சோழநாட்டுகவிஞர்
கடல் அற்புதம் கவிதை
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
September 24, 2023
அவளே அழகா! அலை அழகா ! வினா எழுப்புவதற்கு பதில் விடை கூறுங்கள்??? இந்தப் பிரபஞ்சத்தில் அழகி யார்!
பட்டு நாற்காலி பாதம் உடைந்தும் காதல் பருவம் பேசிய தருணம் அழகு யார் அவளா !அலையா!
சிவப்பு பொட்டு வைத்து கருஞ்சிவப்பு புடவை கட்டி காது மடல் காப்பு நீட்டி கருத்த குட்டி கால் வைத்தாள்
கடல் கரையில் அலையோ அவள் அழகை தீண்ட முதல் முறை படையெடுத்தது மெட்டி வரை இதழ் பதித்தது
வெயில் தீண்டாத பகுதியில் அவள் வனப்பை தீண்ட மீண்டும் உக்கிரமான படையெடுப்பு இடுப்பு வரை ஆக்கிரமித்தது
அவள் முழு அழகை தன் வேர்வையில் இதழ் பதிக்க நினைத்த அலைகள்
இம்முறை ஆழி அலையாய் உருமாறி அவள் முழு அழகையும் ருசித்து ரசித்து நுரைபொங்கி சீற்றம் தளர்த்தி மீண்டும் இதழ் பதித்தது
அவள் மெட்டியில் இப்போது சொல் யார் அழகு அவளா ? அலையா?
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
இந்த இயற்கை கொடையளித்த அனைத்தும் அழகே.
.
@Writing Siva✍️💕💕💕💕
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: