வாலிப வயது கவிதைகள் தொகுப்பு:
முன்னுரை:
என் அன்பான உறவுகளே, உங்கள் வருகைக்கு என் இதயம் கனிந்து வரவேற்கிறோம். இந்த பதிவில், அழகிய வாலிப கவிதைகளின் தொகுப்பை உங்களுக்காக பதிவு செய்துள்ளோம். வாருங்கள், இளமை பொலிவின் கவிதைகளைக் கண்டு மகிழுங்கள்.
இளமை பற்றிய கவிதைகள்
காதல் வலையில் கவிதை
"கெண்டை மீன்கள் துள்ளி குதித்து போல் அவள் பாதம் குதித்தது...!
ஏதோ அறிய வகை மீன் என்று அருகில் சென்றேன்...!!
என்னை அறியாமல் எனக்கே வலையை விரித்து விட்டேன்..!!
அவள் கால் பட்ட ஏரியில்.. நான் வலையில் சிக்கி தவிக்கின்றேன்...
அவள் மெல்ல கடக்கின்றாள் கரையை நோக்கி நான் அவள் இல்லாது தவிக்கிறேன் வலையில் சிக்கி"_சோழநாட்டுகவிஞர்
அழகு கவிதை
"மேகங்கள் அவள் அழகை ஓவியம் தீட்டியது மின்னல்கள் அவள் அழகை காவியம் ஆக்கியது இளமை துதும்பும் இவள் வனப்பு நித்தமும் என்னை பைத்தியம் ஆக்கியது "_சோழநாட்டுகவிஞர்
நிழல் கவிதை
"தொடர்ந்து வரும் என் நிழல் அவள் இன்றி ஏங்கியது தென்றலாக ஓடிவந்து ஆட்டி வைத்தாள் என் நிழலை "_சோழநாட்டுகவிஞர்
சோலை கவிதை
"இளமை சோலையில் நித்தமும் ஆயிரம் பூக்கள் பிறக்கிறது அதில் சில பூக்கள் காதல் ஹைக்கூ படைக்கிறது. "_சோழநாட்டுகவிஞர்
மெளனம் கவிதை
"மெளனமாக நின்றேன் என்னருகில் வந்தாள் மெளனம் கலைத்தேன் விலகி சென்றால். "_சோழநாட்டுகவிஞர்
வன்முறை கவிதை
"பூக்களோடு சண்டையிடும் வண்டுகள் ஒரு நாளும் பூவின் தலையை அறுக்க வில்லை."_சோழநாட்டுகவிஞர்
காலம் கவிதை
"கண்கள் மூலம் பரவசம் அடையும் காலம் இளமை காலம் "_சோழநாட்டுகவிஞர்
கனவு கவிதை
"எனக்காய் பிறந்தவள் நெஞ்சும் என்ன என்ன கனவுகளோடு வாழ்ந்ததோ."_சோழநாட்டுகவிஞர்
வாலிப கவிதை
"வாலிபம் தான் வாழ்வின் துன்பத்தின் ஆடையை நீக்கி மகிழ்ச்சி என்னும் போர்வையை போற்றுகிறது. "_சோழநாட்டுகவிஞர்
பூக்கள் கவிதை
"சிலர் பூக்கள் மீது காதல் கொண்டு பூஞ்சோலையை உருவாக்கி மகிழ்கின்றனர் ஆனால் அந்த ஒத்த மகிழ்ச்சி பல உயிர்களை வாழ வைப்பது அவர்கள் அறிவது இல்லை."_சோழநாட்டுகவிஞர்
வேர் கவிதை
"இங்கே பூக்கள் சிரிக்கிறது வேர்கள் அழுகிறது இளமை சிரிக்கிறது முதுமை அழுகிறது. "_சோழநாட்டுகவிஞர்
கனவு கவிதை
"இளமையில் வறுமை காரணமாக பல கனவுகள் பிறந்தும் வாழ முடியாது தவிக்கிறது. "_சோழநாட்டுகவிஞர்
காலம் கவிதை
"தெற்கே வீசும் காற்றும் காலம் அறிந்து தான் வீசுகிறது உன் இளமை சோலையில் காலம் அறிந்து நடந்துக்கொள். "_சோழநாட்டுகவிஞர்
வனப்பு கவிதை
"பலரின் தூக்கத்தை சிறைபிடிக்கும் திறன் இளமை வனப்புக்கு உண்டு."_சோழநாட்டுகவிஞர்
சரித்திரம் கவிதை
"ஊடல் கூடல் நிகழ்வு வெறும் சாஸ்திரம் இல்லை சரித்திரம். "_சோழநாட்டுகவிஞர்
ஏக்கம் கவிதை
"மீசையோடு சண்டையிட ஆசை வந்தது அன்று தான் உணர்ந்தேன் என் இளமையின் ஏக்கத்தை. "_சோழநாட்டுகவிஞர்
திருட்டு கவிதை
"புதிய இடுகைகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன என் மீது காதல் படையெடுத்து ஏனோ அவர்களுக்கு தெரியவில்லை என்மனம் இளமை துதும்பும் ஒருவனால் முன்பே திருடப்பட்டது என்று"_சோழநாட்டுகவிஞர்
மடிமீது கவிதை
"கோவில் கோபுரங்கள் சாய்ந்து கிடந்தது என்னவள் மடிமீது. "_சோழநாட்டுகவிஞர்
வலி கவிதை
"எல்லோரும் ஏற்க முடியாது என் இளமையின் வலியை. "_சோழநாட்டுகவிஞர்
ஓவியம் கவிதை
"நான் ரசித்த முதல் ஓவியம் அந்த ஓவியத்தை தீட்டியவன் முதல் காதலியாக கூட அது இருக்கலாம்."_சோழநாட்டுகவிஞர்
வேர் கவிதை
"மலர்ந்து நிற்கும் பூக்களின் வலியை வேர்கள் அறியும் "_சோழநாட்டுகவிஞர்
திருமணம் கவிதை
"நீண்ட கால ஏக்கம் இளமை மறையும் முன்பே திருமணம் ஆக வேண்டும். "_சோழநாட்டுகவிஞர்
சீண்டல் கவிதை
"கடல் சீற்றம் வந்து கரையில் தஞ்சம் புகுந்தது நீர் மெல்லிய உணர்வுக்கு சீண்டல்கள் தேவைத்தான் "_சோழநாட்டுகவிஞர்
துள்ளல் கவிதை
"பரிச்சயம் இல்லை இருந்தாலும் கனவில் கண்ட முகம் ஏக்கமும் துள்ளலும் இதயத்தின் ஓரத்தில் "_சோழநாட்டுகவிஞர்
இனிப்பு கவிதை
"வாழ்க்கை இளமையில் இனிக்கும் முதுமையில் கசக்கும் இனிப்பாய் இருக்கும் போது ரசித்துக்கொள் "_சோழநாட்டுகவிஞர்
வலி கவிதை
"வாலிபம் தான் வலியை தாங்கும் "_சோழநாட்டுகவிஞர்
நேர்மை கவிதை
"நேர்மையாக இருக்க கற்றுக்கொள் வாலிபம் தீர்ந்த பின் நேர்மை சில உறவுகளை கொடுக்கும்"_சோழநாட்டுகவிஞர்
மெய் கவிதை
"இளமை மறைந்து போகும் வாலிபம் ஓடிப்போகும் உன்னத மெய் நிச்சயம் வெல்லும்"_சோழநாட்டுகவிஞர்
போரட்டம் கவிதை
"இளமையில் போராட மறந்து விடாதே அது முதுமையை கொள்ளும்"_சோழநாட்டுகவிஞர்
இலக்கு கவிதை
"இளமை ஒன்று தான் எதற்க்கும் ஏற்றது இலக்கை தீர்மானித்து நடை போடு"_சோழநாட்டுகவிஞர்
மெளனம் கவிதை
"யாரிடமும் உன் இளமை இலக்கை கூறாதே மெளனம் நீண்ட நகர்ந்து செல் "_சோழநாட்டுகவிஞர்
முயற்சி கவிதை
"இளமை சோதனைகள் நிறைந்த காலம் முயற்சியை மட்டும் கைவிடாதே"_சோழநாட்டுகவிஞர்
இலக்கீ கவிதை
"உனக்காக ஒருவரை தேர்ந்து எடு அவரிடம் மட்டுமே உன் இலக்கை கூறு "_சோழநாட்டுகவிஞர்
சோர்வு கவிதை
"சோர்வு உன்னை தீண்டும் தளர்ந்து விடாதே "_சோழநாட்டுகவிஞர்
பயணம் கவிதை
"இளமை பயணங்கள் அழகானவை அதை அனுபவிக்க மறக்காதே"_சோழநாட்டுகவிஞர்
அழகு கவிதை
"ஏற்றம் இறக்கம் இளமையில் அழகு "_சோழநாட்டுகவிஞர்
நிகழ்வு கவிதை
"ஓடிவரும் நீரின் அழகை ஏற்றம் இறக்கம் அறிந்து அது நகர்ந்து செல்லும் நிகழ்வை பார்"_சோழநாட்டுகவிஞர்
வறுமை கவிதை
"காலம் மாறிக்கொண்டே இருக்கும் இன்றைய வறுமை நினைத்து ஓர் இடத்தில் நின்று விடாதே"_சோழநாட்டுகவிஞர்
பாடல் கவிதை
"இறுக்கமான நேரங்களில் இளமைக்கு இனிப்பான பாடல்களை கேள்"_சோழநாட்டுகவிஞர்
உறுதி கவிதை
"இளமையில் ஓடி விளையாடு உடம்பை உறுதி படுத்திக்கொள்"_சோழநாட்டுகவிஞர்
இளமை கவிதை
"காரணம் இருந்தாலும் கலங்காதே இளமையில் யாவும் முடியும்"_சோழநாட்டுகவிஞர்
தூரம் கவிதை
"இளமையில் தூரமாக கடந்து செல்ல கற்றுக்கொள் முதுமை இனிப்பை கொடுக்கும்"_சோழநாட்டுகவிஞர்
சுகம் கவிதை
"இளமை தரும் சுகத்தை நொடிகள் கூட வீண் செய்யாதே"_சோழநாட்டுகவிஞர்
உதவி கவிதை
"முடிந்தவரை இளமையில் மற்றவர்களுக்கு உதவு "_சோழநாட்டுகவிஞர்
அனுபவம் கவிதை
"ஆலயங்கள் சென்று வா அனுபவங்கள் பெற்று வா"_சோழநாட்டுகவிஞர்
வெற்றிக்கான பொன்மொழிகள்
தன்னம்பிக்கை வெல்லும்
"தீராத முயற்சியை மட்டும் உன்னுடன் வைத்துக்கொள்" – சோழநாட்டு கவிஞர்
உங்களை நம்புங்கள்
"நீங்கள் முடியும் என்று நம்புங்கள், உங்கள் வாழ்வு முழுமை அடைந்து விடும்." – சோழநாட்டு கவிஞர்
- தமிழ் ஹைக்கூ கவிதைகள்
- தமிழ் வாழ்வியல் கவிதைகள்
- தமிழ் இளமை கவிதைகள்
- தமிழ் ஹைக்கூ இளமை கவிதைகள்
- தமிழ் மோட்டிவேஷன் கவிதைகள்
- தமிழ் தன்னம்பிக்கை கவிதைகள்
- சோழநாட்டு கவிஞரின் கவிதைகள்
உழைப்பு
"நித்தமும் உழையுங்கள் வாழ்வில் மேன்மை பெறலாம்." – சோழநாட்டு கவிஞர்
நேர்மை
"நேர்மை நித்தம் ஜொலிக்கும் ஒரு முறை வாழ்ந்து பார்." – சோழநாட்டு கவிஞர்
நாட்டியம்
"நீ ஆடிய நடனம் என்ன மயில் தோகை பிரித்து போல் உள்ளது." – சோழநாட்டு கவிஞர்
பால் மண்டலம்
"இயலாத செயல் இந்த பால் வெளி மண்டலத்தில் இனி தேனும் உண்டோ." – சோழநாட்டு கவிஞர்
வெளிச்சம்
"இரவின் துயரம் நீத்த பிறகு வெளிச்சம் புனிதமானது" – சோழநாட்டு கவிஞர்
நிலா
"தேய்யும் நிலவும் ஒருநாள் ஜொலிக்கும்." – சோழநாட்டு கவிஞர்
பருவம்
"பருவம் வந்த பறவைகள் பாதிக்கடல் நீந்த துணிந்தது." – சோழநாட்டு கவிஞர்
முடிவு
இந்த கவிதைகள் உங்கள் கனவுகளை அடையவும், வாழ்க்கையின் அழகை நேசிக்கவும் உங்களை ஊக்குவிக்கின்றன என்று நம்புகிறேன். நேர்மறையான மனநிலையினால் மிகுந்த மாற்றத்தை ஏற்படுத்த முடியும்! இளமையின் ஒளிவீசும் தருணங்களை கொண்டாடுங்கள், கவிதைகளில் திகழும் உணர்வுகளை அனுபவியுங்கள்.
Hi
ReplyDelete