அத்தை மகள் அழகு மற்றும் புனிதம் கவிதைகள் தொகுப்பு

அத்தை மகள் அழகு மற்றும் புனிதம் கவிதைகள் தொகுப்பு:


முன்னுரை:

உலகின் அழகையும், காதலின் ஆழத்தையும் சித்தரிக்கும் கவிதை உங்களுக்கு ஒரு மனமெழுச்சியையும், ஆழ்ந்த உணர்வுகளையும் பரிமாறும். இக்கவிதை, ஒரு காதலனின் கண்களில் காணப்படும் காதலியின் அழகையும், அவளின் புன்னகையும், அவளின் அன்பும், அவள் மீது கொண்ட ஆழ்ந்த காதலையும் மிகுந்த சுவாரசியத்தோடு சித்தரிக்கின்றது .

அத்தை மகள் பற்றிய கவிதைகள்

யாரடி கவிதை

"யாரடி நீ செழித்து வளர்ந்த செங்கதிராய் கண்ணெதிரே நிற்கிறாய். "_சோழநாட்டுகவிஞர்

புன்னகை கவிதை

"மாவிலை தோரணம் போல் காது மடல் கண்ணுக்குள் இரு கருங்கடல் அதில் மிதக்கும் மீன்களாய் உன் புன்னகை..! "_சோழநாட்டுகவிஞர்

பொக்கிஷம் கவிதை

"வளைந்து ஓடும் வைகறை காற்று தட்பவெப்பம் கொண்ட ஊசி இலை காடு மொத்தத்தில் நீ ஒரு பொக்கிஷம்..! "_சோழநாட்டுகவிஞர்

தங்கத்தேர் கவிதை

"முந்தி பிந்தி ஆடி அசைந்து வரும் தங்கத்தேர் யாப்பா உன்னை கண்டதும் ஆசைகள் நீர்விழ்ச்சியாய் உள்ளே ஊறி நெஞ்சம் வழியே நகர்ந்து பள்ளம் நோக்கி பாய்கிறது. ."_சோழநாட்டுகவிஞர்

பொற்பாதம் கவிதை

"அத்தை மகளே அழகு ரதியே உன் பொற்பாதம் எப்போது என் நெஞ்சில் விழும்...! . "_சோழநாட்டுகவிஞர்

ஏக்கம் கவிதை

"ஏக்கம் தான் நிற்கதியாய் நிற்கும் என் மனசுக்கு ஓடையில் ஒழிந்து நிற்கும் தாமரை தண்டு போல் என்னுள் நீ மறைந்து இருக்கிறாய் எப்போது பூவாய் பூத்து மலர்வாய்."_சோழநாட்டுகவிஞர்

கருங்கூந்தல் கவிதை

"உன் கருங்கூந்தல் கண்ட போது மெய் சிலிர்த்தேன் உன் கருவிழியை கண்ட போது மயங்கி போனேன் வெப்பம் தீண்டாத உன் இளைமறை ஓவியத்தை எண்ணி எண்ணி ஏங்கி போனேன்...!

தவிப்பு கவிதை

"பெண்ணழகை ரசிக்க கத்துக்கொடுத்த சித்திரமே உன் சினுங்கள் பேச்சு நான் எழுத முடியாத புத்தகம்...! ."_சோழநாட்டுகவிஞர்

தங்க புத்தகம் கவிதை

"உன்னால் வாழ்கிறேன் வாழ்க்கை செழிப்பான சோலையில் பூத்து குலுங்கும் பூவை போல் செழிப்புடன் . "_சோழநாட்டுகவிஞர்

யுகம் கவிதை

"உன்னுள் எத்தனை மேடு பள்ளம் உன் வளைவு தெளிவுகளை ஆராய்ச்சி செய்ய இந்த யுகம் போதாது மீண்டும் ஒரு யுகம் வேண்டும். ."_சோழநாட்டுகவிஞர்

மனம் கவிதை

"காதலிக்க முகப்பொலிவு தேவையில்லை உன் மனப்பொழிவு தான் தேவை. "_சோழநாட்டுகவிஞர்

யாத்திரை கவிதை

"யாத்திரை பயணங்கள் சாஸ்திரம் கூறியது அந்த சாஸ்த்திரத்தில் அத்தை மகளே முன் நின்றால் "_சோழநாட்டுகவிஞர்

இழப்பு கவிதை

"யாருடனும் நெருங்கி பேசாதவள் முதல் முறை என்னிடம் நெருங்கி வந்து ஆறுதல் கூறினாள் நான் இருக்கிறேன் கலங்க வேண்டாம் என்று . "_சோழநாட்டுகவிஞர்

உறவு கவிதை

"எல்லோரும் விரும்புவது உன்மையான உறவைத்தான் அதில் முன்னே சாட்சியாய் நிற்பது என் அத்தை மகளே. ."_சோழநாட்டுகவிஞர்

அன்பு கவிதை

"அவளுடன் முழுமை பெற்றது என் அன்பு என் வாழ்வில் வசந்தம் வீச வந்த வனப்பு சோலை அவள் . "_சோழநாட்டுகவிஞர்

காதல் கவிதை

"மஞ்சள் அரைச்சு பூசி மணக்கும் பொட்டு வைத்து சினுங்கி அவள் சிரிக்க காதல் உள்ளத்தில் சிதறாமல் இருக்குமா? "_சோழநாட்டுகவிஞர்

சொத்து கவிதை

"எனக்காய் பிறந்தவள் என்னருகில் வளர்ந்தவள் என் மாமன் வீட்டு சொத்து என் அத்தை மகள். "_சோழநாட்டுகவிஞர்

உறவு கவிதை

"உறவுக்கு தோள் கொடுத்தவள் உரிமைக்கு குரல் கொடுத்தவள் தன் உயிரையே எனக்காக கொடுத்தவள் வேறு யாரும் இல்லை என் அத்தை மகளே . "_சோழநாட்டுகவிஞர்

புதிர் கவிதை

"அவள் கற்பூர கண்ணும் காந்தமாய் வீசும் வாசமும் உள் மனதில் ஏதோ பன்னுது அது காதல் எனும் கோட்டை மெல்லமாய் தீண்டுது "_சோழநாட்டுகவிஞர்

தாவணி கவிதை

"தாவி பார்க்கும் தூரத்தில் அவள் இருந்தாலும் அவள் தாவணி என்னை தடுக்கிறது. ."_சோழநாட்டுகவிஞர்

யுத்தம் கவிதை

"அவளுக்காக மட்டுமே ஏங்கும் என் மனம் அத்தை மகள் பார்வை உள்ளத்தில் நித்தமும் யுத்தம் செய்யும் "_சோழநாட்டுகவிஞர்

நினைவு கவிதை

"பரிசலில் தவழும் துடுப்பும் என் மனதில் தவிக்கும் நினைவும் அவளுக்கானது "_சோழநாட்டுகவிஞர்

என்னுள் கவிதை

"மேகங்கள் கரைவது போல் மெல்லமாய் என்னுள் கரைகின்றாள் "_சோழநாட்டுகவிஞர்

மருத்துவம் கவிதை

"கோவம் தனிக்கும் மூலிகை மருத்துவம் என் அத்தை மகள் "_சோழநாட்டுகவிஞர்

வாழ்க்கை கவிதை

"நேசிக்க அவளும் சுவாசிக்க காற்றும் போதும் என் வாழ்க்கைக்கு "_சோழநாட்டுகவிஞர்

அவள் கவிதை

"என் இதயத்தில் ஊறல் போட்டு வாழ்பவள் அவள் ஆம் அவளே என் அத்தை மகள்"_சோழநாட்டுகவிஞர்

தோரனை கவிதை

"கம்பீரமான அவள் நடையும் மென்மையான அவள் பேச்சும் அவள் தோரனையை தூக்கி பிடிக்கிறது"_சோழநாட்டுகவிஞர்

உள்ளுணர்வு கவிதை

"என் இரத்தம் அவள் உடம்பில் ஓடுகிறது அவள் என் அத்தை மகள் தானே அதனால் தான் என்னவோ என் உள்ளுணர்வை மென்மையாக புரிந்து கொள்கிறாள்"_சோழநாட்டுகவிஞர்

வசியம் கவிதை

"அவளின் சிரிப்பு என்னை வசியம் செய்யும் ஓவியம்"_சோழநாட்டுகவிஞர்

முத்து கவிதை

"ஆயிரம் முத்துக்கள் மத்தியில் அவள் மட்டும் நிலவை போல் ஜொலிக்கிறாள்"_சோழநாட்டுகவிஞர்

இல்லம் கவிதை

"என் இல்லத்தின் முகப்பு வடிவம் நானும் அவளும் அமர்ந்து பேசிய நினைவுகளை சுமந்து நிற்கிறது"_சோழநாட்டுகவிஞர்

ஊக்கம் கவிதை

"எனக்கான ஊக்கம் அவளிடம் இருந்து அவள் அன்பை பெறுவதையே மையமாக கொண்டு நகர்கிறது"_சோழநாட்டுகவிஞர்

தூர் கவிதை

"என் மனதில் ஊறும் சோர்வை நித்தமும் தூர் எடுப்பவள் அவளே "_சோழநாட்டுகவிஞர்

துணிவு கவிதை

"அவளின் துணிவில் இந்த வானம் கூட வசைப்படும்"_சோழநாட்டுகவிஞர்

பூக்கள் கவிதை

"பூக்களின் மென்மையை இவளிடம் கண்டேன்"_சோழநாட்டுகவிஞர்

பெண் கவிதை

"அத்தைக்கு மகளாய் எனக்கு மனைவியாய் என் பிள்ளைக்கு தாய்மார் இவளிடம் எத்தனை குணங்கள்"_சோழநாட்டுகவிஞர்

ரட்டி கவிதை

"வெள்ளம் சூடும் மேவு ரொட்டி தின்னையோரம் ரசித்தாள் சிரித்தாள்"_சோழநாட்டுகவிஞர்

முதல் கவிதை

"அத்தை மகள் என்பதே நான் எழுதிய முதல் கவிதை"_சோழநாட்டுகவிஞர்

பரிசுத்த மனம் கவிதை

"பிரம்மன் படைப்பில் இவளிடம் மட்டுமே பரிசுத்த மனதை நுகர்ந்தேன்"_சோழநாட்டுகவிஞர்

கண்ணாடி கவிதை

"அவள் வீட்டு கண்ணாடி என்ன புண்ணியம் செய்ததோ அவள் புன்னகை நித்தமும் படம் பிடித்து கொள்கிறது"_சோழநாட்டுகவிஞர்

கண் கவிதை

"உந்தன் கண்ணில் எந்தன் உறவை கண்டேன் "_சோழநாட்டுகவிஞர்

சேலை கவிதை

"முதல் முறை உரிமை கூறினேன் அவள் எனக்கு என்று "_சோழநாட்டுகவிஞர்

பாசம் கவிதை

"எனக்காய் தன் வாழ்வை பரிசு அளித்தாள் பாசத்தின் நீட்சியாக"_சோழநாட்டுகவிஞர்

குறியீடு கவிதை

"அவள் கண் மூலம் பேசுவதே எங்கள் காதலின் முதல் குறியீடு"_சோழநாட்டுகவிஞர்

அவளின் சிரிப்பு கவிதை

"முத்துக்கள் சிதறி ஓடியது என் அத்தை மகள் முதல் சிரிப்பில்"_சோழநாட்டுகவிஞர்


உறவு பெண் பொன்மொழிகள்

விட்டுக்கொடுக்காதே

"யாரிடமும் உரியவளை விட்டுக்கொடுக்காதே" – சோழநாட்டு கவிஞர் 

உறவை நம்புங்கள்

"உறவுக்குள் ஆயிரம் துன்பம் வந்தாலும் அவர்கள் உள்ளத்தின் உணர்வை நம்புங்கள்." – சோழநாட்டு கவிஞர் 

  • தமிழ் ஹைக்கூ கவிதைகள் 
  • தமிழ் வாழ்வியல் கவிதைகள் 
  • தமிழ் இளமை கவிதைகள் 
  • தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள் 
  • தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள் 
  • தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள் 
  • சோழநாட்டு கவிஞரின் கவிதைகள் 


தரிசனம் 

"அத்தை பெத்த அழகு ரதியே உன் தரிசனம் கிடைப்பது எப்போது." – சோழநாட்டு கவிஞர் 

பார்வை 

"அவள் பார்வை என்னை உசுப்பி எழுப்பும் சங்கின் ஒலி." – சோழநாட்டு கவிஞர் 

காட்சி

"அவள் பூக்களை பரிக்கிறாள் நான் அவளை காட்சியாய் பார்க்கிறேன்." – சோழநாட்டு கவிஞர் 

ஜோடி

"எனக்காய் படைக்க பட்டவள் அவள் அவளே என் ஜோடி." – சோழநாட்டு கவிஞர் 

ரகளை 

"பச்சை மண்ணும் மாளிகை ஆகும் அவள் செய்யும் ரகளையில்." – சோழநாட்டு கவிஞர் 

பூச்சரமே 

"அவளின் பூ வாடை நான் நித்தம் சுவாசிக்கும் பூச்சரம்." – சோழநாட்டு கவிஞர் 

அத்தைமகள் 

"நான் ரசித்த முதல் குழந்தை அவள்." – சோழநாட்டு கவிஞர் 

முடிவு

இக்கவிதைகள், காதலின் மெல்லிய நிழல்களில் திளைக்கும் உணர்வுகளை வெளிப்படுத்துகிறது. காதலியின் அழகை, அவளின் அன்பை, அவள் மீது கொண்ட நம்பிக்கையை மெல்லிய வார்த்தைகளால் கூறும் இக்கவிதை, ஒவ்வொரு வாசகனின் மனதிலும் ஒரு தனி இடத்தை பிடிக்கும். இந்த காதல் வரிகள், உங்கள் இதயத்தை உருக வைக்கும் என்று நம்புகிறேன்

No comments:

Powered by Blogger.