சோழநாட்டுகவிஞர்
தமிழ் காதல் கவிதை
Introduction:
இந்த கவிதை காதல் அழகியல் பற்றியது
Admin_Siva
September 28, 2023
சண்டை.. கோவம்.. பாசம்.. அன்பு.. ஆறுதல்... சிரிப்பு... காமம்... ஊடல்.. இதில் எது என்றாலும் சம்மதம் ... உனக்காக என்றால்.. களிப்பு மிகுதியில் காதல் கசந்து.... இனிப்பு மிகுதியில் இதழ் மடிந்து.. விழிக்கும் பார்வையில் சுகம் கனிந்து... உன் மொழு மொழு கன்னத்தில்!!! எந்தன் செவ்விதழ் கொண்டு.. சுவடு ஒன்று பதிக்க என் உள்ளம் உருகுதே உயிரே.. சட்டென்று உந்தன் கன்னம் கொடுடா பட்டென்று புதிய வரலாறு படைப்போம்.
தலைப்பு: காதல் கவிதை
அடியே அன்பே!! பெண் எனும் கூட்டத்தில் மனக்கும் மல்லிகையே !! அச்சு வெல்லம் போல உன் சிரிப்பு.. என் அடி மனச கேட்குதடி. மொத்தத்தையும் நான் இப்போது தந்திடவா!! மிச்சம் கொஞ்சம் வச்சுக்கிட்டு நீ சிரிக்கும் போது தந்திடவ!! சேலை கட்டும் நந்தவனமே நந்த வன கூட்டத்தில நான் மானாக வாழவ இல்லை நான் சிங்கமாக சீறவ... இயற்கையின் தட்பவெப்ப நிலையை தன்னுள் கொண்டவளே!!! என்னாலும் உன்னுள் நான் இருக்க ஆசையடி.
தலைப்பு: காதல் கவிதை
தேனாய் நீ வண்டாய் நான் கழுகாய் நீ தேனீயாய் நான் வாழ்கை எனும் பந்தத்தில் இணைந்த இதழ் ரசம் நீ... மணைவி என்று எண்ணி உன்னை ரசித்ததை விட... என் தாய் நிழலை உன்னில் கண்டு ரசித்தது அதிகம்... அதிகாலை தினமும் அலைபேசியில் முத்தம் ஆனால் எனக்கோ ... நேரில் இன்பம்.. உன் குரல் அசைவில் பாம்பு மயங்காமல் இருக்கலாம்.. நான் மயங்கியே போகிறேன்... காமம் எனும் வார்த்தை தரும் இன்பத்தை விட மாமா என நீ கூவும் ஓசை தரும் இன்பம் ரொம்ப இனிப்பானது.
தலைப்பு: காதல் கவிதை
உன்னால் ஏற்பட்ட பிரிவுக்கு ஆறுதல் தேடி பயணப்படும் என் வாழ்க்கை.... நிகழ்வுகள் ஆசையாக காதலித்த எனக்கு அல்லி மலர் கொடுத்தவளே!! நீ என்னுள் எவ்வளவு ஊடுறுவி இருக்கின்றாய் என கூறுகிறேன் கேள் !! முதல் முறையாக உன்னை பார்த்த இடம் முதல் முறையாக உன்னை ரசித்த இடம் முதல் முறையாக உன்னை தீண்டிய இடம் முதல் முறையாக உன்னை அனைத்த இடம் முதல் முறையாக உன்னை சண்டையிட்டு இடம் முதல் முறையாக உன்னை தாழி கட்டிய இடம் முதல் முறையாக உன்னோடு சாலையில் சென்ற இடம் முதல் முறையாக உன்னை கலவியிட்ட இடம் முதல் முறையாக உன்னோடு குளித்த இடம் எல்லாம் நிஜமாக எல்லாம் நிழல்லாக என்னோடு இருக்கிறது நீ மட்டும் ஏன்டி மண்ணோடு போனாய்??
தலைப்பு: காதல் கவிதை
அழகென்றும் அறிவென்றும் அந்தரங்க சிறப்பென்றும் கறுப்பென்றும் சிவப்பென்றும் பட்டத்து ராணி யென்றும் கவியென்றும் சிலையென்றும் கார்நிழல் ஓவியம் யென்றும் மலர்யென்றும் கொடியென்றும் மா இலை இதழ் யென்றும் தேன் யென்றும் சுவையென்றும் செந்தமிழ் இடையென்றும் பூ யென்றும் கனியென்றும் கொடி இடை நடையென்றும் அடையாளம் எத்தனை அனைத்திலும் சிறப்பு பெண்மை.
தலைப்பு: காதல் கவிதை
Conclusion:
பொத்தி வைத்த காதலும் காலமும் எப்பவும் சிறப்புத் தான்.
@Writing Siva✍️💕💕💕💕
எழுத்து சிவா✍️
Submit Your Favorite Quote
உங்களுக்கு கவிதை எழுத பிடிக்கும் என்றால் உங்கள் கவிதைகளை எங்களுக்கு அனுப்புங்கள்.
உங்களின் சிறந்த கவிதைகள் எங்கள் தளத்தில் பரிசுகளோடு பதிவு எற்றப்படும்.
அடுத்த பதிவில் உங்களுக்கு இன்பம் மூட்டும் இனிய கவிதைகளோடு சந்திக்கிறேன்
நன்றி வணக்கம்.
No comments: