சுகர் நித்தம் கூடுதடி. "_சோழநாட்டுகவிஞர்
சிறை கவிதை
"காற்றோடு கலந்து வரும் உன் வாசனை பலமுறை என் இதயத்தை சிறைபிடிக்கிறது . "_சோழநாட்டுகவிஞர்
வனப்பு கவிதை
"பலரின் தூக்கத்தை சிறைபிடிக்கும் திறன் இளமை வனப்புக்கு உண்டு."_சோழநாட்டுகவிஞர்
புனிதம் கவிதை
"காதலில் மட்டுமே ஸ்பரிசம் புனிதமானது அதிலும் அவள் பார்வை புனித்திலும் புனிதம் . "_சோழநாட்டுகவிஞர்
மெளனம் கவிதை
"அவளிடம் மட்டும் என் கோவம் யாவும் மெளனம் ஆனது "_சோழநாட்டுகவிஞர்
வாழ்க்கை கவிதை
"நதிகள் வளைவுகள் இயல்பு வறுமையின் துயரங்கள் துவர்ப்பு செழுமையில் எளிமை நடப்பு கணவன் மனைவி என்பது இனிப்பு. "_சோழநாட்டுகவிஞர்
கேள்வி கவிதை
"கண்கள் மூலம் பூசும் வண்ணம் பெண்மை வளர்ப்பின் கேள்வி குறி. "_சோழநாட்டுகவிஞர்
மனைவி கவிதை
"அசராத அவள் பார்வை அடி மனதை வருடும் அசராத அவள் பேச்சு என் ஆயுளை கூட்டும் நித்தமும் நல்லதே சிறகடித்து பாடும் எங்கள் வீட்டு இளமை ராணி என் மனைவி "_சோழநாட்டுகவிஞர்
புதிர் கவிதை
"புதிர் போடுவாள் புதிருக்கு நயம் வீசுவாள் நயத்துக்கு நதி போல ஈரம் சூட்டு வாள் ஈரத்திற்கு இனிப்பான நேரம் சூட்டுவாள் நேரத்திற்கு அவளே காலம் தீட்டுவாள் காலத்தின் சோர்வுக்கு காதல் சூட்டுவாள் மொத்தத்தில் என்னை இயக்கும் மெழுகு சிலை என் மனைவி ."_சோழநாட்டுகவிஞர்
தென்றல் கவிதை
"ஒரு நொடி அணைப்பில் தென்றலின் சுகம் அறிந்தேன் வந்து அணைத்தது வாடைகாற்றா வசந்த காற்றோ நான் ஏதும் அறியவில்லை. "_சோழநாட்டுகவிஞர்
பிரபஞ்சம் கவிதை
"முதலில் பார்வையில் காதல் மலர்ந்தது இரண்டாம் பார்வையில் ஸ்பரிசம் ஆனது மூன்றாம் பார்வையில் மனைவி ஆனது இப்பிரபஞ்சம் எனக்கு அளித்த கொடையே "_சோழநாட்டுகவிஞர்
தங்கம் கவிதை
"என்னவள் முகம் ஜொலிக்கும் கண்ணாடி அவளிடம் தங்கமே தோற்று போகும். "_சோழநாட்டுகவிஞர்
பெண்நிலவு கவிதை
"என்னை சுற்றி வந்த பெண்நிலவை இன்று முதல் நான் சுற்றுவேன் "_சோழநாட்டுகவிஞர்
பாசம் கவிதை
"அவளிடம் மட்டும் பாசம் பீச்சி அடிக்கிறது "_சோழநாட்டுகவிஞர்
மனைவி கவிதை
"என் இதயத்தின் பேரழகி என் உயிர் காதலி"_சோழநாட்டுகவிஞர்
தோரனை கவிதை
"ஆயிரம் வலிகள் இருந்தாலும் உன் தோரணை அழகானது"_சோழநாட்டுகவிஞர்
உணர்வு கவிதை
"உன்னிடம் மட்டுமே பேச துடிக்கும் என் இதயத்திற்கு அப்படி உன் மேல் என்ன உணர்வு"_சோழநாட்டுகவிஞர்
நினைப்பு கவிதை
"என் நினைவு எல்லாம் நீ தானே நினைப்பாய் இருக்கிறாய்"_சோழநாட்டுகவிஞர்
மனைவி கவிதை
"கடவுள் எனக்கு அளித்த கொடையில் என் மனைவியே சிறந்தவள்"_சோழநாட்டுகவிஞர்
இல்லம் கவிதை
"மெளனம் சூழ்ந்த இல்லத்தின் கலகலப்பு என் மனைவி"_சோழநாட்டுகவிஞர்
ஊக்கம் கவிதை
"சோர்வை நான் தீண்டும் போது ஊக்கத்தை பரிசு அளிக்கும் நாணல் மடல் என் உயிர் மனைவி"_சோழநாட்டுகவிஞர்
தூர் கவிதை
"எங்கள் வாழ்க்கையில் சோகம் சூழ்ந்த பொழுது மகிழ்ச்சியை தூர் எடுத்தவள் என்னவள்"_சோழநாட்டுகவிஞர்
ரிங்காரம் கவிதை
"விடாது பேசும் அவள் அழகு மொழியே என் வாழ்வின் ரிங்காரம்"_சோழநாட்டுகவிஞர்
ஏழ்மை கவிதை
"ஏதும் இல்லாது நின்ற பொழுது எனக்காய் வந்தவள் ஏழ்மையை தூரம் வீசிய இளவரசி என்னவள்"_சோழநாட்டுகவிஞர்
பெண் கவிதை
"பெண் மனைவியெனும் பட்டம் ஏற்ற பிறகு தாய் எனும் சாயல் தெரிய துவங்குகிறது "_சோழநாட்டுகவிஞர்
மிகவும் கவிதை
"அன்பால் என்னை மிகை படுத்தும் என் மனைவி ஆயுள் தீர மிகவும் மகிழ்வுடன் வாழ வேண்டும்"_சோழநாட்டுகவிஞர்
தூற்றல் கவிதை
"என்மீது தீங்கான விடையங்கள் பல ஊர் மக்கள் தூற்றினாலும் ஏதும் அறியாத குழந்தை போல் அன்பை கொடுத்தவள் என் மனைவி"_சோழநாட்டுகவிஞர்
தேற்றல் கவிதை
"நான் உடைந்து நொறுங்கிய பொழுது என்னை ஒட்ட வைத்தவள் என்னவள்"_சோழநாட்டுகவிஞர்
கண்ணாடி கவிதை
"என் வீட்டு கண்ணாடி என்னை விட அதிகமாய் என்னவளை படம் பிடித்தது"_சோழநாட்டுகவிஞர்
கண் கவிதை
"உன் கண்கள் நான் கண்ட முத்து உன் கருவிழிகள் என்னை மட்டும் படம் பிடிக்க வேண்டும்"_சோழநாட்டுகவிஞர்
சேலை கவிதை
"எல்லா நூல்களும் என்னையும் உன்னையும் ஒன்றோடு ஒன்று இனைக்கிறது"_சோழநாட்டுகவிஞர்
நேரம் கவிதை
"நேரம் நகர்ந்து கொண்டே போகிறது என் நினைவுகள் அவளை நோக்கி ஓடுகிறது"_சோழநாட்டுகவிஞர்
பலம் கவிதை
"நான் பெரியவன் என்று அகந்தை அவளின் அன்பின் பலத்தில் தோற்று போனது"_சோழநாட்டுகவிஞர்
கணவன்தவிப்பு கவிதை
"அவள் தூரத்தில் இருப்பதையே என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை"_சோழநாட்டுகவிஞர்
கணவன் மனைவி பொன்மொழிகள்
விட்டுக்கொடுக்காதே
"யாரிடமும் கணவன் மனைவி இருவரும் விட்டுக்கொடுக்காதீர்கள்" – சோழநாட்டு கவிஞர்
உறவை நம்புங்கள்
"கணவன் மனைவி உறவு என்பது உன்னதமான ஒன்று உங்கள் உறவை எப்போதும் நம்புங்கள்." – சோழநாட்டு கவிஞர்
- தமிழ் ஹைக்கூ கவிதைகள்
- தமிழ் வாழ்வியல் கவிதைகள்
- தமிழ் இளமை கவிதைகள்
- தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள்
- தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள்
- தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்
- சோழநாட்டு கவிஞரின் கவிதைகள்
தரிசனம்
"அவள் முகமே நான் நித்தமும் காணும் தரிசனம்." – சோழநாட்டு கவிஞர்
பார்வை
"அவள் பார்வை தான் நான் நித்தம் வாழும் வாழ்க்கை." – சோழநாட்டு கவிஞர்
காட்சி
"என்னவள் பெரிய பூந்தோட்டம் அதில் சில பூக்கள் நித்தமும் பிறக்கும்." – சோழநாட்டு கவிஞர்
ஜோடி
"கணவன் மனைவி இப்பிரபஞ்சத்தில் பிரம்மா படைத்த அற்புதமான ஜோடி." – சோழநாட்டு கவிஞர்
ரகளை
"உள்ளத்தில் வெளிப்படை தன்மை இருந்து விட்டால் வாழ்க்கை எப்போவும் ரகளையாக தான் இருக்கும்." – சோழநாட்டு கவிஞர்
திருநீறு
"அவள் கை வைத்து பூசி விடும் திருநீறே என் வாழ்வின் வெளிச்சம்." – சோழநாட்டு கவிஞர்
யாழ்
"நான் ரசித்த யாழ் அவள்." – சோழநாட்டு கவிஞர்
முடிவு
காதல் என்றால் என்ன எனும் கேள்விக்கு யாருக்கும் முழுமையான பதில் கிடையாது. ஆனால், இந்தப் பின்வரும் கவிதை காதலின் மாயம், இனிமை, மற்றும் அதனுடைய ஆழமான உணர்வுகளைச் சித்தரிக்கிறது. இதன் மூலம் காதலின் மெய்யான அழகையும், பாசத்தையும் நாம் உணர முடிகிறது. காதல் என்பது இரு இதயங்களின் இனிய சங்கமம். இக்கவிதை, அந்த இனிய உறவை அழகிய காட்சிகள் மற்றும் உணர்வுகளின் வழியாக, நமக்கு உணர்த்துகிறது. வாருங்கள், காதலின் ஆழமான உணர்வுகளை ரசித்துக் கொள்ளலாம்...
No comments: