சோழநாட்டுகவிஞர்
தமிழ் காதல் கவிதைகள்
Introduction:
தமிழ் காதல் கவிதைகள் : தாய்வீடு இந்த பதிவில் பதிவு செய்த கவிதைகளின் தலைப்பு 1.இனிப்பான இளஞ்சோலை 2.மாவீரர் தினம் 3.களிப்பில் தேன் 4.இளந்தளீர் 5.அப்பா பாசம் 6.தாய்வீடு 7.மகளின் சாயல் 8.காதல் மலைச்சாரல் 9.ஆசை காதலியே 10.அதியச மெட்ரோ 11.இரவின் மகிழ்ச்சி 12.என்னுயிர் ஓவியம் 13.காதல் கிறுக்கல்கள் வாருங்கள் கவிதையை காண்போம்
Admin_Siva
December 1, 2023
இனிப்பான இளஞ்சோலை அடியே அன்னக்கொடி அசைந்து ஆடி போறதெங்கே ஆசை மாமன் பார்ப்பேனு அரும்பு பூ தலையில் வைத்து மயில் தோக விரித்தது போல் தாவி தாவி போறதெங்கே கருப்பு ஒவியமே கரிசக்காட்டு காவியமே கரும்பு காட்டுக்குள் மயில் ஒன்னு காத்து வீச போறதெங்கே தாவணி தள தளக்க தரணி யெல்லாம் மனமனக்க பட்டத்து ராணி தேகம் எல்லாம் பள பளக்க போறதெங்கே!! செழிப்பான இளஞ்சோலை மிதப்பான பனிச்சோலை இதழுக்கு இன்பம் ஊட்டி இமைக்காமல் போறதெங்கே எங்க வேன போய்க்கடி!! பெரிய கோவில் பக்கம் மட்டும் போய்விடாதே சிலை வடிக்கும் சிற்பி யெல்லாம் உந்தன் நகல் கேட்டு படையெடுப்பான் எனக்குனு பிறந்தவளே சிற்பியை வெல்ல படைக்கு நான் எங்க போவேன்.
தலைப்பு: காதல் கவிதை
இளந்தளிர் பின்பு வராது இளம் வயது இன்றே வா என்னருகில் .. நிலவாய் நீ இருக்க நினைவாய் நான் இருக்க ஆசை அலைமோத அந்தரங்கம் தடுமாற வற்றாத நீரும் வட்டமிட்டு மிதந்து வர பின்பு வராது இளம் வயது இன்றே வா அனுபவிக்க... ஆசை இருந்தும் அந்தரங்க மோகம் இருந்தும் இளந்தளிர் தேகம் இருந்தும் இளைப்பாற மடி இருந்தும் இளமை கொதிக்குதடி இமை மூட தவிக்குதடி பின்பு வராது இளம் வயது இன்றே வா அனுபவிக்க... மெல்லமாய் நீ தீண்டிய தேகம் மெல்லாம் செல்லமாய் நீ தழுவிய தாகம் மெல்லாம் உடலின் உச்சத்தில் இயற்கை விவசாயம் செய்யுதடி அறுவடைக்கு அழைக்கின்றேன் இளம் வயது பின்பு வராது இன்றே வா அனுபவிக்க.
தலைப்பு: காதல் கவிதை
அப்பா உனக்கு என்மேல் ஏன் இவ்வளவு பாசம்.. கொட்டும் மழையில் கொட்டடியில் நான் பிறந்த பொழுது பட்டொளி வீச புன்னகை பூக்களை உதிர்த்து ... உறவுக்கு இனிப்பு வழங்க துடித்த போது பத்து மாதம் நீ சுமக்காத கடனை வானுக்கும் பூக்கும் குதித்து மகிழ்ச்சியை உதிர்த்த பொழுது ஏன் இவ்வளவு பாசம் என்மேல் உனக்கு என்று வினா தோன்றியது... ஏன் அப்பா என்மேல் இவ்வளவு பாசம்.
தலைப்பு: காதல் கவிதை
தாயின் வயிற்றில் மீண்டும் உதிக்க வேண்டும்... தங்க தாரகையாய் மீண்டும் உதைக்க வேண்டும்.. கவலைகள் மறந்து கருவறையில் உறங்க வேண்டும்... தாயின் அரவணைப்பில் மகிழ்ச்சியில் பிறக்க வேண்டும்..
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: